மட்டக்களப்பு மாவட்டத்தின் இளம் முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஒக்ஸ்பாம் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “கடன் முகாம் மற்றும் நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 மார்ச் 15 ஆம் திகதி மட்டக்களப்பின் ஆரையம்பதியிலுள்ள சமூக மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.