2024 ஏப்பிறலில் ஏற்றுமதிகள் இறக்குமதிகளிலும் பார்க்க அதிகரித்து (ஆண்டிற்காண்டு) வர்த்தகப் பற்றாக்குறையினைக் குறைவடையச் செய்தன. இருப்பினும், 2024 சனவரி தொடக்கம் ஏப்பிறல் வரையான காலப்பகுதிக்கான ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது விரிவடைந்து காணப்பட்டது.
பருவகாலப் போக்குடன் இசைந்து செல்லும் விதத்தில் 2024 ஏப்பிறலில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மெதுவடைந்து காணப்பட்டபோதிலும் சுற்றுலாத் துறையின் உத்வேகம் தொடர்ந்து காணப்படுகின்றது.
ஏனைய பணிகள் துறைகளிற்கான உட்பாய்ச்சல்களும் 2024இன் முதல் நான்கு மாதங்களில் தொடர்ந்தும் வலுவடைந்து காணப்பட்டன.
வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைத் திரவத்தன்மை என்பவற்றிற்குத் தொழிலாளர் பணவனுப்பல்கள்; தொடர்ந்தும் குறிப்பிடத்தக்களவு பங்களித்தன.
அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சல்கள் 2024 ஏப்பிறலிலும் தொடர்வடைந்தன.
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2024 ஏப்பிறல் இறுதியளவில் ஐ.அ.டொலர் 5.5 பில்லியனாக விளங்கி, 2023 இறுதியிலிருந்து ஐ.அ.டொலர் 1 பில்லியன் தொகை அதிகரிப்பைப் பதிவுசெய்தன.
இலங்கை ரூபாவானது 2024 மே இறுதி வரையான ஆண்டு காலப்பகுதியில் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டது.