Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2016 மேயில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருள் துணைத்துறை தவிர்ந்த உணவல்லா அனைத்து வகைகளும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்தின் அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளன.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 ஏப்பிறலில் 2.6 சதவீதத்திலிருந்து 2016 மேயில் 2.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 பெப்புருவரி

வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தமை, சுற்றுலாப் பயணிகளின் வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் வடிவில் ஏற்பட்ட வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல் என்பன தொடர்ந்தும் உறுதியான வேகத்தில் வளர்ச்சியடைந்தமையின் காரணமாக 2016 பெப்புருவரி மாத காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைக் காட்டியது. இம்மாத காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்தபோதும், எரிபொருள் இறக்குமதிகள், உணவு மற்றும் குடிபானங்கள் மற்றும் போக்குவரதது; சாதனங்கள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி வர்த்தகப் பற்றாக்குறையில் சுருக்கத்தினை ஏற்படுத்தின. எனினும், அரச பிணையஙக்ள் சந்தையும 'கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும்' இக்காலப்பகுதியில் தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவு செய்தன.   

முழுவடிவம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரினால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் தொடர்பாக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட பிழையான தகவல்கள் தொடர்பிலான விளக்கம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரச நிதியினைப் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரொருவரினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளது.  

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரோ அல்லது வேறு எந்தவொரு அலுவலருமோ தமது சொந்தச் செலவுகளுக்காக அரச நிதியினை பயன்படுத்தவில்லை என்பதனையும் எந்தவிதத்திலேனும் அரச நிதியினைத் தவறாகப் பயன்படுத்தவில்லையெனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுக் கொள்ளவிரும்புகின்றது. அனைத்து அலுவல்சார் கடமைகள் தொடர்பிலும் ஆளுநரும் இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கலந்துகொள்ளும் நிகழ்வுடன் தொடர்பிலுமான செலவினங்கள் மற்றைய அமைச்சு அல்லது திணைக்களங்களின் பொதுவான நடைமுறைகளை ஒத்தவிதத்திலேயே மத்திய வங்கியினாலும் வழங்கப்படுகின்றன.  

இலங்கையிற்கான ஐ.அ.டொ. 1.5 பில்லியன் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு பன்னாட்டு நாணய நிதியம் ஒப்புதலளிக்கிறது

இலங்கையின் சென்மதி நிலுவையின் நிலைமைக்கு ஆதரவளிப்பதற்கும் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த செயற்றிட்டத்திற்கு ஆதரவாகவும் சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 1.1 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) பெறுமதியான விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு 2016 யூன் 03 அன்று பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை ஒப்புதலளித்தது. இத்தொகையானது பன்னாட்டு நாணய நிதியத்தினுடனான நாட்டின் தற்போதைய பொறுப்புப் பங்கின் 185 சதவீதத்திற்கு சமமானது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான சிறப்பு எடுப்பனவு உரிமைகள் 119.9 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 168.1 மில்லியன்) பெறுமதியான முதலாவது தொகுதி இலங்கைக்கு உடனடியாக கிடைக்கதக்கதாக செய்யப்படும். எஞ்சிய தொகையானது மூன்று ஆண்டுகளைக்கொண்ட காலப்பகுதியில் ஆறு தொகுதிகளாக வழங்கப்படுவதுடன், கடைசி தொகுதியானது 2019 ஏப்பிறலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மீது இயைபுள்ள வட்டி வீதமானது, தற்போது நிலவும் ஆண்டிற்கு 0.05 சதவீத சிறப்பு எடுப்பனவு உரிமை வட்டி வீதத்திற்கு சமமான அடிப்படை கட்டண வீதத்துடன் 100 அடிப்படை புள்ளிகளாகும்.

திறைசேரி முறிகளின் ஏலங்கள் தொடர்பாக நாணயச் சபையின் அறிக்கை

இது, 2016 மாச்சு பிற்பகுதியில் இடம்பெற்ற திறைசேரி முறிகளின் ஏலங்கள் தொடர்பான அண்மைய கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பானதாகும். இக்கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் போதுமானளவிற்கு வெளிப்படையான தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளை ஏலமிடுவது தொடர்பில் 2015 பெப்புருவரியிலிருந்து முழுமையாகச் சந்தையினை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறைகளைப் போன்ற நடைமுறைகளே இப்பொழுதும் பின்பற்றப்பட்டிருக்கிறது என்ற உண்மையின்பால் பொதுமக்களின் கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம்.  

2016 ஏப்பிறலில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம் (2013=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மார்ச்சின் 2.2 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வெறியமல்லா குடிவகைகள்; வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; ஆடைகள் மற்றும் காலணிகள் தளபாடங்கள்; வீட்டுஉபயோகச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு உபயோகப் பொருட்கள்;  நலன்; போக்குவரத்து; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; கல்வி; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத்துறைகள் என்பன ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்தன.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 மார்ச்சில் பதிவுசெய்யப்பட்ட 2.4 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 2.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

Pages

சந்தை அறிவிப்புகள்