தொலைநோக்கு, பணி மற்றும் விழுமியங்கள்
தொலைநோக்கு
“நம்பிக்கைக்குரியதும், இயலாற்றல் கொண்டதுமான மத்திய வங்கி இலங்கையின் சுபீட்சத்திற்குப் பங்களித்து வருகின்றது.”
இலங்கையின் சுபீட்சத்திற்கு பங்களிப்பதற்கு வங்கி ஆழ்ந்த கடப்பாடினைக் கொண்டிருப்பதனை எமது தொலைநோக்கு மிக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. சுபீட்சம் என்ற சொற்பதம் பரந்தளவு கருத்துக்களை கொண்டிருக்கிறது. நீடித்து நிலைத்திருக்கும் செல்வத்தினை உருவாக்குவதனூடாகவும் அபிவிருத்தியின் நன்மைகளை அனுபவிப்பதற்கு சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்குவதன் மூலமும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவது. மத்திய வங்கி, பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பனவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம் இச்செயன்முறைக்கு வசதியளிக்கின்ற வேளையில் இப்பொருளாதார அலுவல்கள் தொடர்பான அரசிற்கான மதியுரையாளர் என்ற ரீதியில் முன்மதியுடைய மற்றும் செயற்பாடு சார்ந்த விதந்துரைப்புக்களையும் வழங்குகின்றது. அவ்வாறு செயற்படும் பொழுது, வங்கி உயர்ந்தளவு மேன்மைத்தன்மையுடனும் தொழில்சார் நிபுணத்துவத்துடனும் செயற்படுவதுடன் அதன் குறிக்கோள் சார்ந்த தன்மை மற்றும் அரசியல் நிலைமையில் கௌரவத்தன்மையையும் ஈட்டிக்கொள்கிறது.
எமது பணி
"கொள்கை ஊக்குவிப்பு, மதியுரை, கடப்பாடு மற்றும் சிறப்பான தன்மையூடாக நீடித்து நிலைத்திருக்கும் வளர்ச்சிக்கு உதவுவதற்காக பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டைப் பேணுதல்.”
எமது பணி, வங்கி அதன் மையக் குறிக்கோள்களான பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு (குறைந்த மட்ட பணவீக்கத்தினைப் பேணுகின்ற வேளையில், பேரண்டப் பொருளாதார சமநிலையினை அடைதல்) மற்றும் நிதியியல் உறுதிப்பாடு (பொதுவாக நிதியியல் முறைமையில் உறுதிப்பாட்டினைப் பேணுதல்) என்பனவற்றை தொடர்ச்சியாக நிறைவேற்றும் அவசியத்தினை வலியுறுத்துகின்றது. இப்பணியினை பூரணப்படுத்துவது, பொருளாதார முகவர்கள் பொருளாதாரம் தொடர்பான நீண்ட கால நோக்கங்களைப் பெறுவதற்கும் அதற்கேற்ப மூலவள ஒதுக்கல்கள், உற்பத்தி, தொழிலாளர் நிரம்பல், முதலீடுகள் நுகர்வு மற்றும் சேமிப்பு என்பன தொடர்பான முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு தூண்டுதலளிக்கும் சூழலொன்றினை உருவாக்குவதற்கும் வங்கியை இயலுமைப்படுத்தும். அத்தகைய நீண்டகால நோக்கு நீடித்து நிலைத்திருக்க கூடிய வளர்ச்சிக்கும் வறுமை ஒழிப்பிற்கும் இன்றியமையாததாகும்.
இம் மையக் குறிக்கோள்கள், நீண்ட கால உள்ளார்ந்த வளத்தினை விரும்பத்தக்க மட்டங்களில் பெறுவதற்கேற்ற விதத்தில் பொருளாதார உற்பத்திகளை உயர்த்துவதற்குப் பொருத்தமான கொள்கை விதந்துரைப்புக்களினால் ஆதரவளிக்கப்படுதல் வேண்டும். இப் பணியினைப் பூரணப்படுத்துவதில் வங்கியானது தொழிற்பாடுகளின் முக்கிய உள்ளீடாக விளங்கும் அதன் அலுவலர்கள் காட்டும் உயர்ந்த மட்ட கடப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் நேர்த்தியான தன்மை என்பன முயற்சிக்கான முன்மாதிரியாக வங்கியை திகழச்செய்யும். வங்கி அலுவலர்கள் வங்கி ஆர்வலர்களுக்கு தமது பணிகளை வழங்கும் பொழுது பொருத்தமான அடிப்படைத் தன்மையொன்றினையும் பணி விதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். வங்கி அதன் பணிகளை உயர்மட்டத்தில் வைத்துக்கொள்வதற்கு, பன்னாட்டு நடைமுறைகளுக்கும் மேலானதொரு தரத்தினைப் பேணுவதற்குக்கூட எப்பொழுதும் முயற்சித்துக் கொண்டே இருக்கும்.
விழுமியங்கள்
சக்தி மிக்க அபிலாசைகளைக் கொண்ட தலைமைக்கான கடப்பாடு
நிதியியற் துறைக்கு உபாயம் மிக்க தலைமைத்துவத்தை வழங்குதல்.
நாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் ஒளிவு மறைவு அற்ற தன்மை
எங்கள் நடவடிக்கைகளுக்கு பின்னாலுள்ள நியாயங்களை விளக்குவதற்குத் தயாராக இருத்தல்.
எங்கள் முக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசு, நிதியியல் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பொறுப்புக் கூறுதல்
எங்களுடைய கொள்கை மதியுரை மற்றும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளல்.
நம்பகத்தன்மை, நம்பிக்கை, தங்கியிருக்கும் தன்மை – நேர்மை
எங்கள் ஆர்வலர்களின் மிகச் சிறந்த விருப்பத்திற்கு ஏற்ப, தொழிற்பாடுகளை மிக ஒழுக்கமான முறையில் ஒழுங்கு செய்து, சொல்வது மட்டுமன்றி செயலிலும் காட்டுதல்.
நிபுணத்துவப் போட்டித் தன்மைக்கான கடப்பாடு
நாங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும், அர்ப்பணிப்பு, தரம் மற்றும் திறமையை கொண்டிருத்தல்.
வாழ்நாள் முழுவதும் கற்றல், அறிவினைப் பகிர்தல் மற்றும் புதுமையைப் புகுத்தல் என்பவற்றுக்கான கடப்பாடு
மிக விரைவாக மாறிவரும் உலகத்திற்கேற்ப, தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டாகவும் தேவையான தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளல்.
வங்கியினால் மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளிலும் ஒத்ததன்மை, துல்லியமாக இருத்தல் உரிய நேரத்தில் மேற்கொள்ளல் என்பன
நாங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் கௌரவத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கொள்கை வடிவமைத்தலிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் தொழிற்பாட்டு சுய நிர்ணய உரிமையை முகாமைப்படுத்தலும் உறுதிப்படுத்தலும்
குறிக்கோள் தொடர்பான தீர்மானம் எடுப்பதில் நிறுவன ரீதியான சுதந்திரத்தை வழங்கல்.
பெறுபேறுகள் மற்றும் விளைவுகள் தொடர்பாக விரைவானதும், தொடர்ச்சியானதுமான கடப்பாடு
எங்களுடைய எல்லா நடவடிக்கைகளிலும் அவசரமிக்கதும் உரிய நேரத்தில் செயற்படுவதுமான உணர்வினை ஏற்படுத்தல்.
கூட்டாகவும், ஒத்துழைத்தும் வேலை செய்யும் நடைமுறைகளுக்கான கடப்பாட்டினைக் கொண்டிருத்தல்
வங்கிக்குள் ஒரு குழு என்ற உறவுமுறையினை ஆக்க பூர்வமாகக் கட்டியெழுப்புதல், இதன் மூலம் ஒத்துழைப்பு மற்றும் குழு உணர்வினையும் உறுதி செய்யலாம்.