பிரதேச அலுவலகம் - திருகோணமலை
வங்கி அலுவலர்கள் மற்றும் அரச அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணித் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகள் மீதான அண்மைக்கால மாற்றங்கள்" தொடர்பான இணைய வழிக்கருத்தரங்கு 2021 நவம்பர் 26 ஆம் திகதி நடைபெற்றது. வெளிநாட்டு செலாவணி ஒழுங்குவிதிகள் மீதான அண்மைக்கால மாற்றங்கள் தொடர்பிலான அறிவினை வழங்குவதே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். 145 அலுவலர்களின் பங்கேற்புடன் இணைய செயலியில் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணித் திணைக்களத்தின் மேலதிகப்பணிப்பாளர் திரு சதுற அரியதாஸ, உதவிப்பணிப்பாளர் திரு டி எல் லக்மால் மற்றும் உதவிப்பணிப்பாளர் திரு ஆர் எம் எஸ் பி ரத்னாயக்க வளவாளர்களாக இருந்தனர்.
திருகோணமலை வலயக் கல்வித் திணைக்களத்திலுள்ள பொருளியல் மற்றும் வணிகக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கையின் நிதியியல் முறைமை மற்றும் நாணயக் கொள்கைக் கட்டமைப்பு மீதான மத்திய வங்கியின் பங்களிப்பு தொடர்பான கல்விக் கருத்தரங்கு” 2021 பெப்புருவரி 25 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 13 ஆசிரியர்களும், 42 மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராக இருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “;டிஜிட்டல் நிதிசார் நிபுணத்துவம்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2021 ஓகத்து 05 ஆம் திகதி பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் 68 பேர் பங்கேற்றனர். வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செல்லிடத் தொலைபேசி ¬வங்கித்தொழில் செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு பள்ளிக்குடியிருப்பிற்கு அருகிலுள்ள மூன்று உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் (இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ஹற்றன் நேசனல் வங்கி) ஆதரவளித்தன.
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் வாகரை பிரதேசத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “பிரதேசத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இலக்காகக் கொண்ட நிதியியல் அறிவிடல்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2021 சனவரி 25ஆம் திகதி மட்டக்களப்பு, வாகரை பிரதேச அலுவலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 40 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராகவிருந்தார்.
மட்டக்களப்பிலுள்ள வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்களின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கை கொடுகடன் தகவல் பணியகமும் அதன் தொழிற்பாடுகளும்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 பெப்புருவரி 29ஆம் திகதி சண்சைன் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் 126 அலுவலர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தொழிற்பாட்டு முகாமையாளர் திரு. இந்திக்க திஸநாயக்க மற்றும் தொழிற்பாட்டு நிர்வாகி திரு. பாதிய விஜேநாயக்க வளவாளர்களாகச் செயற்பட்டனர்.
அரச திணைக்களங்கள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் சிறிய, நடுத்தர முயற்சியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் முயற்சியாளர்களுக்கான புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல், உள்ளூர் உற்பத்திக்கான வலுவான குறிநாமத்தினை நிறுவுதல் மற்றும் வாடிக்கையாளர் வலையமைப்பிற்கான சிறந்த வணிகத்தளத்தினை வழங்குதல் போன்றவற்றிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கை மத்திய வங்கியின் 70வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட வர்த்தகக் கண்காட்சி” 2020 மார்ச் 13ஆம் மற்றும் 14ஆம் திகதி திருகோணமலை நகர சபை வாகனத்தரிப்பிடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், ஏறத்தாழ 150 பங்கேற்பாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் திரு. ஜே.பி.ஆர். கருணாரத்ன, மேலதிகப் பணிப்பாளர் திரு. ஜே. எம். அமீர், திருகோணமலை பிராந்திய அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. க. பிரபாகரன், வங்கிகளின் பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
திருகோணமலையிலுள்ள வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதியியல் நிறுவனங்களின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கை கொடுகடன் தகவல் பணியகமும் அதன் தொழிற்பாடுகளும்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 பெப்புருவரி 28ஆம் திகதி ஜேகாப் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் 63 அலுவலர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் தொழிற்பாட்டு முகாமையாளர் திரு. இந்திக்க திஸநாயக்க மற்றும் தொழிற்பாட்டு நிர்வாகி திரு. பாதிய விஜேநாயக்க வளவாளர்களாகச் செயற்பட்டனர்.
திருகோணமலையிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “விசேட நிகழ்வுகளுக்கான கேக் தயாரித்தல்” தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 பெப்புருவரி 18 மற்றும் 19ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலக கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் 30 பெண் தொழில் முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஹந்துறட்ட மகளிர் அபிவிருத்தி சங்கத்தின் பயிற்றுனர் திருமதி டபிள்யூ. எம். தாமர ஹருணசீலி வளவாளராகச் செயற்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “போலி நாணயத்தாள்கள் மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2020 பெப்புருவரி 05 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் 52 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராகவிருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் கல்முனை பிரதேசத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “நிதிசார் நிபுணத்துவம்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2020 சனவரி 29ஆம் திகதி கல்முனை தமிழ் பிரதேச அலுவலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 93 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராகவிருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் கிரான் பிரதேசத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “நிதிசார் நிபுணத்துவம்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2020 சனவரி 29ஆம் திகதி கிரான் பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 65 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராகவிருந்தார்.
An awareness programme on “Financial Literacy, Marketing and Customer Service” organized by the Regional Office Trincomalee, Central Bank of Sri Lanka for SMEs & MEMEs in Batticaloa was successfully held on 24th January, 2020 at the YMCA, Batticaloa and 30 participants were participated for this programme. The resource person of the programme was Mr. K. Prabakaran, Regional Manager, Regional Office Trincomalee, Central Bank of Sri Lanka.
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “பொதியிடல் மற்றும் சுட்டுத்துண்டிடல் தொடர்பான நவீன தொழினுட்ப நிகழ்ச்சித்திட்டம்” 2020 சனவரி 23ஆம் திகதி மட்டக்களப்பு, வை.எம்.சி.ஏ கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் 90 தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் காலி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் திரு. எம். ஜி. பந்துல வளவாளராகவிருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் குச்சவெளி பிரதேசத்திலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “நிதிசார் நிபுணத்துவம்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2020 சனவரி 22ஆம் திகதி திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 50 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராகவிருந்தார்.
மட்டக்களப்பு பிரதேச பொலீஸ் அதிகாரிகளுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “பண மோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நீதியிடலிருந்து பாதுகாத்தல்” தொடர்பான பிராந்திய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்” 2019 அக்டோபர் 23ஆம் திகதி மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியின் நடைபெற்றது. இந்நிகழ்வில் 85 பொலீஸ் உத்தியோகத்தர்கள் பங்கேற்றதுடன் நிகழ்ச்சிக்கான வளப்பங்களிப்பு இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டிருந்து. திரு எம் எம் தாஸீம் - சிரேஷ்ட உதவி பணிப்பாளர், திரு என் பி ஐ என். குணவர்தன - சிரேஷ்ட உதவி பணிப்பாளர் மற்றும் டி திரு கே டி ஸ் என் அதுகோரலா - உதவி பணிப்பாளர் வளவாளராக செயற்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
அம்பாறையிலுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ' கை பை தயாரித்தல் தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று' 2019 ஒக்டோபர் மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் அம்பாறை சமூகமண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன், இதில் 62 பெண் தொழில்முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மகாவலி அதிகார சபையின் பயிற்றுனர் திருமதி கல்யாணி குணரத்ன வளவளாளராக செயற்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் காப்புறுதிக் கம்பனிகளின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “பண மோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நீதியிடலிருந்து பாதுகாத்தல்” தொடர்பான பிராந்திய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்” 2019 அக்டோபர் 22ஆம் திகதி மட்டக்களப்பு சன்னி பிஷ் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 117 அலுவலர்கள் பங்கேற்றதுடன் நிகழ்ச்சிக்கான வளப்பங்களிப்பு இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டிருந்து. திரு எம் எம் தாஸீம் - சிரேஷ்ட உதவி பணிப்பாளர், திரு என் பி ஐ என். குணவர்தன - சிரேஷ்ட உதவி பணிப்பாளர் மற்றும் டி திரு கே டி ஸ் என் அதுகோரலா - உதவி பணிப்பாளர் வளவாளராக செயற்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு தொழில் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஊழியர் சேமலாபம் நிதிய நடமாடும் சேவை" விசேட நிகழ்ச்சித் திட்டம் 2019 செத்தெம்பர் 06ஆம் திகதி மட்டக்களப்பு தொழில் திணைக்கள கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 ஊழியர் சேமலாபம் நிதிய பங்காளர்கள் பங்கேற்றதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேம நிதியத் திணைக்களத்தின் கண்காணிப்பாளர் திரு எ. ஜி. யு திலகரத்னே, மேலதிக கண்காணிப்பாளர் திரு ஜே.எம். அமீர், மட்டக்களப்பு தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் எ. தாஹிர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அம்பாறை பிரதேச செயலக பொது மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “படுகடனிலிருந்து பாதுகாப்பதற்கான அறிவினை பகிர்தல்” தொடர்பான நிகழ்ச்சித் திட்டம் 2019 செத்தெம்பர் 03ஆம் திகதி அம்பாறை பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100 பொது மக்கள் பங்கேற்றதுடன் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. என். ஏ. ஏ. விஜேசிறி வளவாளராகவிருந்ததுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “முயற்சியாளர்களின் அபிவிருத்தி மற்றும் நிதியியல் அறிவு” தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் 2019 செத்தெம்பர் 02ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 100 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுர பிரதேச அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. என். ஏ. ஏ. விஜேசிறி வளவாளராகவிருந்ததுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முயற்சியாளர்களை இனம்காணல் மற்றும் நிதி முகாமைத்துவம்” தொடர்பான நிகழ்ச்சித்திட்டம்” 2019 ஆகஸ்ட் 27ஆம் திகதி திருகோணமலை பிராந்திய காரியாலய கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 42 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் முகாமைத்துவ பயிலுனர் திரு. ஏ. எம். நிரோசன் ஆகியோர் வளவாளராகவிருந்தனர்.
உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் காப்புறுதிக் கம்பனிகளின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணி திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அந்நிய செலாவணி சட்டம்” தொடர்பான பிராந்திய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்” 2019 ஆகஸ்ட் 22ஆம் திகதி திருகோணமலை கிறின் காடன் விடுதியின் நடைபெற்றது. இந்நிகழ்வில் 45 அலுவலர்கள் பங்கேற்றதுடன் நிகழ்ச்சிக்கான வளப்பங்களிப்பு இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்து. திரு ஆர்.ஆர்.ஜெயரத்னே- பணிப்பாளர், திரு டபிள்யூ.எஸ். பிரசன்னா- பிரதிபணிப்பாளர் மற்றும் டி.பி.கபுருகே- சிரேஷ்ட உதவி பணிப்பாளர் வளவாளராக செயற்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் காப்புறுதிக் கம்பனிகளின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அந்நிய செலாவணி சட்டம்” தொடர்பான பிராந்திய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்” 2019 ஆகஸ்ட் 21ஆம் திகதி மட்டக்களப்பு கிறின் காடன் விடுதியின் நடைபெற்றது. இந்நிகழ்வில் 70 அலுவலர்கள் பங்கேற்றதுடன் நிகழ்ச்சிக்கான வளப்பங்களிப்பு இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்து. திரு ஆர்.ஆர்.ஜெயரத்னே- பணிப்பாளர், திரு டபிள்யூ.எஸ். பிரசன்னா- பிரதி பணிப்பாளர் மற்றும் டி.பி.கபுருகே- சிரேஷ்ட உதவி பணிப்பாளர் வளவாளராக செயற்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
கிண்ணியா பிரதேச செயலகத்திக்குப்பட்ட ஈச்சந்தீவு மற்றும் ஆலங்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் பொது மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட"முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019 ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஈச்சந்தீவு மற்றும் ஆலங்கேணி சமூகமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 96 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேசஅலுவலகத்தின் முகாமைத்துவப் பயிலுனர் திரு. ஏ. எம். நிரோசன் அவர்கள் வளவாளராகவிருந்தார்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாற்பண்ணையாளர்களுக்காக "சந்தைப்படுத்தல், கணக்கீடு மற்றும் புத்தகம் பதிதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று” இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 2019 ஆகஸ்ட் 02 ஆம் திகதி வை.எம்.சி.ஏ கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதில் 45 பாற்பண்ணையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு தேசிய கணக்காய்வு அலுவலக, கணக்காய்வு உத்தியோகத்தர் திரு. பத்மநாதன் செகுராஜ் வளவளாளராக செயற்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாற்பண்ணையாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “பால் சார்ந்த உற்பத்திகள் தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 ஜூலை 31 ஆம் திகதி வை.எம்.சி.ஏ கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் 47 பாற்பண்ணையாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. ரோஹித்த சுமனவீர வளவாளராகச் செயற்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாற்பண்ணையாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 ஜூலை 30 ஆம் திகதி மட்டக்களப்பின் களுவாஞ்சிக்குடியிலுள்ள சமூக மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 24 பாற்பண்ணையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராகவிருந்தார்.
An educational Seminar on “State of the Economy as Reflected in the Annual Report 2018” organized by the Regional Office Trincomalee, Central Bank of Sri Lanka with the collaboration of the Center for Banking Studies of Central Bank of Sri Lanka for the University Students of South Eastern University was successfully held on 25 July 2019 at the auditorium of South Eastern University, Ampara. 342 University Students participated in this programme. The resource persons of the programme were Mr. M. Kesavarajah, Senior Economist, Economic Research Department, Central Bank of Sri Lanka and Mr. K. Prabakaran, Regional manager, Regional Office - Trincomalee, Central Bank of Sri Lanka also participated.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தரத்தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "திருகோணமலையின் சிறிய மற்றும் நடுத்தரத்தொழில் முயற்சியாளர்களை நோக்கிய வியாபார ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம்" 2019 யூன் 27 ஆம் திகதி திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 90 தொழில் முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிறிய தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மற்றும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கி அலுவலர்கள் ஆகியோர் வளவாளர்களாகச் செயற்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் முகாமைத்துவப் பயிலுனர் திரு. ஏ. எம். நிரோசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “போலி நாணயத்தாள்கள் மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2019 யூன் 12 ஆம் திகதி திருகோணமலை இந்துக் கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 120 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராகவிருந்தார்.
களுவாஞ்சிக்குடியின் வெள்ளாவெளி பிரதேச பொதுமக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள், வசதியான நிதியியல் சேவைகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிதியியல் திட்டங்கள்” தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2019 ஏப்பிறல் 04ஆம் திகதி களுவாஞ்சிக்குடியின் வெள்ளாவெளியிலுள்ள பிரதேச அலுவலக மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 47 பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராகவிருந்தார்.
அம்பாறையின் பதியத்தலாவையிலுள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தையற்கலை தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 மார்ச் 22 ஆம் திகதி தயா ஆடை ஏற்றுமதித் தொழிற்சாலையின் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் 54 பெண் தொழில் முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மகாவலி அதிகாரசபையின் பயிற்றுனர் திருமதி கல்யாணி குணரத்ன வளவாளராகச் செயற்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் முகாமைத்துவ பயிலுனர் திரு. ஏ. எம். நிரோசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இளம் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஒக்ஸ்பாம் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “கடன் முகாம் மற்றும் நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 மார்ச் 15 ஆம் திகதி மட்டக்களப்பின் ஆரையம்பதியிலுள்ள சமூக மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 29 இளம் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்கள் வளவாளராகவிருந்தார்.
திருகோணமலையின் கந்தளாய் பிரதேச பெண் தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட“பனையோலைசார் கைவினைப் பொருட்கள் தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 மார்ச் 06 ஆம் திகதி திருகோணமலையின் கந்தளாயிலுள்ள பசுமைப் பெண்கள் அமைப்பில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் 37 பெண் தொழில் முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு பனை அபிவிருத்திச் சபையில் பயிற்சி பெற்ற திருமதி பி.செந்தமிழ்ச்செல்வி வளவாளராகச் செயற்பட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்காக இலங்கைமத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட“கல்விக் கருத்தரங்கு” 2019 மார்ச் 01 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 92 பல்கலைக்கழகமாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்தியவங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. பா.சிவதீபன் அவர்களும் திருகோணமலை பிரதேச அலுவலத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. க. பிரபாகரன் அவர்களும் வளவாளர்களாகவிருந்தனர்.
மட்டக்களப்பு வலய கல்வி திணைக்களத்தின் பொருளியில் மற்றும் வணிகக்கல்வி ஆசிரியர்களுக்காக, இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2019 பெப்ரவரி 28 அன்று வலய கல்வித் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 92 ஆசிரியர்கள் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. பா. சிவதீபன் , இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் ஆகியோர் வளவாளராகவிருந்தனர்.
அம்பறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக "சந்தைப்படுத்தல் மற்றும் புத்தகம் பதிதல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 2019 பெப்ரவரி 25 மற்றும் 26 ஆம் திகதிகளின் அம்பாறை மாவட்டத்தின் மகாதல மகா விகாரையில் நடாத்தப்பட்டது. இதில் 76 தொழில்முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு திருகோணமலை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் சிரேஸ்ட தொழில்முயற்சி மேம்பாட்டு அலுவலர் திரு எஸ். டபில்யு. எஸ். ஜி திஸ்ஸநாயக்க வளவளாளராக செயற்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலக பிரதேச முகாமையாளர் திரு க. பிரபாகரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
A “Skill Development Programme on Sewing Training on School Uniform” organized by the Regional Office Trincomalee, Central Bank of Sri Lanka for the Women Entrepreneurs in Kantale, Trincomalee was successfully held on 29th January 2019 at Green women organization in Kantale, Trincomalee, 32 Women Entrepreneurs benefited by this programme. The resource person of the programme was Ms. Moorthi Yasothini, and Mr. K. Prabakaran Regional Manager, Regional Office Trincomalee, Central Bank of Sri Lanka also participated.
வாழைச்சேனை பிரதேச செயலகத்திக்குப்பட்ட நாசிவன்தீவு மற்றும் மீராவோடை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் பொது மக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட"முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச்சேவைகள்" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019 பெப்ரவரி 07 ஆம் திகதி வாழைச்சேனை சமூகமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்சித் திட்டத்தில் 142 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணலை பிரதேசஅலுவலகத்தின் பிராந்திய முகாமையாளர் திரு க. பிரபாகரன் வளவாளராக விருந்தார்.
திருகோணமலை இளம் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்தியவங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் பீஸ் விண்ட் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட "கடன் முகாம் மற்றும் நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டம்" 2019 பெப்ரவரி 06ஆம் திகதி திருகோணமலை சர்வோதய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 59 இளம் முயற்சியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் வளவாளராகவிருந்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திக்குப்பட்ட எருவில் கிழக்கு மற்றும் ஒந்தாச்சிமடம்மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளின் பொது மக்களுக்காக இலங்கை மத்தியவங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட"முறைசார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வசதியான நிதிச் சேவைகள்" பற்றியவிழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2019 சனவரி 31 ஆம் திகதி களுவாஞ்சிகுடி சமூகமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தில் 112 பேர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேசஅலுவலகத்தின் பிரதேச முகாமையாளர் திரு க. பிரபாகரன் வளவாளராகவிருந்தார்.
திருகோணமலை பிரதேச பெண் தொழில் முயற்சியார்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் “கிமோனா கட்டிங் (தையல்) தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 ஆண்டு ஜனவரி மாதம்28 ஆம் திகதியில் பசுமை பெண்கள் அமைப்பினில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்ததுடன் இதில் 32 பெண்தொழில் முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்தநிகழ்ச்சித்திட்டத்திற்கு திருமதி மூர்த்தி யசோதினி வளவளாளராக செயற்பட்டதுடன்இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச முகாமையாளர் திரு க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
அம்பாறை பிரதேச பெண் தொழில் முயற்சியார்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 'உணவகச் சேவை தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் அம்பாறை மண்டல மஹா விகாரையில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்ததுடன் இதில் 65 பெண் தொழில் முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மகாவலி அதிகார சபையின் பயிற்றுனர் திருமதி கல்யாணி குணரத்ன வளவாளராக செயற்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச முகாமையாளர் திரு க. பிரபாகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
திருகோணமலை மாவட்டத்தை சார்ந்த சிறிய மற்றும் நடுந்தர தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல், விளம்பரப்படுத்தல், உள்ளூர் உற்பத்திக்கான வலுவான குறிநாமத்தினை நிறுவுதல் மற்றும் வணிகதளத்தை வழங்கல் போன்றவற்றிக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகம், தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் அமைச்சுடன் இணைந்து சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான வர்த்தக கண்காட்சி ஒன்றினை 2019 தை 19ம் திகதி திருகோணமலை தம்பலகாமம் பொது மைதானத்தில் ஒழுங்குபடுத்தியிருந்தது. இக் கண்காட்சியில் 58 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பயன் பெற்றுருந்தமை குறிப்பிடத்தக்கது.
உரிமம்பெற்ற வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக்கம்பனிகள் மற்றும் காப்புறுதிக் கம்பனிகளின் அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தொடர்பான பிராந்திய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்” 2018 நவம்பர் 16ஆம் திகதி திருகோணமலை கிறின் காடன் விடுதியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 141 அலுவலர்கள் பங்கேற்றதுடன் நிகழ்ச்சிக்கான வளப்பங்களிப்பு இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டிருந்து.
மட்டக்களப்பு மாவட்டத்தை சார்ந்த விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல், உள்ளூர் உற்பத்திக்கான வலுவான குறி நாமத்தினை நிறுவுதல் மற்றும் முயற்சியாளர்களுக்கு வணிகத் தளத்தை வழங்கல் போன்றவற்றிற்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகம், கிழக்கு மாகாணத்திற்கான வேளாண்மை, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல் மற்றும் விநியோகம், என்பவற்றுக்கான அமைச்சுடன் இணைந்து, வேளாண்மை துறையில் வர்த்தக கண்காட்சி ஒன்றினை ஆகஸ்ட் 19ம், 20ம், 21ம் திகதி 2018ல் மட்டக்களப்பு கரடியனாற்று விவாசாய சேவைகள் பயிற்சி நிலையத்தில் ஒழுங்குபடுத்தியிருந்திருந்தது. இக் கண்காட்சியில் 20 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியளார்கள் பயன் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறையிலுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 'திரைச்சிலை வடிவமைத்தல் தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று' 2018 ஆகத்து மாதம் 14 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் மண்டல மகா வித்தியாலய மண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததடன் இதில் 110 பெண் தொழில்முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மகாவலி அதிகார சபையின் பயிற்றுனர் திருமதி கல்யாணி குணரத்ன வளவளாளராக செயற்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலக பிரதேச முகாமையாளர் திரு உபாலி கெட்டியாராச்சி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
அம்பறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக "சந்தைப்படுத்தல் மற்றும் புத்தகம் பதிதல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 2018 ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் திகதிகளின் அம்பாறை மாவட்டத்தின் பானம மத்திய கல்லாரி மற்றும் மகாதல மகா விகாரை போன்ற இடங்களில் நடாத்தப்பட்டது. இதில் ஏறக்குறைய 120 தொழில்முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு திருகோணமலை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் சிரேஸ்ட தொழில்முயற்சி மேம்பாட்டு அலவலர் திரு எஸ். டபில்யு. எஸ். ஜி திஸ்ஸநாயக்க வளவளாளராக செயற்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலக பிரதேச முகாமையாளர் திரு உபாலி கெட்டியாராச்சி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
அம்பறை தெகியத்தகண்டிய பெண் தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் 'திரைச்சிலை வடிவமைத்தல் தொடர்பான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்று' 2018 ஆகத்து மாதம் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் தெகியத்த கண்டி சாலிகா கேட்போர் கூடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததடன் இதில் 100 பெண் தொழில்முயற்சியாளர்கள் பயனடைந்திருந்தனர். இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை மகாவலி அதிகார சபையின் பயிற்றுனர் திருமதி கல்யாணி குணரத்ன வளவளாளராக செயற்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலக பிரதேச முகாமையாளர் திரு உபாலி கெட்டியாராச்சி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.