Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 04 – 2022 மே

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மே 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 13.50 சதவீதம் மற்றும் 14.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மைய காலத்தில் பணவீக்கம் உயர்வடைந்து காணப்படுமென எறிவுசெய்யப்பட்ட போதிலும் 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் சபையினால் எடுக்கப்பட்ட கணிசமான கொள்கைசார்ந்த வழிமுறைகள், திரண்ட கேள்வி அழுத்தங்கள் உறுதியடைவதைக் குறைப்பதற்கான ஏனைய வழிமுறைகளுடன் ஒன்றிணைந்து எதிர்வரவுள்ள காலப்பகுதியில் பணவீக்க எதிர்பார்க்கைகள் மேலும் உயர்வடைவதனை கட்டுப்படுத்துவமற்கும் பணவீக்க அழுத்தங்களை தளர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதென நாணயச்சபை கருதுகின்றது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 ஏப்பிறல்

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், பருவகால போக்குகளைத் தொடர்ந்தும் அத்துடன் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினை எடுத்துக்காட்டியும் 2022 ஏப்பிறலில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, தயாரித்தல் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது முன்னைய மாதத்திலிருந்து 21.4 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட வீழ்ச்சியுடன் 2022 ஏப்பிறலில் 36.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. மாச்சு மாதத்தின் பருவகால உச்சத்துடன் ஒப்பிடுகையில் உற்பத்தி, புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச் சுட்டெண்களில்; அறிக்கையிடப்பட்ட குறிப்பிடத்தக்க குறைவுகள் இதற்குக் காரணமாக அமைந்தன.    

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 மாச்சு

ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2022 மாச்சில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறியளவிலான வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்திருந்தபோதிலும் தொடர்ச்சியாக பத்தாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டது. அதேவேளை, இறக்குமதிச் செலவினம் 2021 பெப்புருவரியிலிருந்து முதற்தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்கதொரு வீழ்ச்சியினைப் பதிவுசெய்தது. இதன் விளைவாக 2022 மாச்சில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வர்த்தகப் பற்றாக்குறையானது வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 மாச்சில் குறிப்பிடத்தக்கதொரு மேம்பாட்டினைக் காண்பித்தன. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 மாச்சு மாத காலப்பகுதியில் தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஒரு நாளுக்குள்ளே செலாவணி வீதத்தில் ஏற்படுகின்ற பாரியளவிலான தளம்பலினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வங்கிகளுக்கிடையிலான சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதத்தின் நடுத்தர வீதம் மற்றும் வேறுபாட்டு எல்லையினை மத்திய வங்கி 2022 மே 13 தொடக்கம் வெளியிட ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 பெப்புருவரி

2022 பெப்புருவரியில் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சும் வகையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் காணப்பட்ட உத்வேகம் தொடர்ச்சியடைந்தது. அதேவேளை, இறக்குமதிச் செலவினமும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 பெப்புருவரியில் சிறிதளவு வீழ்ச்சியடைந்த போதிலும் ஆண்டிற்காண்டு அடிப்படையில் கணிசமானளவு அதிகரித்து காணப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2022 பெப்புருவரி மாதத்தில் முன்னைய ஆண்டின் இதே மாத காலப்பகுதியைக் காட்டிலும் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியினைக் காண்பித்திருந்தது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 பெப்புருவரியில் தொடர்ந்தும் மிதமடைந்தன. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் மாத காலப்பகுதியில் தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன. வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது பெப்புருவரி மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 202 ரூபாவாகக் காணப்பட்டது.

இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலைத் இலங்கை மத்திய வங்கி தொடங்கிவைத்தது

இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலை 2022 மே 06 அன்று ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் தொடங்கிவைத்தது. இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தல் என்பது சுற்றாடல் ரீதியாக நிலைபெறத்தக்க பொருளாதார நடவடிக்கைகளை வரைவிலக்கணம்செய்து வகைப்படுத்துவதுடன் 2019இல் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் நிலைபெறத்தக்க நிதிக்கான வழிகாட்டலில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய செயற்பாட்டு விடயமொன்றாகக் காணப்படுகின்ற வகைப்படுத்தல் முறைமையொன்றாகும். இவ்வகைப்படுத்தலானது, பன்னாட்டு ரீதியான சிறந்த நடத்தைகளுக்கு இசைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்நாட்டு பின்னணிக்கு ஏற்றவிதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் இரண்டினூடாகவும் பசுமை நடவடிக்கைகளுக்கு குறைந்த செலவில் நிதியளித்தலைத் திரட்டுவதற்கு இது நிதியியல் சந்தை பங்கேற்பாளர்களை இயலச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 ஏப்பிறலில் 29.8 சதவீதத்திற்குத் தொடர்ச்சியாக அதிகரித்தது. உணவுப் பணவீக்கம் 46.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் 22.0 சதவ

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மாச்சின் 18.7 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 29.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இத்தகைய அதிகரிப்பானது 2022 ஏப்பிறலில் உணவு மற்றும் உணவல்லா ஆகிய இரு வகைப்படுத்தல்களினதும் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மாச்சில் 30.2 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 46.6 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மாச்சின் 13.4 சதவீதத்திலிருந்து 2022 ஏப்பிறலில் 22.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

 

Pages

சந்தை அறிவிப்புகள்