Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

Release of ‘Economic and Social Statistics of Sri Lanka – 2024’

‘Economic and Social Statistics of Sri Lanka – 2024’, an annual release of socio-economic statistics of the Central Bank of Sri Lanka, is now available for public access.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2024 யூலை

2024 யூலையில் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட விரிவாக்கமொன்றிற்கு மத்தியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் என்பவற்றிலிருந்தான அதிகரித்தளவிலான உட்பாய்ச்சல்களினால் உந்தப்பட்டு வெளிநாட்டுத் துறையானது தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினைக் கொண்டிருந்தது.

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 யூலையில் விரிவடைந்து (ஆண்டிற்காண்டு), 2024இன் இதுவரையான காலப்பகுதியில் உயர்ந்தளவிலான மாதாந்த வர்த்தகப் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2024 யூலை

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 யூலையில் மேலும் அதிகரித்து, 62.9 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்தது. பல்தரப்பு முகவராண்மைகள் மூலம் நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மூலம் முன்னிலைவகித்து கட்டடவாக்கப் பணிகளில் உறுதியான அதிகரிப்பினை பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2024இன் முதலாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி, 2024இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 6.9 சதவீதத்தினால் அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளும் இவ்வதிகரிப்புக்குப் பங்களித்து முறையே 8.5 சதவீதம், 8.5 சதவீதம் மற்றும் 3.7 சதவீதம் கொண்ட வருடாந்த அதிகரிப்பினைப் பதிவுசெய்தன.   அரையாண்டு அடிப்படையில், காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியும் அதன் துணைக் குறிகாட்டிகளும் 2023இன் இரண்டாம் அரையாண்டில் பதிவாகிய பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில் 2024இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் உயர்வான வீதத்தில் அதிகரித்தன. மேலும், கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது வர்த்தக மற்றும் வதிவிட காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளுடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதத்தில் அதிகரித்தது.

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை அறிக்கை ஓகத்து 2024இனை வெளியிடுகின்றது

மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2024இற்கான அதன் இரண்டாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. இவ்வறிக்கையின் உள்ளடக்கமானது 2024 யூலை மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2024 யூலை

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 யூலையில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 யூலையில் 59.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டியது. இம்மேம்பாட்டிற்கு அனைத்து துணைச் சுட்டெண்களும் சாதகமாகப் பங்களித்தன. 

Pages

சந்தை அறிவிப்புகள்