திணைக்களங்கள்
இலங்கை மத்திய வங்கியின் சுமூகமான தொழிற்பாட்டிற்காக, திணைக்களங்கள் பணிப்பாளர்களினால் (அல்லது அதற்குச் சமனான) தலைமை தாங்கப்படுவதுடன் உதவி ஆளுநரொருவரூடாக ஆளுநருக்கு அல்லது துணை ஆளுநருக்கு அறிக்கையிடப்படுகின்றது.
வங்கி மேற்பார்வைத் திணைக்களம்
- உரிமம்பெற்ற வங்கிகளுக்கான முன்மதியுடைய ஒழுங்குவிதிகளை வடிவமைத்து வழங்குதல்.
- தற்போதைய சந்தை அபிவிருத்திகள், பன்னாட்டு நியமங்கள் மற்றும் சிறந்த நடைத்தைகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பவற்றை மீளாய்வுசெய்து திருத்தியமைத்தல்.
- இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளுக்கும் சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கும் உரிமத்தை வழங்குதல்.
- உரிமம்பெற்ற வங்கிகளின் தொடர்ச்சியான மேற்பார்வையை நடாத்துதல்.
- உரிமம்பெற்ற வங்கிகளின் காலமுறையான நியதிச்சட்டப் பரீட்சிப்புக்களை நடாத்துதல்.
- உரிமம்பெற்ற வங்கிகளிலிருந்தான ஒழுங்குமுறையான ஒப்புதல்களுக்காக கோரிக்கைகளை முன்னெடுத்து வசதியளித்தல்.
- இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபையின் ஒப்புதல் தேவைப்படுமிடத்து ஒழுங்குமுறைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்.
- உரிமம்பெற்ற வங்கிகளின் சந்தையால் இயக்கப்படும் ஒருங்கிணைப்பிற்கு வசதியளித்தல்.
- வங்கிகள், கணக்காய்வாளர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஆர்வலர்கள் ஆகியோருடனான தொடர்பூட்டலை வலுப்படுத்தல்.
- வங்கித் தொழிலில் இயலாற்றலைக் கட்டியெழுப்புவதற்கு உதவியளித்தல்.
வங்கித்தொழில் கற்கைகளுக்கான நிலையம்
- மத்திய வங்கியின் அலுவலர்களுக்கும் உள்நாடு மற்றும் பன்னாட்டு ரீதியான வள ஆளிணியரைக் கொண்ட நாட்டிலிலுள்ள ஏனைய நிதிய நிறுவனங்களுக்கும் மத்திய வங்கித்தொழில், வங்கித்தொழில் மற்றும் நிதி, பொருளியல், முகாமைத்துவம், மொழிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற விடயப்பரப்புக்களில் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் உட்பட இயலாற்றலைக் கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித்திட்டங்களை பரந்தளவில் வழங்குதல்.
- தென்கிழக்காசிய மத்திய வங்கிகளின் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம், ஆசிய அபிவிருத்தி வங்கி, பன்னாட்டு நாணய நிதியம், வெளிநாட்டு மத்திய வங்கிகள் மற்றும் பன்னாட்டு பயிற்சி நிறுவனங்கள் போன்ற பன்னாட்டு அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் பன்னாட்டு ரீதியான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குதல்.
- பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் பாடவிதான அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி வங்கித்தொழில் கற்கைகளுக்கான நிலையத்திற்கு மதியுரைகளை வழங்கும் சபையாக செயற்படும் விதத்தில் பீட மதியுரைக் குழுவினை உருவாக்குதல்.
- நிதியியல் துறையிலுள்ள தொழில்சார் நிபுணர்களின் நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கேற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை வருடாந்த அடிப்படையில் வழங்குதல்.
- நிதியியல் பணிகள் தொழில்துறையின் முக்கிய துறைகளில் காணப்படும் தேர்ச்சிக்கும் அறிவுக்குமிடையிலான இடைவெளியினை நிரப்பும் பொருட்டு தொழில்துறையின் குறித்துரைக்கப்பட்ட பயிற்சித் தேவைகளையும் இணங்குவிப்புத் தேவைப்பாடுகளையும் பரிசீலனையில் கொண்டு பரந்த வீச்சில் அமைந்த விசேட நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குதல்.
- இலங்கை மத்திய வங்கி, தொடர்பான அமைச்சுக்கள் என்பனவற்றின் மூத்த அலுவலர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு பன்னாட்டு நிபுணர் ஒருவரின் மூலம் கட்டமைக்கப்பட்ட உயர்மட்ட ஆய்வரங்கொன்றினை நடாத்துதல்.
- நிதியியல் துறையிலுள்ள தொழில்நிபுணத்துவம் சார்ந்தவர்களுக்கு வலுவூட்டும் விதத்தில் புதிய தொழில்நுட்பவியல் அபிவிருத்திகளுக்கு சமமான விதத்தில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் ஆய்வரங்குகளையும் செயலமர்வுகளையும் மீளாய்வு செய்து வடிவமைத்தல்.
- பயிற்சித் தேவை தொடர்பான அளவீடுகளை மேற்கொள்ளல் மற்றும் வேறுபட்ட துறைகளில், குறிப்பாக, வங்கித்தொழில் மற்றும் நிதியியல் தொழில் துறைகளிலுள்ள தொழில்சார்ந்தவர்களுடன் கலந்தாராய்வுகளை மேற்கொள்ளல்.
- இலங்கை மத்திய வங்கியின் பல்வேறு திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் நாட்டில் பிரதேச மட்டத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்காக பல்வேறுபட்ட ஆய்வரங்குளையும் செயலமர்வுகளையும் நடாத்துதல்.
- பொருளாதாரத்தினைப் பயிலும் உயர்தர மாணவர்களை முக்கிய இலக்காகக் கொண்டு கல்விசார் தொலைக்காட்சி நிகழ்ச்சித்திட்டத் தொடர்களை சிங்களத்திலும் தமிழிலும் ஒளிபரப்புதல்.
- பொதுமக்களின் நிதியியல் அறிவினை உயர்த்துவதற்காக புகழ்பூத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் பங்களிப்புடன் சமகால பொருளாதார விடயங்கள் மீது பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
- வங்கித்தொழில் கற்கைகளுக்கான நிலையத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்போர், வதிவிட நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்போர், அரச மற்றும் நிதியியல் நிறுவனங்களின் அலுவலர்களுக்கு கோரிக்கையின் பேரில் வதிவிட வசதிகளை வழங்குதல்.
- அலுவல்சார் நிகழ்வுகளை நடாத்துவதற்கு அரசாங்கத்திற்கும் நிதியியல் நிறுவனங்களுக்கும் ஏற்பாட்டு வசதிகளை வழங்குதல்.
தொடர்பூட்டல் திணைக்களம்
- இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்களான பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு இலக்குகளை தொடர்வதற்கு இலங்கை மத்திய வங்கியால் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களையும் ஒழுங்குபடுத்தல் மற்றும் ஏனைய வழிமுறைகளையும் தொடர்பூட்டல் செய்வதுடன் முகவராண்மைத் தொழிற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
- இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்களையும் தொழிற்பாடுகளையும் அதேபோன்று இலங்கை மத்திய வங்கியின் கொள்கைத் திட்டங்களையும் அத்துடன் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கும் கொள்கையின் காத்திரத்தன்மையை மேம்படுத்துவதற்குமான அவற்றின் உட்கருத்துக்கள் மற்றும் பெறுபேறுகள் என்பவற்றையும் தொடர்பூட்டுதல்.
- நூலகப் பணிகள், வெளியீடுகள் மற்றும் விழிப்பணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாக அதன் ஆர்வலர்களுக்கு மத்தியில் அறிவுப்பரப்பும் தகவல்களும் வியாபிக்கப்படுவதனை உறுதிசெய்தல்.
நாணயத் திணைக்களம்
பொதுமக்களின் கேள்வியை பூர்த்திசெய்வதற்கும் அதேவேளை போலி நாணயத் தாள்களை தடுப்பதற்குமான சட்ட ரீதியான நாணயங்கள் இலங்கையில் போதியளவாகவும் போதுமான தரத்திலும் கிடைக்கப்பெறுகின்றது.
மேற்குறிப்பிட்டதற்கமைவாக, பின்வரும் முக்கியத் தொழிற்பாடுகள் நாணயச் சபையினால் கொண்டு நடாத்தப்படுகின்றன;
- பொதுமக்களின் கேள்விகளை பூர்த்திசெய்வதற்கு நாணயத் தாள்களையும் குத்திகளையும் வழங்குதல்
- எதிர்கால நாணய குத்திகளினதும் தாள்களினதும் தேவைப்பாடுகளை மதிப்பீடுசெய்து காலமுறையான கொள்வனவுகளை மேற்கொள்ளுதல்.
- உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடமிருந்து நாணய வைப்புக்களை ஏற்றுக்கொள்ளல்.
- சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்றிக்கொள்வதற்கு பொதுமக்களுக்கான கருமபீடமொன்றைப் பேணுதல்
- உரிமம்பெற்ற வாத்தக வங்கிகளினால் வைப்புச்செய்யப்பட்ட நாணயத்தை முன்;னெடுத்து மேலதிக சுற்றோட்டத்திற்கு பொருத்தமற்ற நாணயத் தாள்களையும் குத்திகளையும் மீளப் பெற்றுக்கொள்ளல்.
- போலியான தாள்களை சட்ட ரீதியான நாணயங்களை மாற்றுதல் தொடர்பான ஏதேனும் முயற்சிகளை மறுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்ட அமுலாக்க அதிகாரிக்கு உதவுதல்.
- நாணயத் தாள்களின் பாதுகாப்பு அம்சங்கள் மீது பொதுமக்களின் அறிவை மேம்படுத்துவதற்கு பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதுடன் நாணயத் தாள்களையும் குத்திகளையும் முறையாக கையாளுதல்.
- தேவைப்படும் போது தேவைப்படுகின்றவாறு புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்வதன் மூலம் நாணயத் தாள்களின் தரத்தை மேம்படுத்துதல்
- விசேட நிகழ்வையோ அல்லது விசேட ஆளொருவரையோ நினைவுகூறும் வகையில் ஞாபகார்த்த தாள்களையும் அல்லது குத்திகளையும் வழங்குதல்.
வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம்
- இலங்கையில் வெளிநாட்டுச் செலாவணியை ஊக்குவித்து ஒழுங்குமுறைப்படுத்தல் (நடைமுறை மற்றும் மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள்)
- வெளிநாட்டு செலாவணி முகாமைத்துவத்திற்கு தேவைப்படும் கொள்கைகளை தொழிற்படுத்துவதற்கு ஒழுங்குவிதிகள்/ கட்டளைகள்/ பணிப்புரைகள் என்பவற்றை வடிவமைத்தல்
- தேவைப்படும்வாறும் தேவைப்படும்போதும் ஒழுங்குவிதிகள்/ கட்டளைகள்/ பணிப்புரைகள் என்பவற்றை திருத்தியமைத்தல்.
- வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகள்/ பணிப்புரைகள் என்பவை மீது பொதுமக்களின்/ ஆர்வலர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துதல்.
- பணத்தை மாற்றல்செய்யும் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதியை வழங்குதல்
- அதிகாரமளிக்கபட்ட வணிகர்களினாலும் மட்டுப்படுத்தப்பட்ட வணிகர்களினாலும் அறிக்கையிடப்படும் வெளிநாட்டுச் செலாவணி கொடுக்கல்வாங்கல்களை கண்காணித்து அறிக்கைகளை நாளாந்த/ மாதாந்த மற்றும் காலாண்டு அடிப்படையில் தயாரித்தல்.
- வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் நியதிகளுக்கமைவாக இணங்கியொழுகாமை தொடர்பில் விசாரணைகளை நடாத்துதல்
- நடைமுறை ஒழுங்குவிதிகள், கட்டளைகள் மற்றும் பணிப்புரைகள் என்பவற்றின் கீழ் உள்ளடக்கப்படாத நிகழ்வுகளுக்கு விசேட அனுமதிகளை வழங்குதல்
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை
- வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், உரிமம்பெற்ற நுண்பாக நிதியியல் நிறுவனங்கள், முதனிலை வணிகர்கள் ஆகியோரின் மேற்பார்வைச் செயன்முறையை வலுப்படுத்தல்
- தற்போதைய சந்தை அபிவிருத்திகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் உரிய சட்டங்களை மீளாய்வு செய்து திருத்தியமைப்பதுடன் முழுமையான பார்வையில் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் தற்போதுள்ள ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பை ஒழுங்குமுறைப்படுத்தி புதிய ஒழுங்குவிதிகளை வழங்குதல்.
- வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதுடன் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் வியாபாரத் தொழிற்பாடுகளை வலுப்படுத்தல்.
- வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் உடனடியான சரியான செயற்றிட்டத்திற்காக கொள்கை செயற்திட்டமொன்றை உருவாக்குதல்.
- அதிகாரமளிக்கப்படாத நிதியியல் தொழிலையும் குத்தகைக்குவிடும் தொழிலையும் கட்டுப்படுத்தல்.
- நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினையும் நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பினையும் வசதிப்படுத்தல்
- வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள், கணக்காய்வளர்கள் மற்றும் ஏனைய ஒழுங்குமுறைபடுத்தல் முகவர்கள் ஆகியோருடன் தொடர்பூட்டலை வலுப்படுத்தல்
- வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வை ஊழியர்களினதும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையினதும் தேர்ச்சி மட்டங்களை மேம்படுத்தல்
வைப்புக் காப்புறுதி மற்றும் தீர்மானங்கள் திணைக்களம்
- அடையாளம் காணப்பட்ட இடர்ப்பாட்டிலுள்ள நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுத்தல்.
- தலையீட்டிற்கான அவசியத்தினை மதிப்பிடுவதற்காக நிதியியல் நிறுவனங்களை அடையாளங்கண்டு, மதிப்பீடு செய்து கண்காணிப்பதற்கான புதிய முறைமைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குதல்.
- காத்திரமானதும் வினைத்திறன்மிக்கதுமான தீர்மானத்திற்கும் நடைமுறைப்படுத்தலுக்குமாக புதிய சட்டக் கட்டமைப்புகளை உருவாக்குதல் அல்லது தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துதல்.
- அதிகாரமளிக்கப்படாத நிதியியல் நிறுவனங்கள் அத்துடன்ஃ அல்லது தடைசெய்யப்பட்ட திட்டங்கள் தொடர்பானவையை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்தல்.
- இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தினை பேணி, அதனை நிருவகித்து நிறைவேற்றுதல்.
- இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 62ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் நிதியியல் நிறுவனங்களின் தீர்மானத்திற்கு பொறுப்பான அதிகாரியாக மத்திய வங்கி இருத்தல் வேண்டும்.
உள்நாட்டு தொழிற்பாடுகள் திணைக்களம்
- நாணயத்தொழிற்பாடுகளை நடாத்துவதன் மூலம் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்:
- செயற்படும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை நடாத்துதல்.
- உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் நியதிச்சட்ட ஒதுக்குகளை ஒழுங்குமுறைப்படுத்தல்.
- சந்தை நிலைமைகளுடன் பொருந்தும் விதத்தில் தேவைப்படுகின்றவாறு தேவைப்படும்போது திரவத்தன்மைத் தொழிற்பாடுகளை நடாத்துதல்.
- வர்த்தக வங்கிகளின் வங்கியாளராகவும், அரசாங்கத்தினதும் அரசாங்க முகவராண்மைகளினதும் ஏனைய நிறுவனங்களினதும் வங்கியாளராகவும் உத்தியோகபூர்வ வைப்பகமாகவும் தொழிற்படுதல்.
- அரசாங்கத்திற்கான தற்காலிக முற்கொடுப்பனவுகளை வழங்குதல்.
- அதே நேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் பங்கேற்பாளர்களுக்கான தீர்ப்பனவுக் கணக்குகளைப் பேணுதல்.
- அதே நேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் பற்கேற்பாளர்களுக்கு ஒரே நாளுக்குள்ளான திரவத்தன்மையை வழங்குதல்
- அதிகாரமளிக்கப்பட்ட பணத் தரகர்களை ஒழுங்குமுறைப்படுத்தல்.
பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்
- நாணயக் கொள்கை தொடர்பிலும் அனைத்தையுமுள்ளடக்கிய நாணய மற்றும் பொருளாதார பகுப்பாய்வுகளைக் கொண்ட வேறு முக்கிய பேரண்ட பொருளாதாரக் கொள்கை தொடர்பிலும் நாணயக் கொள்கைச் சபைக்கும், ஆளுகைச் சபைக்கும் மூத்த முகாமைத்துவத்திற்கும் உரிய காலத்தில் ஆலோசனைகளையும் விதந்துரைப்புக்களையும் வழங்குவதுடன் உலகளாவிய அபிவிருத்திகளின் அனைத்தையுமுள்ளடக்கிய பகுப்பாய்வுகளைக் கொண்டு நாணய, உண்மை, வெளிநாட்டு மற்றும் இறைத் துறை மற்றும் நிதியியல் துறை அபிவிருத்திகளிலிருந்து எழுகின்ற இடர்நேர்வுகளை மதிப்பீடுசெய்தல்.
- செலாவணி வீதம் மற்றும் சென்மதி நிலுவை என்பவற்றிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டுக் காரணிகளையும் அதிர்வுகளையும் அடையாளங்கண்டு, வெளிநாட்டுத் துறையின் ஆற்றல்வாய்ந்த தன்மையினையும் உறுதிப்பாட்டு தன்மையினையும் உறுதிப்படுத்துவதற்கான கொள்கை விதந்துரைப்புக்களை உரிய நேரத்தில் வழங்குதல். செலாவணி வீதம் மற்றும் பன்னாட்டு ஒதுக்குகள் மீதான ஏதேனும் அழுத்தத்தினை அடையாளம் காண்பதற்கு சந்தை அபிவிருத்திகளைக் கண்காணித்து அத்தகைய அழுத்தங்களைக் தணிப்பதற்கான பொருத்தமான கொள்கை வழிமுறைகளை விதந்துரைத்தல்.
- விலை மட்டத்திலும் பணவீக்க எதிர்பார்க்கைகளிலுமுள்ள அசாதாரண அசைவுகளிலிருந்து எழுகின்ற உள்நாட்டு விலை உறுதிப்பாட்டிற்கான அச்சங்களை அடையாளங்கண்டு, உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதற்கான விதந்துரைப்புக்களை உரிய காலத்தில் வழங்குதல். உள்நாட்டு விலை உறுதிப்பாட்டைப் பேணுவதற்கான செயலாக்கமுள்ள கொள்கைகளை விதந்துரைப்பதற்காக பணவீக்கம், நாணய மற்றும் வட்டி வீத அபிவிருத்திகளை கூர்மையாகக் கண்காணித்தல்.
- பொருளாதாரத்தின் நிலை, மற்றும் ஆளுநரின் வருடாந்த கொள்கை அறிக்கை பற்றிய நாணயக் கொள்கை அறிக்கை, நியதிச்சட்ட ஆண்டு வெளியீடு உள்ளடங்கலான நியதிச்சட்ட வெளியீடுகள், ஏனைய வெளியீடுகள் மற்றும் கொள்கைக் கூற்றுக்கள் என்பவற்றை வேறு திணைக்களங்களின் உதவியுடன் தயாரித்தல்.
- பொருளாதார மற்றும் இறைத் துறை தொடர்பான விடயங்கள் மீது அரசாங்கம், அரசாங்க முகவர்கள் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ஆகியோருக்கு முனைப்புமிக்க கொள்கை ஆலோசனைகளையும் அவதானிப்புக்களையும் வழங்குதல். 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இறை, நாணய மற்றும் நிதியியல் உறுதிப்பாட்டு கொள்கைகளின் ஒருங்கிணைப்புக்கான சபையின் காலாண்டு கூட்டங்களை நடாத்துவதற்கான செயலகமாக தொழிற்படுவது இதில் உள்ளடங்குகின்றது.
- மாதிரியுருவை அடிப்படையாகக் கொண்ட நடுத்தர கால பேரண்டப் பொருளாதார எறிவுகளைத் தொகுத்தல் உட்பட தரவுகளைச் சேகரித்து, தொகுத்து பகுப்பாய்வு செய்வதுடன் கொள்கைகளை உருவாக்குவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் நிறைவேற்றுவதிலும் நாணயக் கொள்கைச் சபை அத்துடன்/ஆளுகைச் சபையின் வழிகாட்டலுக்காக கொள்கை ஆராய்ச்சியை நடாத்தி அத்துடன் பொதுமக்களுக்கு பொருளாதார அபிவிருத்திகள் மீதான தகவல்களைப் பரப்புதல்.
- பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டுடன் தொடர்புடைய விடயங்களை ஒருங்கிணைத்தல்.
- படுகடன் மீள்கட்டமைப்புச் செயன்முறையில் படுகடன் ஆலோசகருடன் தொடர்புகொண்டிருத்தல்
- பன்னாட்டு நாணய நிதியத்தின் நாணய மற்றும் நிதியியல் புள்ளிவிபரக் கையேட்டிற்கமைவாக நாணய புள்ளிவிபரங்களை தொகுத்து வெளியிடுதல்.
- வட்டி வீத புள்ளிவிபரங்களைத் தொகுத்து வெளியிடுதல்.
- பன்னாட்டு நாணய நிதியத்தின் சென்மதி நிலுவை கையேட்டிற்கமைவாக (BPM6) சென்மதி நிலுவை, பன்னாட்டு முதலீட்டு நிலைமை, வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரவியல் மற்றும் வெளிநாட்டுப் படுகடன் புள்ளிவிபரங்கள் என்பவற்றைத் தொகுத்து வெளியிடுவதுடன் விசேட தரவு வெளிப்படுத்தல் தரங்களுக்கான தரவு வெளிப்படுத்தலை ஒருங்கிணைத்தல்.
- பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையினூடாக வங்கிகளிலிருந்து நாளாந்த அடிப்படையில் எல்லை தாண்டிய கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் தரவுகளைச் சேகரித்து சென்மதி நிலுவை தொகுத்தல் மற்றும் கொள்கை உருவாக்க நோக்கங்களுக்காக அத்தரவுகளைப் பயன்படுத்துதல்
- பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் அறிக்கையிடல் நியமங்களுக்கமைவாக வணிகப்பொருள் வர்த்தகப் புள்ளிவிபரங்களைத் தொகுத்து வெளியிடுதல்.
- பன்னாட்டு நாணய நிதியத்தின் அரசாங்க நிதியியல் புள்ளிவிபரங்கள் கையேட்டிற்கமைவாக இறைத்துறை புள்ளி விபரங்களைத் தொகுத்து வெளியிடுதல்.
- பன்னாட்டு எரிபொருள் விலைகள், வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்புத் துறைகள் போன்றவற்றுடன் தொடர்புடைய தகவல்களைச் சேகரித்து, தொகுத்து, பகுப்பாய்வு செய்வதுடன் இத்தகைய துறைகளுடன் தொடர்புடைய கொள்கை பகுப்பாய்வை/ ஆய்வை நடாத்துதல்.
- பன்னாட்டு நாணய நிதியம், தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கி, சார்க் நிதியம் போன்ற பல்புடை முகவராண்மைகளுக்கான தொடர்புகளின் மையப்புள்ளியாக தொழிற்படுவதுடன் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பல்புடை அபிவிருத்தி முகவராண்மையுடன் ஒருங்கிணைப்பதற்கு அரசாங்கத்திற்கு வசதியளித்தல். மேலும், நாட்டிற்கான தரமிடல் முகவராண்மைகளுடனும் பன்னாட்டு முதலீட்டாளர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணி பேரண்டப்பொருளாதார இற்றைப்படுத்தல்களை வழங்குதல்.
- வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடொன்றை நடாத்துவதன் மூலம் மத்திய வங்கிக்குள்ளேயும் வெளியேயும் ஆய்வு மற்றும் அறிவைப் பகிர்வதனூடாக ஆய்வுக் கலாச்சாரமொன்றை ஊக்குவிப்பதுடன் உள்நாடு ரீதியானதும் பன்னாட்டு ரீதியானதுமான ஆய்வுகளையும் கல்விசார் நிறுவனங்கைளயும் இணைப்பதன் வாயிலாக மத்திய வங்கியின் முதன்மையான இதழையும் ஊழியர் கற்கைகளையும் வெளியிடுதல்.
- மத்திய வங்கிக்குள்ளேயும் வெளியேயும் பல்வேறுபட்ட கருத்தரங்குகள், மாநாடுகள், பயிற்ச்சிப்பட்டறைகள், விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றுக்கு வளவாளர்களை வழங்குதல்.
- பேரண்டப் பொருளாதார பகுப்பாய்வின் நன்மைகள் தேவைப்படுகின்றவாறு தேவைப்படுகின்றபோது பல்வேறுபட்ட குழுக்களுக்கும் வெளிநாட்டு நிறுவனச் சபைகளுக்கும் மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்துதல்.
ஊழியர் சேம நிதியம்
- காத்திரமானமானதும் வினைத்திறன்மிக்கதுமான நிதிய முகாமைத்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் நிறுவன ரீதியான இயலாற்றலை அதிகரித்தல்.
- இடர்நேர்வு சீராக்கப்பட்ட உயர்ந்தமட்டத்திலான வருவாயினை உருவாக்குவதற்காக புதிய முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங்கண்டு பொருத்தமானவாறு சொத்துக்களின் ஒதுக்குகளைப் பேணல்.
- விளைவு வளையி, சந்தை திரவத்தன்மை, சந்தை எண்ணப்பாங்குகள் மற்றும் ஏனைய பேரண்டப்பொருளாதாரக் காரணிகள் என்பவற்றின் நடத்தையை பரிசீலனையிற்கொண்டு நிலையான வருமானம் மற்றும் பங்குரிமைமூலதனத்தில் இலக்கிடப்பட்ட சொத்து ஒதுக்குடனும்இரண்டாந்தரச் சந்தையின் வர்த்தகத்துடனும் இசைந்துசெல்லும் விதத்தில் சொத்துப் பட்டியலை மீளாய்வு செய்து மீளசமநிலைப்படுத்தல்.
- நிதியியல் இடர்நேர்வுகளை முகாமைசெய்வதற்கான கட்டமைப்பினை மேம்படுத்தல்.
- தொழில்தருநர்கள், ஊழியர்கள் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ஆகியோரை இணைப்பதற்கு வெப்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட தகவல் தொடர்பூட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்.
- தற்போதுள்ள தரவுத் தளத்தின் தரத்தினை மேம்படுத்தி ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம் மற்றும் தொழில் திணைக்களம் இரண்டிற்குமாக தேசிய அடையாள அட்டையினைப் பயன்படுத்தி இணைக்கப்பட்ட உறுப்பினர் மையத் தரவுத் தளத்தினை தரமுயர்த்துகின்ற செயற்பாடுகளையும் விரைவுபடுத்தல்.
- பணி வழங்கல் மட்டத்தினை மேம்படுத்துவதற்காக ஊழியர் சேமலாப நிதியத் தொழிற்பாடுகள் தொடர்பில் ஆர்வலர்களிடையேயான விழிப்புணர்வினை மேம்படுத்துவதுடன் பூரணமானதும் துல்லியமானதும் இற்றைப்படுத்தப்பட்டதுமான உறுப்பினர் தரவுத்தளத்தினை பேணுவதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றினை செயற்படுத்துதல்.
- அரையாண்டு உறுப்பினர் கணக்குக் கூற்றுக்களை வழங்குவதுடன் வீடமைப்பு கடனுக்கான உறுப்பினர் நிலுவைச் சான்றிதழ்களை வழங்குதல்.
- நாணயச் சபை, தொழில் அமைச்சு மற்றும் நிதியமைச்சிற்கு வருடாந்தக் கணக்குகளை சமர்ப்பித்து கணக்குகளை செய்தித்தாள்களில் வெளியிடுதல்.
- ஊழியர் சேமலாப நிதியத்தின் சேகரிப்புக்களினதும் மீளமைப்புக்களினதும் அத்துடன் ஏனைய கொடுக்கல்வாங்கல்களினதும் துல்லியத்தன்மையினை சரிபார்த்தல்.
- செலுத்தத்தவறிய வீடமைப்புக் கடன் தவணைப் பணத்தை கடன்வழங்கல் நிறுவனங்களுக்கு தீர்ப்பனவு செய்வதுடன் உறுப்பினர்களின் விசாரணைகளுக்கு விரைவாகப் பதிலிறுத்தல்.
- ஊழியர் சேமலாப நிதியத்தின் வெளிவாரி கணக்காய்வினை நடத்துவதற்காக கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு தகவல்களை சமர்ப்பிப்பதுடன் கண்காணிப்புப் பதிலிறுப்புக்களைத் தொகுத்தல்.
- ஆர்வலர்களுக்கு தரவுகள்/ தகவல்கள் என்பவற்றைச் சமர்ப்பித்துப் பரப்புதல்.
- உள்ளகக் கணக்காய்வாளருடன் உள்ளகக் கண்காணிப்பு கூட்டங்களை நடாத்துவதுடன் தொழில் திணைக்களத்துடன் இணைந்து முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தினை நடாத்துதல்.
- ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களம் மற்றும் தொழில் திணைக்களம் இரண்டிற்குமாக தேசிய அடையாள அட்டையினைப் பயன்படுத்தி இணைக்கப்பட்ட உறுப்பினர் மையத் தரவுத் தளத்தினை தரமுயர்த்துகின்ற செயற்பாடுகளையும் விரைவுபடுத்தல்.
- திணைக்களத்திற்கு தேவையான அனைத்து எழுதுகருவிகள், கணனிச் சாதனங்கள், அலுவலகச் சாதனங்கள் மற்றும் தளபாடங்கள் மற்றும் பொருத்துக்கள் என்பவற்றை உரிய நேரத்தில் கொள்வனவு செய்வதுடன் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிப்பதனையும் திணைக்களத்தின் சுமூகமான தொழிற்பாடுகளையும் இயலச்செய்கின்ற பணிகளை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளுதல்.
- ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் இலக்குகளை அடைந்துகொள்ளும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஏனைய திணைக்களங்களுடனும் நிறுவனங்களுடனும் இணைப்புக்களை மேற்கொள்ளுதல்.
வசதிகள் முகாமைத்துவத் திணைக்களம்
- அமைப்பியல் சார்ந்த ஆற்றல்வாய்ந்த தன்மையையும் பணிகளின் தரத்தையும் ஒட்டுமொத்த வினைத்திறனையும் உயர்த்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தினைப் புதிதாக அமைத்து புதிய பொருத்துக்களை மேற்கொள்ளுதல்.
- இலங்கை மத்திய வங்கியின் கட்டடங்களைப் புதுப்பித்தல்/ மீளமைத்தல்
- மின் உருவாக்கிகளையும் மின் தூக்கிகளையும் மின் சாதனங்களையும் நிறுவுதல்/ தரமுயர்த்தல்.
- நிகழ்வு முகாமைத்துவத்தை கவனத்திற்கொண்டு தொடர்பூட்டல் பணிகளை வழங்குதல்.
- பணி ஒப்பந்தங்களை முகாமைசெய்கின்ற அதேவேளை தரத்தை மேம்படுத்தல்.
- கிரமமான பரீட்சிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் முக்கிய பணிகளை (மின்வலு, வெளிச்சம், குளிரூட்டல் மற்றும் குடிநீர்) வழங்குதல்.
- தேவைக்கேற்றவாறு பெறுகை நடவடிக்கைகளுக்கு வசதியளித்தல்.
- நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கியினதும் வெளியிலிருந்தான பணிகளை வழங்குபவர்களினதும் ஊர்திகளின் மூலம் பாதுகாப்பானதும் நேரம் தவறாததுமான போக்குவரத்துப் பணிகளை வழங்குதல்.
நிதித் திணைக்களம்
- இலங்கை மத்திய வங்கிச் சட்டத்துடனும் பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமனத்துடனும் இணங்கியொழுகும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் மாதாந்த மற்றும் வருடாந்த நிதியியல் கூற்றுக்களைத் தயாரித்தல்.
- உபாயத் திட்டங்களின் கீழ் உரிய திணைக்களங்களின் நடவடிக்கைத் திட்டங்களை இணைக்கின்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை தயாரித்தல்.
- மத்திய வங்கியின் வெளிவாரி வழங்குநர்களுக்கும் இலங்கை மத்திய வங்கியின் அலுவலர் உட்பட்ட உள்ளகத் தரப்பினர்களுக்கும் வரவுசெலவுத்திட்ட ஏற்பாடுகளுக்குள் கொடுப்பனவுகளைச் செய்தல்.
- காலமுறையாகவும் துல்லியமாகவும் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதுடன் வெளிநாட்டு நிதியங்களைப் பகிர்ந்தளித்தல்.
- காலமுறையான விதத்தில் அலுவலர் நலன்புரி கடன் மீட்பு முறைமையைப் பேணுதல்.
- ஏற்றுக்கொள்ளத்தக்க இடர்நேர்வு விதிகளுக்குட்பட்டும் ஒப்புதலளிக்கப்பட்ட முதலீட்டுக் கொள்கைக் கூற்று மற்றும் நிதியங்களுக்கு ஏற்புடைத்தான முதலீடு வழிகாட்டல்கள் என்பவற்றிற்கமைவாகவும் முன்மதிமிக்க விதத்தில் முதலீடுகளையும் இலங்கை மத்திய வங்கியின் உள்ளக முதலீட்டு நிதியங்களின் தீர்ப்பனவுகளையும் மேற்கொள்தல்.
- இலங்கை நிதியியல் அறிக்கையிடல் நியமங்களுடனும் பன்னாட்டு சிறந்த நடைமுறைகளுடனும் இணங்கியொழுகும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஐந்தொகையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஓய்வுகால நிதியங்களின் வருடாந்த நிதியியல் கூற்றுக்களைத் தயாரித்தல்.
- வங்கிக்கு பொருளாதார ரீதியாகவும் நன்மைபயக்கும் விதத்திலும் வங்கிக்கான/ வங்கியின் பொருட்கள் மற்றும் பணிகளை பெறுகை செய்தல்/ அகற்றுதல்.
- நிலையான சொத்துக்களின் நேரடிச் சரிபார்ப்பை நடாத்துவதுடன் நிலையான சொத்துக்கள் பதிவேட்டை இற்றைப்படுத்தி நிதியியல் அறிக்கையிடல் தொடர்பான உள்ளக கட்டுப்பாடுகளை காத்திரமான விதத்தில் மேம்படுத்தல்.
நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்
- இலங்கை மத்திய வங்கிக்கு தெரிவிக்கப்படும் நிதியியல் வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளில்/கரிசனைகளில் ஈடுபட்டு இணக்கமான தீர்வொன்றுக்கு வழிவகுத்தல்.
- தற்போதைய ஒழுங்குவிதிகள், நிதியியல் பணி வழங்குநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான தொடர்பு, இலங்கை மத்திய வங்கியின் ஏனைய திணைக்களங்களிடமிருந்தான அவதானிப்புக்கள் மற்றும் இது போன்ற வழக்குகளின் முன்னைய பதிவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனைக்குரிய முறைப்பாடுகளை ஆய்வுசெய்து தேவை ஏற்படின், உடனடி பரீட்சிப்புக்களை நடாத்துதல்.
- நிதியியல் பணி வழங்குநர்களின் பெயர், தொடர்புடைய பொருளின் வகை, முறைப்பாட்டின் தன்மை போன்ற பிரமாணங்களை அடிப்படையாகக்கொண்டு முறைப்பாடுகளை வகைப்படுத்தி, தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தல் திணைக்களங்களுக்கு மாதாந்த அடிப்படையில் முறைப்பாட்டு வகையின் சுருக்கமொன்றை சமர்ப்பித்தல்.
- திணைக்களத்தின் இற்றைப்படுத்தப்பட்ட முறைப்பாட்டு/கரிசனை தரவுத் தளமொன்றைப் பேணுதல்.
- நிதியியல் வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள், கரிசனைகள், மற்றும் விசாரணைகள் போன்றவற்றை கையாள்வதற்கு பொறுப்பாகவுள்ள தொடர்பு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஊழியர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.
- நிதியியல் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைக் கண்காணித்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை அபிவிருத்திகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கிணங்க, வாடிக்கையாளர் பாதுகாப்புடன் தொடர்புடைய கொள்கைகள், விதிகள், ஒழுங்குவிதிகள், பணிப்புரைகள், சுற்றறிக்கைகள், வழிகாட்டல்கள், நடைமுறைகளின் வழங்குதலை வசதிப்படுத்தல்.
- வாடிக்கையாளர் பாதுகாப்புடன் தொடர்புடைய சந்தை நடாத்தல் மேற்பார்வையை திட்டமிட்டு கொண்டுநடாத்துவதுடன் தேவைக்கேற்றவாறும் தேவை ஏற்படும் போதும் நிதியியல் பணி வழங்குநர்களின் உடனடி திருத்த நடவடிக்கைகளை உறுதிசெய்தல்.
- நிதியியல் வாடிக்கையாளரின் அறிவினை மேம்படுத்துவதன் மூலம் அவர்களை வலுப்படுத்துவதற்கு கட்டமைப்புசார்ந்த வாடிக்கையாளர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல்.
- பாடசாலை மாணவர்கள், இளம் யுவதிகள், மற்றும் ஏனைய இலக்கிடல் குழுக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தி ஒட்டுமொத்த நிதியியல் அறிவு மற்றும் தகவலறிந்த நிதியியல் தீர்மானம் மேற்கொள்ளல் செயன்முறையை மேம்படுத்தல்.
- விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்கு உள்ளக மற்றும் வெளியக ஆர்வலர்களை கூட்டிணைத்தல்.
நிதியியல் உளவறிதல் பிரிவு
- தற்கால சந்தை அபிவிருத்திகள் மற்றும் பன்னாட்டு சிறந்த நடத்தைகள் என்பவற்றுக்கிசைவாக பணம் தூயதாக்கலுக்குகெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் மீதான தொடர்புடைய சட்டங்கள், ஒழுங்குவிதிகள், விதிகள் என்பவற்றை மீளாய்தல் மற்றும் திருத்துதல் அதேபோன்று அவற்றை வழங்குவதை ஒருங்கிணைத்தல்.
- பணம் தூயதாக்கலுக்குகெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் பன்னாட்டு நியமங்கள் மற்றும் சிறந்த நடத்தைகளுடன் இணங்கியொழுகுதல்.
- பரஸ்பர மதிப்பீடுகளில் இனங்காணப்பட்ட பணம் தூயதாக்கலுக்குகெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் குறைபாடுகளைத் தீர்ப்பதுடன் தேசிய பணம் தூயதாக்கலுக்குகெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் கொள்கையினை நடைமுறைப்படுத்தல்.
- பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதி நிதியிடல் தொடர்புபட்ட சட்டரீதியான பணிகளை கொண்டுநடாத்துதல்.
- உபாயம் மற்றும் தொழிற்பாட்டு பகுப்பாய்வுகளை நடாத்துவதன் ஊடாக பொருத்தமான சட்ட அமுல்படுத்தல் முகவராண்மைகள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் என்பவற்றுக்கு நிதியியல் உளவறிதலைப் பரவச்செய்தல்.
- இலங்கையில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதி நிதியிடலை முறியடிப்பதற்கு நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில்கள் என்பவற்றில் இடர்நேர்வு அடிப்படையிலமைந்த பணம் தூயதாக்கலுக்குகெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் மேற்பார்வையினை வலுப்படுத்தல்.
- LankaFIN மற்றும், பணம் தூயதாக்கலுக்குகெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் அறிக்கையிடல் மற்றும் பகுப்பாய்வு முறைமை. பற்றிய goAML தொழிற்பாடுகளை நடாத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
- ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபைத் தீh;மானங்களில் இலக்கிடப்பட்ட நிதியியல் தடைகளின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.
- பணம் தூயதாக்கலுக்குகெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் தொடர்புபட்ட கருமங்கள் மீது உள்நாட்டு ஒருங்கிணைப்பினையும் பன்னாட்டு ஒத்துழைப்பினையும் வலுப்படுத்தல்.
- பணம் தூயதாக்கலுக்குகெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் நிறுவனசார் கட்டமைப்பினை மேம்படுத்தல்.
- நிதியியல் நிறுவனங்கள், பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லா வியாபாரம் மற்றும் தொழில்கள், சட்ட அமுலாக்கல் முகவராண்மைகள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் உள்ளடங்கலாக ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்.
- நிதியியல் உளவறிதல் பிரிவு ஆண்டறிக்கை உள்ளடங்கலாக நிதியியல் உளவறிதல் பிரிவு வெளியீடுகளை வழங்குதல்.
- நிதியியல் உளவறிதல் பிரிவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தை அணுகுவதற்கு பிரவேசிக்கவும்:http://fiusrilanka.gov.lk/
மனிதவளத் திணைக்களம்
- நாணயச் சபையின் ஒப்புதலுடன் தேவைப்பாடுகளைப் பொறுத்து, அவசியமான அலுவலரை கிரமமாகவும் பொருத்தமான நேரத்திலும் நியமித்தல்.
- உரிய ஊழியர் வகைப்படுத்தலுக்காக கூட்டத்தொடர்களை/ ஆற்றுப்படுத்தலை நடாத்துதல்.
- வங்கியின் தேவையைப் பொறுத்து குறிப்பிட்ட பணிகளை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளுதல்.
- ஊழியர்களுக்கான செயலாற்ற மதிப்பீட்டு அறிக்கைகளை நடாத்துதல்.
- தரம் மற்றும் வகுப்பு பதவி உயர்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
- ஊழியர்களுக்கான வருடாந்த தொழில் சுழற்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல்.
- முகாமைத்துவத்திற்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளைப் பேணுதல்.
- பட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உள்ளகப் பயிற்சி வழங்குகைக்கு வசதியளித்து ஒருங்கிணைத்தல்.
- இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயிற்சிகளை ஒருங்கிணைத்து வழங்குதல்.
- திணைக்களத்தின் மற்றைய பணிகளையும் திணைக்கள நிருவாக விடயங்களையும் கவனத்திற்கொள்ளல்.
- வங்கி ஊழியர்களின் முக்கியமான தகைமை இடைவெளிகள் உள்ளடங்கலாக பயிற்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல்.
- உள்நாடு மற்றும் வெளிநாட்டு ரீதியான பட்டப்பின்படிப்பு கற்கைகளுக்காக அலுவலர்களுக்கு வசதியளித்தல்.
- குறுங்கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயிற்சி வாய்ப்புக்களுக்காக அலுவலர்களுக்கு வசதியளித்தல்.
- பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக பயிற்சிக் குழுக் கூட்டங்களை ஒருங்கமைத்தல்.
- பயிற்சிக்குப் பின்னரான தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்கான வசதிகளை வழங்கும் பொருட்டு அலுவலர்களுக்கு துணைப் பயிற்சிக் குழுக் கூட்டங்களை ஒருங்கமைத்தல்.
- புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவகங்களிலிருந்து தொழில்சார் தகைமைகளை/ உறுப்புரிமைகளைப் பெறுவதற்கு அலுவலர்களுக்கு வசதியளித்தல்.
தகவல் தொழில்நுட்பவியல் திணைக்களம்
- இலங்கை மத்திய வங்கியின் தகவல்களை செயன்முறைப்படுத்தும் தேவைகளை அடையாளங்காணுதல்.
- கணினிமயப்படுத்தப்பட்ட வியாபாரத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை மென்பொருள் தரத்தை உறுதிசெய்து இலங்கை மத்திய வங்கியின் தகவல் தொடர்பூட்டல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
- வியாபாரத்தை தொடர்வதற்கான உயர்ந்தபட்ச தொழிற்பாட்டு கிடைப்பனவை உறுதிசெய்வதற்கு தற்போதுள்ள முறைமைகளையும் தகவல் தொடர்பூட்டல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பையும் பேணுதல்.
- தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பையும் மீளெளுச்சியையும் மேம்படுத்தும் நோக்குடனும் தகவல் பாதுகாப்பு நிகழ்வுகளை குறைக்கும் நோக்குடனும் வங்கி முழுவதும் பொதுவாக நியமப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு கொள்கையையும் பாதுகாப்பு தொழிற்பாட்டையும் பேணுதல்.
- இலங்கை மத்திய வங்கியின் தகவல் தொழில்நுட்பத்துடன் தொடர்பான பெறுகைகளுக்கு உதவியளித்தல்.
பன்னாட்டு தொழிற்பாடுகள் திணைக்களம்
- தாபிக்கப்பட்ட உபாயச் சொத்து ஒதுக்குக் கட்டமைப்புடன் இசைந்து செல்லும் விதத்தில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை முன்மதியுடைய மற்றும் வினைத்திறன்மிக்க விதத்தில் முகாமை செய்கின்ற அதேவேளை போதுமான திரவத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வருவாய் குறிக்கோள்களை உறுதிப்படுத்தல். பன்னாட்டு ஒதுக்கு முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகள் பின்வருவனவற்றை முக்கியமாக உள்ளடக்குகின்றன;
- வெளிநாட்டுப் பணச் சந்தைச் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், வெளிநாட்டு நிலையான வருமானச் சாதனங்கள், குறுக்கு நாணயம் என்பவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மற்றும் வர்த்தகப்படுத்தல் அத்துடன் தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள்,
- பிணையங்களைக் கடனாக வழங்கல், மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள், வெளிநாட்டு செலாவணி பரஸ்பர பரிமாற்றல் மற்றும் முன்னோக்கிய கொடுக்கல்வாங்கல்கள்,
- அறிந்த மற்றும் வெளிநாட்டு நாணயக் கடப்பாடுகளாக வரக்கூடிய அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு திரவ வெளிநாட்டு நாணயச் சொத்துக்களின் நியதிகளில் திரவத்தன்மையைப் பேணுதல், மற்றும்
- அரசாங்கம் சார்பில் திறைசேரிக் கணக்கிற்கான துணைச் செயலாளரிடமுள்ள நிதியங்களைப் முகாமைசெய்தல்.
- உபாயச் சொத்து ஒதுக்கீட்டிற்கமைவாக மத்திய வங்கி பன்னாட்டு ஒதுக்கு முகாமைத்துவ செயற்பாடுகளின் செயலாற்றம் கொடுகடன் மற்றும் சந்தை இடர்நேர்வு என்பவற்றை கிரமமாக கண்காணித்து அறிக்கையிடல்;
- மத்திய வங்கி பன்னாட்டு ஒதுக்குகளினதும் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளினதும் எண்தொகைகளையும் மத்திய வங்கி பன்னாட்டு ஒதுக்குகளின் காசுப்பாய்ச்சல் கூற்றையும் தொகுத்து மத்திய வங்கி ஐந்தொகையைக் கொண்டு மாத இறுதி ஒதுக்கு நிலைமையை இணங்குவித்தல்.
- இலங்கை மத்திய வங்கியின் சார்பில் இருபுடை நாணய பரஸ்பர உடன்படிக்கையுடன் தொடர்பான பணியை கொண்டு நடாத்துவதை முன்னெடுத்து உதவியளித்து வசதிப்படுத்துவதுடன் உரிய வெளிநாட்டு மத்திய வங்கிகள் மூலம் எடுப்பனவுகளையும் நீடிப்புக்களையும் ஒருங்கிணைத்தல்.
- உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளல்/ வாடிக்கையாளர் உரிய விழிப்புக் கவனம் என்பவற்றுடன் தொடர்புடைய தொடர்புகளை கவனித்து, உரிய விடயங்களை இணங்குவித்து, செயற்பாட்டிலுள்ள வெளிநாட்டு இணைத்தரப்பினர்களின் வருடாந்த உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளல்/ வாடிக்கையாளர் உரிய விழிப்புக் கவனம் மீளாய்வை நடாத்துதல்.
- உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் ஒழுங்கானதும் சுமூகமானதுமான தொழிற்பாடுகளை உறுதிப்படுத்தல். இது பின்வருகின்ற செயற்பாடுகளை உள்ளடக்குகின்றது;
- உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினதும் சேமிப்பு வங்கியினதும் அதிகாரமளிக்கப்பட்ட பணத் தரகர்களினதும் வெளிநாட்டுச் செலாவணித் தொழிற்பாடுகளை தொடர்ச்சியாகக் கண்காணித்தல்,
- சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறைகளினூடாக ஒழுங்குமுறையற்ற சந்தை நிலைமைகளின் கீழ் செலாவணி வீதத்தில் ஏற்படும் மிகையான தளம்பல்களை முகாமைசெய்தல்,
- உரிய ஆர்வலர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் கால முறையானதும் வினைத்திறனானதுமான தகவல்களை வழங்குதல், மற்றும்
- பல்வேறு சந்தையை ஆழப்படுத்துகின்ற செயற்பாடுகளை நிறைவேற்றுதல்
- கடன்பெறுகையல்லாத வளங்களினூடாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புதல்.
உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களம்
- உள்ளகக் கணக்காய்வாளர்கள் நிறுவனத்தின் சர்வதேச தொழில்சார் நடைமுறைக்கு இசைவாக தகவல் முறைமைகள், கணக்காய்வுகள் மற்றும் விசேட கணக்காய்வுகள் உள்ளடங்கலாக இடர்நேர்வு அடிப்டையிலான கணக்காய்வுளை நடாத்துதல்
- இடர்நேர்வு அடிப்டையிலமைந்த வருடாந்த கணக்காய்வுத் திட்டத்தையும் உபாயத் திட்டத்தையும் நடாத்துதல்
- கணக்காய்வுகள் மற்றும் கணக்காய்வுப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் பற்றிய முன்னேற்றத்தைக் கணக்காய்வுக் குழுவிற்கு அறிக்கையிடல்
- கணக்காய்வுக் குழுவின் நடவடிக்களை வசதிப்படுத்தல்
- தர உத்தரவாத மற்றும் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை வழங்குதல்
சட்டத் திணைக்களம்
- மத்திய வங்கியின் தொழிற்பாட்டு நடவடிக்கைகள் உள்ளடங்கலாக கொள்கை வடிவமைத்தலினதும் அதனுடன் தொடர்புடைய முன்னுரிமைகள்/ குறிக்கோள்களினதும் மட்டத்தில் தேசியளவில் முக்கியத்துவம் பெற்ற விடயங்கள் மீது உள்ளக மற்றும் வெளியக ஆர்வலர்களுக்கு சட்டரீதியான உள்ளீட்டை வழங்குதல்.
- புதிய சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் துணை ஒழுங்கு விதிகளை வரைவதன் மூலமும் மத்திய வங்கியின் நாணயச் சபையால் வழங்கப்பட்ட தற்போதுள்ள சட்டங்கள் புதிய சட்டங்களை மீளாய்வு செய்வதன் மூலமும் மத்திய வங்கியின் மூலம் உரிமம்பெற்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய சட்ட மற்றும் ஒழுங்குமுறைபடுத்தல் கட்டமைப்பின் சமகாலத்தன்மையை உறுதிப்படுத்தல்.
- மத்திய வங்கியின் சட்ட ஆர்வங்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய வங்கிற்காகவும் அதற்கெதிராகவும் கோப்பிடப்பட்ட சட்டங்களைக் கையாளுதல்.
- தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறுகைகளை கையாளுதல்;
பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம்
- காலாண்டு ரீதியான நிதியியல் உறுதிப்பாடு மதிப்பீட்டு அறிக்கைகளை நாணயச் சபைக்குச் சமர்ப்பித்தல்
- நிதியியல் துறை இடர்நேர்வு மதிப்பீட்டு அறிக்கைகளை நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவிற்கும் நாணயக் கொள்கை குழுவிற்கும் சமர்ப்பித்தல்
- நிதியியல் நிறுவனங்களின் தாக்குபிடிக்குந்தன்மையை மதிப்பீடு செய்வதற்காக ஒட்டுமொத்த முறைமையையும் பாதிக்கின்ற அழுத்தப் பரிசோதனைகளை நடாத்துதல்.
- சொத்து விலைக் குமிழ்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துவதனையும் அவற்றை கட்டியெழுப்புவதனையும் மதிப்பீடு செய்தல் உள்ளடங்கலாக நிதியியல் உறுதிப்பாட்டினை மதிப்பீடு செய்வதற்காக மாதிரியுருக்களை உருவாக்குதல்.
- உரிய திணைக்களங்களின் ஆலோசனையுடன் நிதியியல் துறை சீர்திருத்தங்களுடன் இணைந்துள்ள பணியை ஒருங்கிணைத்தல்.
- நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு குழுவிற்கும் நிதியியல் முறைமை மேற்பார்வைச் சபைக்கும் செயலகப் பணிகளை வழங்குதல்.
- ஆண்டுதோறும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வினை தயாரித்து வெளியிடுதல்.
- இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை, செத்தெம்பர் 15ஆவது அறிக்கை, அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் போன்ற நியதிச்சட்ட அறிக்கைக்கும் ஏனைய அறிக்கைகளுக்கும் பங்களிப்புச் செய்தல்
- நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குறிகாட்டிகளின் முக்கிய தொகுப்பின் காலத் தொடர்களை உருவாக்குதல்.
- இலங்கை மத்திய வங்கியின் ஏனைய திணைக்களங்களுடனும் வெளிநாட்டு மூலங்களுடனும் ஒருங்கிணைந்து, நிதியியல் உறுதிப்பாட்டிலுள்ள இடர்நேர்வைக் கட்டியெழுப்புவதனை மதிப்பீடு செய்வதற்கு முக்கிய மாறிகளின் தரவுகளை உருவாக்குதல்.
கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களம்
- கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு உட்கட்டமைப்பின் அபிவிருத்திகளுக்கு வசதியளித்து, புதிய கொடுப்பனவு முறைமைகளுக்கான/ பொறிமுறைகளுக்கான முன்மொழிவுகளை பகுப்பாய்வுசெய்து விதந்துரைப்புக்களை உருவாக்குதல்
- ஒழுங்குவிதிகள், பணிப்புரைகள், வழிகாட்டல்கள், சுற்றிக்கைகள், ஏனைய சட்டவாக்க ஆவணங்கள் ஆகியவற்றை வெளியீடுசெய்வதுடன் தேவைக்கேற்ப அத்தகைய ஆவணங்களை மீளாய்வுசெய்து மீள்திருத்தம்செய்தல்.
- கொடுப்பனவு அட்டைகள் மற்றும்/அல்லது செல்லிடத் தொலைபேசி கொடுப்பனவு முறைமைகள் என்பவற்றின் பணி வழங்குநர்களாக தொழிற்படுவதற்கு தகைமையுடைய பணி வழங்குநர்களுக்கு உரிமத்தை வழங்குவதுடன் கொடுப்பனவு அட்டைகள் மற்றும் செல்லிடத் தொலைபேசி கொடுப்பனவு முறைமைகள் தொடர்பில் பணி வழங்குநர்கள் இணங்கியொழுகுவதனை மேற்பார்வை செய்தல்/ கண்காணித்தல்.
- கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமை தொடர்பான தரவுகளை சேகரித்து தொகுத்து பகுப்பாய்வு செய்தல், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் தொடர்பில் தகவல்களைப் பரப்புதல், அத்துடன் காலாண்டு அடிப்படையில் 'கொடுப்பனவுகள் திரட்டு” எனும் வெளியீட்டை வெளியீடுசெய்தல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதுடன் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் முறைமைகள் தொடர்பான பொதுமக்களின் வினாக்களைக் கையாளுதல்.
- நாட்டில் கொடுப்பனவு முறைமைகளுக்கான அதியுயர் தீர்மானத்தை மேற்கொள்ளும் அமைப்பாக விளங்கும் தேசிய கொடுப்பனவு சபையினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கமைவாக புதிய கண்டுபிடிப்புக்களையும் கருத்துக்களையும் அபிவிருத்தி செய்வதனூடாக அல்லது பின்பற்றுவதனூடாக கொடுப்பனவு முறைமை உறுதிப்பாட்டினையும் வினைத்திறனையும் ஊக்குவிப்பதுடன் தேசிய கொடுப்பனவு சபையின் வழிகாட்டலில் ஒப்புதலளிக்கப்பட்ட செயற்பாட்டுப் புள்ளிகள் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தல்.
- ஒழுங்குமுறைப்படுத்தல் பரிசோதனைப் பெட்டியை நிர்வகித்தல்.
- ஒவ்வொரு வியாபார நாளின் மீதும் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகளை செயற்படுத்துவதற்காக பங்கேற்கும் நிறுவனங்களுக்கான முறைமையின் காலமுறையான கிடைப்பனவுடன் கொடுப்பனவு முறைமைகளின் சுமுகமான தொழிற்பாடுகளை உறுதி செய்தல்.
- கொடுப்பனவு முறைமைகள், லங்காசெட்டில் (இது, இலங்கையின் பாரிய பெறுமதி கொடுப்பனவு முறைமையும் பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையுமாகும்) பங்கேற்பாளர்களினதும் லங்கா கிளியர் (பிறைவெட்) லிமிடெட் போன்ற பணி வழங்குநர்களினதும் தொழிற்பாடுகள் தொடர்பில் வியாபாரத் தொடர்ச்சித் திட்டத்தை நடாத்துதல்
- வெளிநாட்டுச் செலாவணி, பணச் சந்தை, பெறுதிகள், உலோகம், மூன்றாம் நாணய வெளிநாட்டுச் செலாவணி மற்றும் நிலையான வருமான பிணையக் கொடுக்கல்வாங்கல்கள் அனைத்தையும் துல்லியாமாக உரிய காலத்தில் தீர்ப்பனவு செய்வதுடன் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய நிலையான வருமான பிணையங்களின் முறி முதிர்ச்சிப் பெறுகைகளையும் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் ஆசியத் தீர்ப்பனவுப் பிரிவால் நடாத்தப்படும் ஆசியத் தீர்ப்பனவு ஒன்றிய கொடுக்கல்வாங்கல்களையும் கண்காணித்து ஆசியத் தீர்ப்பனவு ஒன்றியக் கொடுக்கல்வாங்கல்கள் அனைத்தையும் உரிய காலத்தில் தீர்ப்பனவுசெய்தல்.
- திறைசேரி முகாமைத்துவ முறைமைகளுக்கெதிராக நாஸ்ரோ மற்றும் கட்டுக்காவல் கணக்குகளையும் செயலாற்ற பகுப்பாய்வு கருவி முறைமையையும் இணங்குவித்தல்.
- கொடுப்பனவுகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் துரிதமான செய்திகளினூடாக இடையூறில்லாத தொடர்பூட்டலை உறுதி செய்தல்
- சார்க் கொடுப்பனவு சபை, தெற்கிழக்காசிய மத்திய வங்கிகள் ஆகியவற்றால் நடாத்தப்படும் கூட்டங்களிலும், ஆசியத் தீர்ப்பனவு ஒன்றிய பணிப்பாளர் சபை கூட்டங்களிலும் தொழில்நுட்பக் குழு கூட்டங்களிலும் தொழில்நுட்பக் குழு கூட்டங்களிலும் கலந்து கொள்ளல்.
கொள்கை மீளாய்வு கண்காணிப்புத் திணைக்களம்
- இலங்கை மத்திய வங்கிகளின் குறிக்கோள்களை அடைவதற்கு இலங்கை மத்திய வங்கியின் உபாய மற்றும் நடவடிக்கைத் திட்டத்தை வடிவமைப்பதற்கு உபாய திட்டமிடல் பின்னடைவை நடாத்துதல்.
- நடவடிக்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் காணப்படும் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கும் மதிப்பீடுசெய்வதற்கும் காலாந்தர மீளாய்வுகளை நடாத்துதல்.
- காலமுறையாகவும் வினைத்திறனாகவும் வங்கியின் குறிக்கோள்களை அடைவதை உறுதிசெய்யும் பொருட்டு கூட்டாண்மை முகாமைத்துவக் குழுவிற்கும் நாணயச் சபைக்கும் மேற்கொள்ளப்பட்ட செயன்முறையையும் ஏதேனும் அவதானிப்புக்களையும் விதந்துரைப்புக்களையும் அறிக்கையிடுதல்.
- தெரிவுசெய்யப்பட்ட கொள்கைகள் தொடர்பில் சுயாதீனமான மீளாய்வுகளை நடாத்தி கண்டுபிடிப்புக்களின் கீழ் எடுத்துக்காட்டப்பட்ட ஏதேனும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கு வடிவமைக்கப்பட வேண்டிய மேலதிக கொள்கை வழிமுறைகளை இயலுமைப்படுத்தல்.
பொதுப்படுகடன் திணைக்களம்
நாணய விதிச் சட்டத்தின் 113ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக பொதுப் படுகடன் முகாமைத்துவத்திற்கான அரசாங்கத்தின் முகவரென்ற வகையில், இலங்கை மத்திய வங்கியின் நியதிச் சட்ட பொறுப்புக்களை விடுவித்தல் பொதுப்படுகடன் திணைக்களத்தின் பொறுப்பாகும். பொதுப்படுகடன் திணைக்களத்தின் முக்கிய குறிக்கோள்களும் தொழிற்பாடுகளும் பின்வருவனற்றை உள்ளடக்குகின்றது;
- அரசாங்க நிதியிடல் தேவைகள் முன்மதியுடைய இடர்நேர்வு மட்டத்தில் தாழ்ந்த சாத்தியமான கிரயத்தை முகங்கொடுக்கின்றன என்பதை உறுதிசெய்யும் விதத்தில் அரசாங்கத்தின் படுகடன் தோற்றப்பாட்டை மேம்படுத்துவதற்கான படுகடன் முகாமைத்துவ உபாயத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதுடன் ஆலோசனையை வழங்குதல்.
- அரசாங்கப் பிணையங்கள் சந்தையை அபிவிருத்தி செய்தல், அரசாங்கப் பிணையங்களுக்கான இரண்டாந்தரச் சந்தையை ஆழப்படுத்தி விரிவுபடுத்தல். இதன் மூலம் அரசாங்கப் பிணையங்களுக்கான முதனிலை ஏல பங்கேற்புக்களின் வினைத்திறனை மேம்படுத்துகின்ற அதேவேளை அரசாங்கப் பிணையங்கள் சந்தையின் வெளிப்படைத்தன்மையில் சிறந்த நடைமுறை நியமங்களைக் கடைப்பிடித்தல்.
- ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு அல்லது ஏனைய தொடர்புடைய சட்டவாக்கங்கள்/ அதிகாரங்களுக்கமைவாக நிதி அமைச்சின் ஒப்புதலுக்கிணங்க அரசின் மொத்த பெறுகைத் தேவைப்பாட்டுடன் இசைந்துசெல்லும் விதத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ரீதியான படுகடன் பிணையங்கள் வழங்குதலிலிருந்து நிதியங்களைத் திரட்டுதல்.
- ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு அல்லது ஏனைய தொடர்புடைய சட்டவாக்கங்கள்/ அதிகாரங்களுக்கமைவாக நிதி அமைச்சின் ஒப்புதலுக்கிணங்க அரசின் மொத்த பெறுகைத் தேவைப்பாட்டுடன் இசைந்துசெல்லும் விதத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ரீதியான படுகடன் பிணையங்கள் வழங்குதலிலிருந்து நிதியங்களைத் திரட்டுதல்.
- அரசாங்கத்தின் அப்பழுக்கற்ற படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவை பேணுவதற்கு படுகடனை துல்லியமாகவும் உரிய காலத்திலும் தீர்ப்பனவுசெய்வதன் மூலம் வசதியளித்தல்.
- மத்திய வைப்பக முறைமையில் அரச பிணையங்களின் விபரப் பதிவேட்டைப் பேணுதல்.
- அரச பிணையங்களில் சந்தைக் கொடுக்கல்வாங்கல்கள் மிதமான தீர்ப்பனவுத் தொழிற்பாட்டிற்கு வசதியளிக்கும் பொருட்டு லங்காசெக்குயர் முறைமையைப் பேணுதல்.
- மத்திய அரசின் படுகடன் சொத்துப்பட்டியலின் இடர்நேர்வு முகாமைத்துவத்திற்காக படுகடன் இயக்கவாற்றல் மீது பகுப்பாய்வுகளை முன்னெடுத்தல்.
பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்
- சலுகை கொடுகடன் திட்டங்களை ஒருங்கிணைத்து, வசதியளித்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரதேச அபிவிருத்தியை ஊக்குவிப்பதுடன் முறைசார்ந்த நிதியியல் துறையினூடாக நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளுக்கு உற்பத்தியை நோக்காகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கான கொடுகடன் குறைநிரப்புப் பணிகளை வழங்குதல் அத்துடன் கிராமியச் சமூகத்திடையே அதிகளவான தொழில் வாய்ப்புக்களை உருவாக்குகின்ற அதேவேளை பிரதேச ரீதியான வருமான வேறுபாட்டை குறைத்தல்.
- பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி உதவுதொகைகளையும் கொடுகடன் உத்தரவாதங்களையும் வழங்குவதன் மூலம் தனியாட்கள் மற்றும் சுயதொழில் புரிவோர் உட்பட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளுடன் தொடர்புடைய வேளாண்மை, விலங்குவளர்ப்பு, மீன்பிடி மற்றும் வேறு ஏனைய வருமானத்தை உருவாக்குகின்ற நடவடிக்கை போன்று நாட்டில் பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு கொடுகடன் வசதிகளை வழங்குவதற்கு பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்களை ஊக்குவித்தல்.
- நாட்டின் நிதியியல் வசதிக்குட்படுத்தலை அதிகரிப்பதற்கு இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒருங்கிணைத்து மதிப்பீடுசெய்தல்.
- தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் குறிக்கோள்களுடன் இசைந்து செல்லும் விதத்தில் நாட்டில் குறைவாக பணியாற்றும் துறையை முக்கியமாக இலக்குவைத்து நுண்பாக, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சிகளினதும் பொது மக்களினதும் நிதியியல் அறிவு, தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் கருத்திட்ட முகாமைத்துவ திறன்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கு விழிப்புணர்வையும் இயலாற்றலைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்களையும் நடாத்துதல்.
- சமூகத்தினரிடையே நலமான வாழ்க்கை முறைகளையும் சிறந்த நடத்தைகளையும் அதிகரிப்பதற்கு தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களை பசுமையான கிராமங்களாக மாற்றுவதன் மூலம் சூழலுக்கு இசைவான கிராமியச் சூழலொன்றை ஊக்குவிக்கின்ற அதேவேளை குறைவான பணிகளைப் பெற்றுக்கொள்ளும் மக்களின் வாழ்வாதாரம் மீது கவனத்தைச்செலுத்தி உயர்த்துதல் என்பதுடன் பெறுமதி சங்கிலியைக் கொண்டு வேளாண்மை ஏற்றுமதிகளையும் சந்தையையும் ஊக்குவிக்கின்ற அதேவேளை நிலைபெறத்தக்க அபிவிருத்திக்கான உணவு உற்பத்தித் தரத்தை மேம்படுத்துதல்.
- பிரதேச மட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் பணிகளை பிரதேச அலுவலகங்களினூடாக வழங்குகின்ற அதேவேளை பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளை பிரதேச ரீதியான மன்றங்களினூடாக வலுப்படுத்தி பிரதேச ரீதியான பிரச்சினைகளையும் புதிய வியாபார வாய்ப்புக்களையும் அடையாளங்காண்பதற்கு கள விஜயங்களை மேற்கொள்ளுதல்.
இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் இணங்குவித்தல் திணைக்களம்
இணங்குவித்தல் கண்காணிப்பு
- இலங்கை மத்திய வங்கியின் சகல திணைக்களங்களுக்கிடையிலும் செயல்திறன்வாய்ந்த இணங்குவித்தல் முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்தல்.
- பணம் தூய்தாக்குதலுகக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலுடன் தொடர்புடைய ஏற்கனவே காணப்படுகின்ற சட்டங்களுடனான இலங்கை மத்திய வங்கியின் இணங்குவித்தலை கண்காணித்தல்.
- இலங்கை மத்திய வங்கியின் பணம் தூய்தாக்குதலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் கொள்கைக்கு அமைவாகவும் சர்வதேச ரீதியாக சிறந்த நடைமுறைகளுக்கிணங்கவும் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு இணைத்தரப்பினர்கள் பற்றிய உங்களது வாடிக்கையாளர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்/ வாடிக்கையாளர் உரிய விழிப்புக் கவனம் மீளாய்வுகளை நடாத்துதல்.
- திணைக்கள மட்டத்தில் இனங்காணப்பட்ட முக்கிய இணங்குவித்தல் பிரச்சினைகளை நிதியல்லா இடர்நேர்வு முகாமைத்துவக் குழு, சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழு மற்றும் ஆளும் சபை என்பவற்றுக்கு, தொடர்புக்கு ஏற்றவாறு கொண்டுசெல்லல்.
- இலங்கை மத்திய வங்கி அலுவலர்களுக்காக இணங்குவித்தல் விழிப்புணர்வு அமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடுசெய்தல்.
நிதியியல் இடர்நேர்வைக் கண்காணித்தல்
- உபாயச் சொத்து ஒதுக்கீடுகள், முதலீட்டுக் கொள்கைக் கூற்று மற்றும் பன்னாட்டு ஒதுக்குகளுக்கான முதலீட்டு வழிகாட்டல்கள், உள்முக முதலீட்டு நிதியங்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் மீளாய்வுசெய்து மீள்திருத்துதல்.
- பன்னாட்டு ஒதுக்கங்கள், உள்முக முதலீட்டு நிதியங்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி முகாமைத்துவ செயற்பாடுகளுடன் தொடர்புடைய கொடுகடன் இடர்நேர்வுகளையும் சந்தை இடர்நேர்வுகளையும் சுயாதீனமாக கண்காணித்தல்.
- பன்னாட்டு ஒதுக்கங்கள், உள்முக முதலீட்டு நிதியங்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி முகாமைத்துவ செயற்பாடுகளுடன் தொடர்புடைய உரிய கொள்கைகளும் வழகாட்டல்களும் கடைபிடிக்கப்படுவதை கண்காணித்தல்.
- கொடுகடன் மற்றும் சந்தை இடர்நேர்வுகளை தொடர்புடைய முதலீட்டு மேற்பர்வைக் குழுவிற்கு மாத அடிப்படையிலும், சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழு மற்றும் நாணயச் சபைக்கு காலாண்டு அடிப்படையிலும் அறிக்கையிடுதல்
தொழிற்பாட்டு இடர்நேர்வைக் கண்காணித்தல்
- இலங்கை மத்திய வங்கியின் அனைத்து திணைக்களங்களினூடாக தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதுடன் திணைக்களங்கள் ரீதியான தொழிற்பாட்டு இடர்நேர்வு மதிப்பீட்டிற்கு வசதியளித்தல்
- இடர்நேர்வு முகாமைத்துவக் கொள்கைக் கூற்று, நிகழ்வு அறிக்கையிடல் முறைமைக்கான வழிகாட்டல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாட்டு இடர்நேர்வுப் பகுப்பியலுக்கான வழிகாட்டல் என்பவற்றை மீளாய்வுசெய்து மீள்திருத்துதல்.
- நிதியியலல்லா இடர்நேர்வு முகாமைத்துவக் குழு, சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழு மற்றும் நாணயச் சபை என்பவற்றிற்கு திணைக்களங்கள் மூலம் அறிக்கையிடப்பட்ட தொழிற்பாட்டு இடர்நேர்வுகள் மற்றும் நிகழ்வுகள்/ அண்மைய விடுபாடுகள் என்பவற்றை தேவைப்படின் அதிகரித்தல்.
- இலங்கை மத்திய வங்கியின் தகவல் அறிக்கையிடல் முறைமையை நிர்வகித்தல்.
- இலங்கை மத்திய வங்கியின் அலுவலருக்கான தொழிற்பாட்டு இடர்நேர்வு விழிப்புணர்வை நடாத்துதல்.
செயலகத் திணைக்களம்
- வருடாந்த பெறுகைத் திட்டத்தினை தயாரித்து பொருட்களினதும் பணிகளினதும் திட்டத்திற்கமைவாக பெறுகை செய்யப்படுவதனை உறுதிப்படுத்தல்.
- எழுதுகருவிகள் களஞ்சியசாலையைப் பேணுதல்.
- ஏனைய திணைக்களங்களின் பெறுகை தொடர்பான விடயங்களுக்கு உதவிசெய்தல்.
- அளவீட்டுச் சபை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வங்கியின் தேவையற்ற காலம் கடந்த ஆவணங்களையும் எழுதுகருவிகளையும்; மூலதனமல்லாத ஏனைய விடயங்களையும் ஒருங்கிணைத்து அகற்றுதல்.
- இலங்கை மத்திய வங்கிச் சொத்துக்களின் தனிப்பட்ட இடர்நேர்வுகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் போட்டிவிலைகளில் அச்சொத்துக்களை உள்ளடக்கும் விதத்தில் அனைத்தையுமுள்ளடக்கிய காப்புறுதி காப்பீட்டைப் பெற்றுக்கொள்ளல்.
- அலுவல்சார் ரீதியாக மற்றும்/அல்லது தனிப்பட்ட ரீதியாக வெளிநாடுகளுக்கு விஜயம் செய்கின்ற வங்கி ஊழியர்களுக்கு உதவுதல்.
- விடுப்புக்களையும் வங்கியின் ஏனைய பொதுவான நிருவாக விடயங்களையும் கையாளுதல்.
- வங்கி ஊழியர்களின் பயிற்சிக்கும் திறன் அபிவிருத்திக்குக்கும் வசதியளித்தல்.
- அஞ்சல் அறை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் ஞாபகார்த்த நிகழ்வுகளை நடத்துதல்.
- ஓய்வுகால நன்மைகளைச் செலுத்துவதுடன் ஓய்வுகால திட்டங்கள் தொடர்பான ஏனைய விடயங்களைக் கையாளுதல்.
பாதுகாப்புப் பணிகள் திணைக்களம்
- இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தின் சுற்றுப்புறப் பாதுகாப்பினை வலுப்படுத்தல்.
- பணத்தை கொண்டுசெல்லும் தொழிற்பாடுகளுக்கான பாதுகாப்பினை வலுப்படுத்தல்.
- இலங்கை மத்திய வங்கியின் நிறுவனங்களுக்குள் கண்காணிப்பையும் பாதுகாப்பையும் நடாத்துதல்.
- இலங்கை மத்திய வங்கியின் நிறுவனங்களில் தீப்பிடித்தல் இடர்நேர்வை தணிப்பதற்கு தீ தடுப்பு முறைமையை பேணுதல்.
- வியாபாரத்தை தொடர்ச்சி திட்டத்திற்கு உதவியளித்தல்
- பாதுகாப்பு விடயங்களுக்காக பாதுகாப்பு அமைச்சுடனும் தொடர்புடைய நிறுவனங்களுடனும் தொடர்பைப் பேணுதல்.
- பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு அலுவலர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல்
- இலங்கை மத்திய வங்கியின் வளாகங்களுக்கான நுழைவு/ வெளியேற்றத்தினை முகாமைசெய்தல்.
அலுவலர் பணிகள் முகாமைத்துவத் திணைக்களம்
- வீடமைப்புக் கடன்களுக்கு ஒப்புதலளித்து வழங்குதல்.
- ஊழியர் சேமலாப நிதியத்தையும் அலுவலர் நன்மைகள் திட்டக் கடன்களையும் ஒப்புதலளித்து வழங்குதல்.
- ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்றோருக்கும் சரியான நேரத்தில் தரமான பணிகளை வழங்குவதற்காக SH(M)LS இன்கீழ் வழங்கப்படுகின்ற கடன், வழங்கப்பட்ட கடன்களின் அறவிடல் என்பன மீது துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கான வசதிகளை இயலச்செய்தல்.
- அலுவலர்கள் மற்றும் ஓய்வுபெற்றோரின் மருத்துவ செலவுகளை அவர்களது கோரிக்கையின் படி மீளளிப்பதுடன் தகவல்களை பரப்பும் விடயத்தில் உடனடியான பணிகளை மேற்கொள்ளுதல் என்பதுடன் மருத்துவச் செலவுகளை மீளளித்தல்.
- புதிய பதிவுகளைக் கொண்ட மருத்துவ நன்மையளிப்புத் திட்டத்தின் தரவுத்தளத்தினை இற்றைப்படுத்தல்.
- கடமையிலுள்ள வங்கி அலுவலர்களுக்கு மருத்துவ நிலையப் பணிகளை காத்திரமான விதத்தில் வழங்குதல்.
- சுவைமிக்கதும் ஊட்டச்சத்து மிக்கதுமான காலை உணவையும் மதிய உணவையும் வழங்குவதுடன் உணவு மற்றும் குடிபானங்களுக்கு திணைக்களங்கள் விடுக்கும் விசேட கோரிக்கைகளைப் பூர்த்திசெய்தல்.
- அலுவலர்களுக்கு விரைவான பணிகளை வழங்குவதற்காக நலன்புரிப் பணிகளை மேம்படுத்தி தரமுயர்த்தல்.
- மரண நன்கொடைத் திட்டம், மரண நிவாரண நிதியம், இடர்பாட்டு நிவாரண நிதியம் என்பனவற்றின் கீழான வசதிகளை வழங்குதல் மற்றும் இடர்பாட்டு நிவாரண நிதியம், மரண நிவாரண நிதியம் மற்றும் மரண நன்கொடைத் திட்டம் என்பனவற்றின் முதலீட்டினை/ மேற்பார்வை செய்தல்.
- 24 மணித்தியாலங்களுக்கு அனைத்து ஊழியர்களுக்கும் விபத்துகளுக்கெதிரான காப்பீட்டை வழங்குவதற்கு குழு தனியாள் காப்புறுதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
- திணைக்கள நடவடிக்கைகளில் நிதியியல், தொழிற்பாட்டு மற்றும் இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கான (வினைத்திறனை மேம்படுத்துவதற்கான) கட்டுப்பாட்டு வழிமுறைகளை மேற்கொள்ளுதல்.
- வரவுசெலவுத்திட்டத்தினைத் தயாரித்தல், இலக்குகளை நிர்ணயித்தல், செயலாற்ற மதிப்பீட்டு, முன்னேற்ற அறிக்கைகள், உபாயத்திட்டமிடல் மற்றும் ஏனைய நிருவாக நடவடிக்கைகள்.
புள்ளிவிபரத் திணைக்களம்
- நாணயக் கொள்கைத் தீர்மானமெடுத்தல் செயன்முறைக்கு வசதியளிக்கும் பொருட்டு குறுங்கால பணவீக்கத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் எதிர்வுகூறல்.
- குறுங்கால பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்வுகூறும் செயன்முறைக்கு வசதியளிப்பதற்கான தரவுகளை அதாவது தயாரிப்பிற்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு, கட்டுமாணம் மற்றும் பணிகள் செயற்பாடுகள், பணவீக்க எதிர்பார்க்கை அளவீடு, போக்குவரத்து அளவீடு, வியாபாரத் தோற்றப்பாடு அளவீடு, கொடுகடன் நிரம்பல் அளவீடு, வியாபாரத் தோற்றப்பாடு அளவீடு, கொடுகடன் கேள்வி அளவீடு, கூட்டுச் சந்தை அளவீடு மற்றும் அரச துறை தொழில் நிலை அளவீடு என்பவற்றை சேகரிக்கும் பொருட்டு அளவீடுகளை நடாத்துதல்.
- குறுங்கால பணவீக்க எதிர்வு கூறலுக்கு வசதியளிப்பதற்காக நாடளாவிய ரீதியான தரவுச் சேகரிப்பு முறைமையினூடாகவும் தெரிவு செய்யப்பட்ட நுகர்வோர் உணவுப் பொருட்கள் மீதான 06 சந்தை மையங்களிலிருந்தும் விலைத் தரவுகளைச் சேகரித்தல்.
- சுட்டெண்களை அதாவது மாகாண நுகர்வு விலைச் சுட்டெண்கள், மொத்த விலைச் சுட்டெண், கூலி வீதச் சுட்டெண்கள், சில்லறை விற்பனை அளவுச் சுட்டெண், மொத்த காரணி உற்பத்தித்திறன், காணிகளுக்கான ஆதன விலைச் சுட்டெண்கள், கூட்டுச் சந்தை இல்லங்கள் மற்றும் காணி மதிப்பீட்டுக் குறிகாட்டிகள் என்பவற்றை தொகுத்தல்.
- பெயரளவு நியதிகளில் மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தொகுத்து வெளியிடுதல்
- நாட்டினதும் அதன் மாகாணங்களினதும் ஒட்டுமொத்த சுபீட்சத்தை மதிப்பிடுவதற்கு இலங்கைச் சுபீட்சச் சுட்டெண்ணினைத் தொகுத்து வெளியிடுதல்.
- பணவீக்கம், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலங்கைச் சுபீட்சச் சுட்டெண், புள்ளிவிபரத் திணைக்களத்தின் வெளியீடுகள் மற்றும் வேறு ஏதேனும் விடயங்கள் ஆகியவை தொடர்பில் ஊடக அறிக்கைகளை வெளியிடுதல்.
- நாளாந்த விலை அறிக்கையை வெளியிடுவதுடன் நாளாந்த, வாரந்த மற்றும் மாதாந்த ரீதியாக பொருளாதாரக் குறிகாட்டிகளையும் ஒழுங்கு ரீதியாக பரப்புவதுடன் தரவு நூலகத்தைப் பேணுதல்.
- ஆண்டறிக்கை, அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் அறிக்கை மற்றும் அரசாங்கத்திற்கான இரகசிய அறிக்கை (செத்தெம்பர் 15 அறிக்கை என குறிப்பீடு செய்யப்படும்.) உள்ளடங்கலான நியதிச்சட்ட அறிக்கைகளை தயாரிப்பதில் ஈடுபடல்.
- “இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள்" மற்றும் 'இலங்கையின் சமூகப் பொருளாதார தரவுகள்" போன்ற் வெளியீடுகளை ஆண்டுதோறும் தயாரித்தல்.