நிதியியல் முறைமை மேற்பார்வைக் குழு
நிதியியல் முறைமை மேற்பார்வைக் குழுவானது நியதி ஒதுக்கு குழுவாகும். இது பேரண்ட முன்மதியுடைய கொள்கைக்கிணங்க நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டை பாதுகாக்கப் பங்களிக்கும் குறிக்கோளுடன், 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தினால் தாபிக்கப்பட்டது.
நிதியியல் முறைமை மேற்பார்வை குழுவின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகள்:
- நிதியியல் முறைமையைப் பாதிக்கின்ற ஒட்டுமொத்த இடர்நேர்வுகளின் அடையாளங்காணப்பட்ட கட்டியெழுப்புகையைத் தணிப்பதற்கு பேரண்டபொருளாதார கொள்கையை ஆய்வுசெய்தல்.
- பேரண்டமுன்மதியுடைய கொள்கையை நடைமுறைப்படுத்தலை ஒருங்கிணைத்தல்.
- இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 69ஆம் பிரிவின் கீழ் மத்திய வங்கியின் முன்மொழிவின் மீது இனங்காணப்பட்ட இடர்நேர்வுகளுக்கு பதிலிறுத்தும் வகையில் திருத்த நடவடிக்கை தொடர்பில் தொடர்புடைய பொது அதிகாரிகளுக்கு மற்றும் நிதியியல் துறை அதிகாரிகளுக்கும் தேவையேற்படும்பட்சத்தில், பரிந்துரைகளை வழங்கி அப்பரிந்துரைகளை பகிரங்கமாக வெளியிடுதல்.
- அதன் பரிந்துரைகளுடன் இணங்குவித்தலைக் கண்காணித்தல்.
நிதியியல் முறைமை மேற்பார்வை குழுவின் உள்ளமைப்பு பின்வருமாறு:
தலைவர்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்
உறுப்பினர்கள்
மத்திய வங்கியின் பேரண்டமுன்மதியுடைய கொள்கைக்குப் பொறுப்பாகவுள்ள துணை ஆளுநர்
மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை என்பவற்றிற்குப் பொறுப்பாகவுள்ள துணை ஆளுநர்
திறைசேரிக்கான செயலாளரால் தெரிவுசெய்யப்பட்ட திறைசேரிக்கான துணைச் செயலாளர்
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் முதன்மை நிறைவேற்று அலுவலர்
இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முதன்மை நிறைவேற்று அலுவலர்
மத்திய வங்கியின் ஆளுகைச் சபையினால் நியமிக்கப்படும் மற்றுமொரு நபர்
நிதியியல் முறைமை மேற்பார்வை குழு அவற்றின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு குழுக் கூட்டங்களுக்கு ஏதேனும் வேறு பொது அதிகாரசபையிடமிருந்து பிரதிநிதிகளை அழைக்கலாம்.
நிதியியல் முறைமை மேற்பார்வை குழுவின் செயலாளர்
பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம்
நிதியியல் முறைமை மேற்பார்வைச் சபையானது ஆகக் குறைந்தது காலாண்டு ரீதியில் ஒன்றுகூடப்படும். தலைவரின் மூலம் அல்லது ஆகக்குறைந்தது இரு வாக்கிடும் உறுப்பினர்களின் எழுத்துமூல கோரிக்கையில் ஏதேனும் விசேட கூட்டம் ஒன்றுகூட்டப்படலாம்.