இலங்கையில் பணம் மாற்றல் சேவைகளை வழங்குகின்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அல்லது வேறு தொடர்புடைய அதிகாரிகளினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், முறைசார்;ந்த முறைமைக்கு வெளியில் தொழிற்படுகின்ற ஒரேமாதிரியான சேவைகளை வழங்குகின்ற சில நிறுவனங்கள் பணம் மாற்றல் முறைமைக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் தொடர்பான நிதியிடல் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பிற்கு உட்படுத்தப்படாது தொழிற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
















