நூலகம் மற்றும் தகவல் நிலையம்
நூலகம் மற்றும் தகவல் நிலையம், வங்கியின் குறிக்கோள்களை எய்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குகின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சி நூலகமாக விளங்குகின்றது. மேலும், நூலகம் மற்றும் தகவல் நிலையம் பொருளாதாரம் மற்றும் வங்கித்தொழிலுடன் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு நாட்டின் ஆராய்ச்சிச் சமூகத்தினருக்கும் உதவுகிறது.
நூலகச் சேகரிப்புக்கள்
தற்பொழுது நூலகம் மற்றும் தகவல் நிலையம் 28,000 நூல்களையும் 20,000 அறிக்கைகள் மற்றும் மற்றைய மத்திய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளையும் உள்ளடக்கி ஏறத்தாழ 50,000 வெளியீடுகளைக் கொண்டிருக்கிறது. இது 200 இற்கு மேற்பட்ட சஞ்சிகைத் தலைப்புக்களின் கீழ் 30,000 இற்கு மேற்பட்ட சஞ்சிகை வெளியீடுகளையும் கொண்டுள்ளது. பெரும்பாலான சேகரிப்புக்கள் ஆங்கிலத்திலேயே காணப்படுகின்றன. இலங்கைச் சேகரிப்புக்கள், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளிலிருந்தான சேகரிப்புக்கள் போன்ற சிறப்புச் சேகரிப்புக்களும் காணப்படுகின்றன. மேலும், நூலக தகவல் நிலையம், உலகப் புள்ளிவிபரங்கள், பொருளாதார மற்றும் வியாபாரத் தரவுகள் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நூல்கள் பதிக்கப்பட்ட இறுவட்டுக்கள் என்பனவற்றை கொண்ட 2,000 இறுவட்டு றோம்களையும் சேகரிப்பில் வைத்திருக்கின்றது. நூலகம் மற்றும் தகவல் நிலையமானது பொருளாதாரம், வங்கித்தொழில் மற்றும் நிதி தொடர்பான கணனி வழி சஞ்சிகைகள், தரவுத் தளங்கள் மற்றும் கணனி வழி அதேநேர தகவல் பணிகளுக்கான சந்தாப் பணங்களையும் செலுத்துகிறது.
மேலும், பின்வருவனவற்றிலிருந்து உசாத்துணை நூல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
- செய்தித்தாள் வாசிக்கும் அறை
- தேசமான்ய என். யூ. ஜயவர்தன வாசிக்கும் அறை
- இணையத்தள வசதிகளைப் பெறும் பிரிவு
- மத்திய வங்கி சேகரிப்புக்கள்
அங்கத்துவ இணைப்புக்கள்
நூலக தகவல் நிலையம் இலங்கை பொருளாதார, வங்கித்தொழில் நூலக வலையமைப்பான eBanklLibNetSL இன் மையப் புள்ளியாக விளங்குகின்றது. இது, மத்திய வங்கிக் குழுமம் மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களினது நூலகங்களின் அங்கத்தவராகவும் விளங்குகின்றது. நூலகம் மற்றும் தகவல் நிலையம் இலங்கை தேசிய நூலகப் பட்டியல் ஒன்றியம் மற்றும் ஆவணப்படுத்தல் பணிகள் சபைச் செயற்றிட்டத்திலும் பங்கேற்கிறது.
(மாதிாி சுருக்க விபரம்) மத்திய வங்கி அதன் மத்திய அறிவு மையமாகச் செயற்படுகின்ற அதிநவீன நூலகம் மற்றும் தகவல் நிலையமொன்றினைக் கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்கள் தவிர வௌிவாரி அறிவினைத் தேடுபவர்களும் தொடா்பூட்டல் திணைக்களத்தின் பணிப்பாளாின் முன்கூட்டிய அனுமதியினைப் பெற்று நூலகத்தினை பயன்படுத்தமுடியும்.
|