தொழில் வாய்ப்புக்கள்

இலங்கையின் நிதியியல் துறையில் உச்ச மட்ட நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி விளங்குகின்றது. பகுதியளவு சுயநிர்ணயம் கொண்ட நிறுவனமொன்றாக 1950ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியை தாபித்த 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தை 2023 செத்தெம்பரில் கொண்டுவரப்பட்ட 2023 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம் மேலுறுத்துகின்றது.

எமது தொலைநோக்கு, இலங்கை மக்களின் சுபீட்சத்துக்குப் பங்களிக்கின்ற நம்பகமானதும் இயக்கவாற்றல்மிக்கதுமான மத்திய வங்கியாகவிருப்பதாகும்.எமது பணி, அனைவரையும் உள்ளடக்கிய  மற்றும்  நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு உள்நாட்டு விலை நிலையுறுதியினைப் பேணுதலையும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை அடைதலையும் வலியுறுத்துகின்றது.

அவ்வாறு செயலாற்றும் பொழுது, எம்மால் பேணப்படும் பெறுமானங்கள் உள்ளார்ந்த தலைமைத்துவத்திற்கான கடப்பாடு, வெளிப்டையான தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை, ஒருங்கிணைப்பு, தொழில்சார் தகுதிக்கான கடப்பாடு, ஆயுள் முழுவதும் நீடித்திருக்கும் கற்கை, அறிவினை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் புத்தாக்கம் இசைந்து செல்லுதல் மற்றும் துல்லியமான தன்மை சுயாதீனமான தொழிற்பாட்டு பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கான தொடர்ச்சியான கடப்பாடு மற்றும் பங்கேற்புப் பணி நடைமுறைகளுக்கான கடப்பாடு என்பனவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அதன் அனைத்து ஊழியர்களுக்கு தொழில்சார் நிபுணத்துவ அபிவிருத்திகளையும் தொழில் பதவிஉயர்வு வாய்ப்புக்களையும் வழங்குவதற்கான கடப்பாட்டினைக் கொண்டிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கியின் வெகுமதிமிக்க பதவியொன்றினை பெற்றுக்கொள்ள ஆர்வமிருக்கிறதா?