கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2025 திசெம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டது. டித்வா புயலின் காரணமாக 2025 திசெம்பரில் கணிசமாக மாதத்திற்கு மாத விலைகளில் அதிகரிப்பொன்று ஏற்பட்ட போதிலும், சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் இதற்கு பிரதானமாக துணையளித்திருந்தது.
உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 திசெம்பரில் 3.0 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்ட அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) நவெம்பரில் பதிவாகிய 1.7 சதவீதத்திலிருந்து 2025 திசெம்பரில் 1.8 சதவீதமாக அதிகரித்தது.
















