இலங்கை மத்திய வங்கி பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்களின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை அதிகாரியாக தொழிற்படுதல்

இலங்கையில் பணம் மாற்றல் சேவைகளை வழங்குகின்ற வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அல்லது வேறு தொடர்புடைய அதிகாரிகளினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும், முறைசார்;ந்த முறைமைக்கு வெளியில் தொழிற்படுகின்ற ஒரேமாதிரியான சேவைகளை வழங்குகின்ற சில நிறுவனங்கள் பணம் மாற்றல் முறைமைக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் தொடர்பான நிதியிடல் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பிற்கு உட்படுத்தப்படாது தொழிற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இதனை நிவர்த்திசெய்வதற்காக, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் 2005ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 2024 ஏப்பிறல் 20ஆம் திகதியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவைவழங்குநர்கள் ஒழுங்குவிதிகளை வழங்கினார். அதற்கமைய, 2024 யூன் 03 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் பதிவுசெய்யப்படாத அல்லது உரிமமளிக்கப்படாத பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்கள் அவர்களது தொழிற்பாடுகளை முறைசார்ந்ததாக ஆக்கிக்கொள்வதற்கும் முறையான வழிக;டாக பணம் மாற்றல் தொழிலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பினை வழங்குவதற்கும் அவர்;கள் பதிவுசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டுமென அனைத்து பணம் அல்லது பெறுமதி மாற்றல் சேவை வழங்குநர்களையும் இவ்வொழுங்குவிதிகள்  தேவைப்படுத்துகின்றது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, June 12, 2024