கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021ஸ்ரீ100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 ஏப்பிறலின் 1.5 சதவீதத்திலிருந்து 2024 மேயில் 0.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது.
ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவு வகையில் காணப்படும் பொருட்களின் விலைகள் 2024 மேயில் மாற்றமின்றிக் காணப்பட்டன (அதாவது, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு அண்டு) 2024 ஏப்பிறலின் 2.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024 மேயில் 0.0 சதவீதமாக காணப்படுகின்றது). எவ்வாறியிருப்பினும், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2024 ஏப்பிறலின் 0.9 சதவீதத்திலிருந்து 2024 மேயில் 1.3 சதவீதமாக உயர்வடைந்தது. மாதத்திற்கு மாதம் அடிப்படையில் பணவீக்கமானது தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, உணவு வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.37 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளினதும் உணவல்லா வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.20 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளினதும் காரணமாக கொ.நு.வி.சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2024 மேயில் -0.57 சதவீதமாகப் பதிவாகியது. அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2024 ஏப்பிறலின் 3.4 சதவீதத்திலிருந்து 2024 மேயில் 3.5 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.