Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

முறிவடைந்த உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளுக்கு புத்துயிரளிப்பதற்காக ஆலோசனைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது (நாணயச் சபை) ஐந்து (5) முறிவடைந்த நிதிக் கம்பனிகளுக்காக அதாவது இக்கம்பனிகளின் உரிமங்கள் ஒன்றில் இரத்துச்செய்யப்பட்டுள்ள அன்றில் இடைநிறுத்தப்படடுள்ள சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், ஈரிஐ பினான்ஸ் லிமிடெட், ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட், த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மற்றும் த ஸ்ராண்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட் என்பவற்றுக்கான சாத்தியமான புத்துயிரளித்தல் தெரிவுகளைப் பரீட்சிப்பதற்கு 2021 ஒத்தோபரில் முறிவடைந்த நிதிக் கம்பனிகளை புத்துயிரளிப்பதற்கான ஆலோசனைக் குழு (குழு) ஒன்றினைத் தாபித்தது. மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து முறிவடைந்த நிதிக் கம்பனிகளுக்காகவும் சாத்தியமான புத்துயிரளித்தல் தெரிவுகளைப் பரிந்துரைக்கும் அல்லது அத்தகைய புத்துயிரளித்தல் தெரிவுகள் சாத்தியமற்றுக் காணப்படுமாயின் தீர்த்துக்கட்டுவதைப் பரிந்துரைக்கும் பொறுப்பு இக்குழுவிற்கு நாணயச் சபையினால் உரித்தளிக்கப்பட்டிருந்தது.

மேலே குறிக்கப்பட்ட கம்பனிகளில் நான்கின் (4) புத்துயிரளித்தலுக்காக வேறுபட்ட தரப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளையும் கவனமாகப் பரிசீலித்ததன் பின்னர் இக்குழு அதன் இறுதி அறிக்கையினை 2022.05.31 அன்று நாணயச் சபைக்குச் சமர்ப்பித்தது.

வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருத்தல் மீதான வரையறைகளை, நியதிகளை மற்றும் நிபந்தனைகளைத் திருத்துதல்

பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமையினுள் கொண்டுவரும் நோக்குடன், நிதி அமைச்சர்  2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளைக்கு  பின்வருமாறு திருத்தமொன்றினை வழங்கியுள்ளார். 

  1. இலங்கையிலுள்ள, அல்லது வதிகின்ற ஆளொருவரினால் உடமையில் வைத்திருக்கப்படும் வெளிநாட்டு நாணயத் தொகையை ஐ.அ.டொலர் 15,000 இலிருந்து ஐ.அ.டொலர் 10,000 அல்லது வேறு வெளிநாட்டு நாணயங்களில் அதற்குச் சமனான தொகைக்குக் குறைத்தல்.
  2. வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்ற  இலங்கையிலுள்ள, அல்லது வதிகின்ற ஆட்களுக்காக பின்வருவனவற்றுக்காக கட்டளைத் திகதியிலிருந்து (2022 யூன் 16) செயற்படத்தக்கவாறு 14 வேலை நாட்களைக் கொண்ட பொதுமன்னிப்புக் காலத்தை வழங்குதல்: 

i.கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கில் வைப்பிலிடுதல், அல்லது 

இலங்கை மத்திய வங்கியானது பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையினை ஆரம்பித்துள்ளது

அனைத்தையுமுள்ளடக்கிய எல்லைகளுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல் கண்காணிப்பு முறைமையொன்றினை தேசிய ரீதியிலான முக்கிய முன்னுரிமையொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவையினை அடையாங்கண்டு இலங்கை மத்திய வங்கியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பனவற்றின் பங்கேற்புடன் பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமை எனப்படும் புதிய தரவு சேகரிப்பு முறைமையொன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளது. பன்னாட்டு கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் முறைமையானது எல்லைகளுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல் தொடர்பிலான அனைத்தையுமுள்ளடக்கிய தரவு சேகரிப்பு முறைமையொன்றாகக் காணப்படுவதுடன் தற்போதுள்ள பல்வேறுபட்ட தரவு இடைவெளிகளை நிரப்புவதனையும் நோக்காகக் கொண்டுள்ளது. இது புள்ளிவிபர மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆகிய இரு நோக்கங்களுக்குமான பெறுமதியான உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் பல்வேறு அம்சங்களில் கொள்கை உருவாக்கத்திற்குத் துணைபுரியும்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2022 மே இல் மேலும் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013ஸ்ரீ100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஏப்பிறலின் 33.8 சதவீதத்திலிருந்து 2022 மே இல் 45.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்;கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைகளினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 45.1 சதவீதத்திலிருந்து 2022 மே இல் 58.0 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 23.9 சதவீதத்திலிருந்து 2022 மே இல் 34.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2022 மே

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 மேயில் குறைவடைந்த செயலாற்றத்தினைக் காண்பித்தன.

தயாரிப்பு முகாமையாளர் கொள்வனவு சுட்டெண்ணானது ஏப்பிறல் மாதத்தில் பருவகால ரீதியாக குறைவான பெறுமதியிலிருந்து 13.9 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2022 மேயில் 50.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. 

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2022 மேயில் 42.4 சுட்டெண் பெறுமதிக்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்து தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் பணிகள் நடவடிக்கைகளில் சுருக்கத்தை எடுத்துக்காட்டியது. 

முழுவடிவம்

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 ஏப்பிறல்

2022 ஏப்பிறலில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச் செலவினம் குறைவடைந்த அதேவேளையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்து காணப்பட்டது. சுங்கத்திலிருந்தான தற்காலிகமான தரவுகளின்படி, இறக்குமதியில் ஏற்பட்ட இக் குறைவானது 2022 மேயில் வேகத்தை கூட்டியுள்ளது. இதன் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்க சுருக்கமொன்றினைப் பதிவுசெய்துள்ளது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஏப்பிறலில் மிதமான செயலாற்றமொன்றினைக் காண்பித்தன. இருப்பினும், 2022 மேயில் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீளெழுச்சியடைந்து வெளிநாட்டு நடைமுறைக்கணக்கின் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளித்தது. அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 ஏப்பிறல் மாத காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தொடர்ந்து காணப்பட்ட அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு, முறைசார சந்தை நடவடிக்கைகளைக் குறைக்கவும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தை செலாவணி வீதங்களுக்கிடையிலான இடைவெளியைச் சுருக்கவும் உதவிய திறந்த கணக்குகள் மற்றும் சரக்குக் கொடுப்பனவுகள் முறைமைகள் மீதான கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய வங்கி 2022 மேயில் அறிமுகப்படுத்தியது. மேலும், மத்திய வங்கியானது அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் 2022 மே 13 முதல் வங்கிகளுக்கிடையிலான சந்தையில் முன்னைய நாளில் நிர்ணயிக்கப்பட்ட செலாவணி வீதத்தின் அடிப்படையில் தளம்பல் தன்மையின் அளவு (அனுமதிக்கக்கூடிய இரு பக்க மாறுபாட்டு எல்லையுடன்) குறித்த தினசரி வழிகாட்டலை வழங்கத் தொடங்கியது. இப்புதிய ஏற்பாடுகளின் நடைமுறைப்படுத்தலானது இதுவரையிலான செலாவணி வீத நிர்ணயத்தில் பாரியளவிலான உறுதிப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்