முறைசார் நிதிநிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதிச் சேவைகள் தொடர்பான விழிப்பூட்டுதல் நிகழ்ச்சித் திட்டம் - ‘லுனுகம் வெஹர’

முறைசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தாங்கக் கூடிய நிதியியல் சேவைகள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகமானது லுனுகம் வெஹரவிலுள்ள சமுர்த்தி சமூகம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்காக 2018 மே 17ஆம் திகதி மு.ப. 09.00 மணி தொடக்கம் லுனுகம் வெஹரபுராண ரஜ மகாவிகாரையில் நடாத்தியது.

கணக்கியல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

‘கணக்கியல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்’ ஒன்றை காலி மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகமானது காலி சிறு முயற்சியாளர் அபிவிருத்திப் பிரிவின் ஒத்துழைப்போடு 2018 மே 23 அன்று மு.ப. 09.00 மணி தொடக்கம் காலியிலுள்ள சனச வளாகக் கேட்போர்கூடத்தில் நடாத்தியது.

புத்தகம் பதிதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

புத்தகம் பதிதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்’ ஒன்றை காலி மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்காக, இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகமானது காலி சிறு முயற்சியாளர் அபிவிருத்திப் பிரிவின் ஒத்துழைப்போடு 2018 மே 23ஆம் திகதி காலியிலுள்ள சனச வளாகக் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தியது.

கல்வி கண்காட்சி ‘பிபிதென விஜய – 2018’ – அ/விஜய தேசிய பாடசாலை, கெடம்மன

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறைப் பிரதேச அலுவலகத்தினால் 2018 மே 24-24ஆம் திகதிகளில் அ/விஜய தேசிய பாடசாலை, கெடம்மனவில் ‘பிபிதென விஜய – 2018’ கல்விக் கண்காட்சியில் மத்திய வங்கியின் வெளியீடுகளின் விற்பனை நிலையம் ஒன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

சிற்றுடமையாளர் வேளாண்மை வியாபாரப் பங்குடமை நிகழ்ச்சி (SAPPI) தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால், இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் சனாதிபதி செயலகத்தின் திட்ட முகாமைத்துவப் பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலுள்ள வங்கியாளர், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையிலுள்ள மூத்த அரச உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிற்றுடமையாளர் வேளாண்மை வியாபார பங்குடமை நிகழ்ச்சி தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம் 2018 யூன் 04ஆம் திகதி மு.ப.

2017ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளவாறு பொருளாதார நிலைமை தொடர்பான கல்விக் கருத்தரங்கு

2018 யூன் 05ஆம் நாள் மு.ப. 09.00 மணிக்கு ருஹ{ணு பல்கலைக்கழகத்தின் சமூகவிஞ்ஞானம் மற்றும் மனிதவளங்கள் பீடத்தின் கேட்போர்கூடத்தில், 2017ஆம் ஆண்;டறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளவாறு பொருளாதார நிலைமை தொடர்பான கல்விக் கருத்தரங்கு மாத்தறை மாவட்டத்தின் ஆசிரியர்களுக்காகவும், ருஹ{ணு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்காவும் மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகம், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் வங்கிக் கற்கைகளுக்கான நிலையம், இராஜகிரிய ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஒழுங்கு செய்யப்பட்டது.

‘கல்விக் கருத்தரங்கு' - எலக்கக இடைநிலைப் பாடசாலை, பெந்தோட்ட

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் பென்தோட்ட எலக்கக இடைநிலை பாடசாலை மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ‘கல்விக் கருத்தரங்கு’ ஒன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கோட்போர் கூடத்தில் 2018 செத்தெம்பர் 06 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

பன்னல பொன்டறா பயிற்சி செயன்முறை மற்றும் பண்ணைக்கான வெளிப்பாட்டு விஜயம்

இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் பன்னல பொன்டறா செயன்முறை மற்றும் பயிற்சிப் பண்ணைக்கான தென் மாகாண பாற்பண்ணையாளர்களின் வெளிப்பாட்டு விஜயம் 2018 யூன் 07ஆம் நாள் மு.ப. 09.00 முதல் இடம்பெற்றது.

"கல்விக் கருத்தரங்கு" - கரன்தெனிய மத்திய கல்லூரி

கரன்தெனிய மத்திய கல்லூரி மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 ஒத்தோபர் 11 அன்று மு.ப 8.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் 67 மாணவர்கள் பங்குபற்றினர்.

"கல்விக் கருத்தரங்கு" - தெய்யந்தர தேசிய பாடசாலை

தெய்யந்தர தேசிய பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 செத்தெம்பா 12அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 60 மாணவர்கள் பங்கேற்றனா்.

Pages