இலங்கை பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலை
இலங்கை பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலை இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்பிக்கப்பட்டது. இது, அன்றிலிருந்து இன்று வரையான இலங்கையின் வளம்மிக்கதும் பல்வேறு தன்மைகளைக் கொண்டதுமான பொருளாதாரப் பயணம் பற்றிய அறிவினை இத்தலைமுறையினருக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதொன்றாகும்.
தற்பொழுது இலங்கைப் பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையின் முக்கிய கவனம், உலகின் நாணய பரிமாணங்களிலிருந்து கிடைத்த பரந்த வீச்சிலான நாணயங்களையும் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இலங்கையில் பயன்பட்டுவரும் நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளைக் காட்சிப்படுத்திவரும் நாணய அரும்பொருட்காட்சிச்சாலை மீதே குவிந்திருக்கிறது. அநுராதபுரம், பொலநறுவை, கோட்டை மற்றும் கண்டி இராசதானிகளின் பல்வேறு யுகங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள், நாட்டின் காலணித்துவக் காலப்பகுதியிலிருந்தான பெருமளவு சேகரிப்புக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் மற்றும் நாணயக் குத்திகள் என்பன கவர்ச்சிகரமான முறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாணயக் குத்திகளை வார்ப்படம் செய்யும் செயன்முறைகளும் நாணயத் தாள்களை அச்சிடும் செயன்முறைகளும் வங்கித்தாள் அச்சிடல் பொறி மற்றும் நாணய வார்ப்படத்தின் அளப்பரிய பங்களிப்புடன் விசேட முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாணயத் தாள்களின் பாதுகாப்புப் பண்புகளைக் கண்டறிவதற்கான சுய பயில்தல் சாதனங்களும் நாணயங்கள் தொடர்பான வீடியோக்காட்சிகளும் கூட கிடைக்கத்தக்கதாகவுள்ளன. பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலை பள்ளிக்கூடப் பிள்ளைகள் மற்றும் ஈடுபாடு கொண்ட தரப்பினருக்கான சுற்றுலா வசதியினை இலவசமாக வழங்குகின்றது. இலங்கை மத்திய வங்கியினது வெளியீடுகளின் விற்பனைப்பீடம் பொதுமக்களுக்காக திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை (பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தவிர) மு.ப. 9.00 இலிருந்து பி.ப. 5.00 மணி வரை திறந்திருக்கும். ஞாபகார்த்த நாணயக் குத்தி போன்றவற்றை வழங்குகின்ற அரும்பொருட்காட்சிச்சாலை மற்றும் நாணய விற்பனைப்பீடங்களும் மேற்குறிப்பிட்ட அதேநேரங்களில் திறக்கப்படுவதுடன் நண்பகல் உணவிற்காக பி.ப. 1.15 இலிருந்து பி.ப. 2.15 வரை மூடப்படுகின்றன.
பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலை கொழும்பின் மத்தியில் இல.54, சதாம் வீதி, கொழும்பு 01 என்ற முகவரியிலிமைந்துள்ள சென்றல் பொயின்ட் கட்டடத்தில் அமைந்திருக்கிறது. வரலாற்றுப் பெறுமானங்களைக் கொண்ட இக்கட்டடம் முதன்முதலில் பொதுமக்களுக்காக 1914இல் திறந்து வைக்கப்பட்டதுடன் அக்காலகட்டத்தில் இக்கட்டடம் கொழும்பின் மிக உயர்ந்த கட்டடமாகவும் விளங்கியது. இது, உலகளாவிய காப்புறுதிக் கம்பனியான நேசனல் மியூச்சுவல் லைவ் அசோசியேசன் ஒவ் அவுஸ்திரேலியா லிமிடெட்டிற்கான அலுவலகமாகவும் தொழிற்பட்டிருக்கிறது. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் நாட்டின் வீதி வலையமைப்பின் மத்திய புள்ளியாகக் கருதப்படுகின்ற புகழ்மிக்க கொழும்பு கோட்டையிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தினை அடுத்து அமைந்திருக்கிறது.
(மாதிாி சுருக்க விபரம்) இலங்கையிலுள்ள நாணயத் தாள்கள் மற்றும் வரலாற்று நாணயக் குத்திகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி மத்திய வங்கியின் அலுவலர்களால் வழங்கப்படும் விளக்கங்களை ஆவா்வமாக அவதானிக்கும் பாடசாலை மாணவர் குழுக்கள்.
|