கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 ஓகத்தில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் தயாரித்தல் நடவடிக்கைகளின் சுருக்கம் மெதுவடைதலையும் எடுத்துக்காட்டின.
தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 ஓகத்தில் 49.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, நடுநிலையான அடிப்படை அளவை அண்மித்துச் சென்று முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் தயாரித்தல் நடவடிக்கைகளில் மீட்சிக்கான சமிக்ஞைகளை எடுத்துக்காட்டியது. துணைச் சுட்டெண்களைக் கருத்திற்கொள்கையில், புதிய கட்டளைகள் மற்றும் நிரம்பலர் விநியோக நேரம் என்பன மாதகாலப்பகுதியில் அதிகரித்த அதேவேளை உற்பத்தி மற்றும் தொழில் நிலை ஆகியன சுருக்கமடைந்தே காணப்பட்டன.















