இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 ​ஒத்தோபா்

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2023 ஒத்தோபரில் தயாரித்தல் நடவடிக்கைகளில் மெதுவடைந்த சுருக்கத்தையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டின. 

தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 ஒத்தோபரில் 49.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, மாதகாலப்பகுதியில்  அடிப்படை அளவினை அண்மித்தது. துணைச் சுட்டெண்களைக் கருத்திற்கொள்கையில், மாதகாலப்பகுதியில் புதிய கட்டளைகளும் கொள்வனவு இருப்புக்களும் அதிகரித்த அதேவேளை, உற்பத்தி மற்றும் தொழில்நிலை என்பன சுருக்கமடைந்து காணப்பட்டன.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 ஒத்தோபரில் 56.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, பணிகள் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் விரிவடைதலை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இதற்கு முன்னிலை வகித்திருந்தன. எவ்வாறிருப்பினும், நிலுவையிலுள்ள பணிகள், தொழில்நிலை என்பன மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்து காணப்பட்டன.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, November 15, 2023