மட்டக்களப்பு மாவட்டத்தின் பாற்பண்ணையாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “நிதியியல் அறிவு நிகழ்ச்சித்திட்டமொன்று” 2019 ஜூலை 30 ஆம் திகதி மட்டக்களப்பின் களுவாஞ்சிக்குடியிலுள்ள சமூக மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 24 பாற்பண்ணையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.