இலங்கை நிதியியல் அறிவு வழிகாட்டல் 2024-2028 இனை மத்திய வங்கி அங்குரார்ப்பணம் செய்கின்றது

இன்று அதாவது, 2024 மே 21 அன்று இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் நிதியியல் அறிவு வழிகாட்டலை அங்குரார்ப்பணம்செய்து, இலங்கையின் நிதியியல் இயலளவுகளை மேம்படுத்துவதை நோக்கிய முக்கிய படிமுறையினை அடையாளப்படுத்தியது. இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் அத்திவாரமான இவ்வழிகாட்டலானது இலங்கையர்களின் நிதியியல் நடத்தையினை மேம்படுத்தி, அவர்களின் நிதிசார் தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலிமைப்படுத்தும் பொதுவானதோர் குறிக்கோளை நோக்கி நிதியியல் அறிவு முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களையும் அணிசேர்த்து அவர்களுக்குச் சான்று அடிப்படையிலான வழிகாட்டலை வழங்குகின்றது. பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் வருகின்ற தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தினூடாக மத்திய வங்கியின் தலைமையில் பல்வேறு பங்குதாரர்களுக்கிடையிலான கூட்டான முயற்சிக;டாக உருவாக்கப்பட்ட இவ்வழிகாட்டல் நிதியியல் வசதிக்குட்படுத்தலைப் பேணிவளர்த்து, வாடிக்கையாளர் பாதுகாப்பினை மேம்படுத்தி நிதியியல் உறுதிப்பாட்டினை வலிமைப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மத்தியில் சிறந்த நிதிசார் பழக்கவழங்கங்களை வளர்த்து, ஒட்டுமொத்த நிதியியல் இயலளவுகளையும் மேம்படுத்துவதை மையப்படுத்தி, உள்நாட்டுச் சந்தையில் கிடைக்கப்பெறுகின்ற பல்வேறு வகையான நிதியியல் உற்பத்திகளை அறிந்து பொறுப்புடன் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கு இவ்வழிகாட்டல் நாடுகின்றது. தற்போதைய பொருளாதார தோற்றஅமைப்புக்கு மத்தியில் எதிர்கால தலைமுறையினரின் நிதிசார் எண்ணப்பாங்கினை வடிவமைக்கும் முக்கியத்துவத்தினை அங்கீகரித்து, முன்மதிமிக்க மற்றும் பொறுப்புமிக்க நிதியியல் நடத்தைகளையும் இது வலியுறுத்துகின்றது.

வழிகாட்டலை நிறைவுசெய்தலானது நிதியியல் அறிவு பங்குதாரர்கள் கூட்டாக இணங்கிக்கொண்ட தொடரான நடவடிக்கைகளை உள்ளடக்குகின்ற அனைத்தையும் உள்ளடக்கிய நடவடிக்கைத் திட்டமொன்றாகும். நடவடிக்கைத் திட்டமானது அவர்களின் தொடர்புடைய நிறுவனசார் வகிபாகங்கள் மற்றும் பொறுப்புக்களை விளக்கி வழிகாட்டலை செயல்திறன்வாய்ந்த விதத்தில் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்கின்றது. இம்முயற்சியினை மெய்ப்பிப்பதற்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நிதியியல் ஆதரவு இரண்டையும் வழங்கிய மிக முக்கிய பங்காளராக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் விளங்குகின்றது

[நிதியியல் அறிவு வழிகாட்டல் பொதுமக்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் கிடைக்கப்பெறுகின்றது www.cbsl.gov.lk.]

முழுவடிவம்

Published Date: 

Tuesday, May 21, 2024