உலகளாவிய கொள்கை வகுப்பாளரான நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழு பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலையும் ஏனைய தொடர்பான உலகளாவிய குற்றங்களையும் ஒழிக்கும் பொருட்டு> பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தொடர்பில் 40 விதந்துரைப்புக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமம்> நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் பிராந்திய இணைப்புச் சபையாகவும் இப்பிராந்தியத்தில் நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் விதந்துரைப்புக்களுக்கு இணங்கியொழுகும் மட்டத்தினை கண்காணிக்குமொருவராகவும் தொழிற்படுகின்றது. இலங்கை ஆசிய பசுபிக் குழுமத்தின் நிதியிடும் உறுப்பினராக விளங்குகிறது.
நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழு சட்டம்> நிறுவன ரீதியான கட்டமைப்பு என்பனவற்றை மதிப்பிடுவதுடன் நாடுகளின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் தொடர்பான வழிமுறைகள் காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதனையும் பிராந்திய கண்காணிப்புச் சபைகளினூடாக மதிப்பிட்டும் வருகிறது. இலங்கை 2006இல் ஆசிய பசுபிக் குழுமத்தின் 1ஆவது பரஸ்பர மதிப்பீட்டிற்கும் 2014Æ15 காலப்பகுதியில் 2ஆவது பரஸ்பர மதிப்பீட்டிற்கும் உட்பட்டிருந்தது. 2015 யூலையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை மீதான 2ஆவது பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கையானது பரஸ்பர மதிப்பீட்டின் போது அடையாளம் காணப்பட்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான / பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலில் காணப்படும் குறைபாடுகளை திருத்தியமைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க வேண்டுமென இலங்கைக்கு விதந்துரைத்தது.
இதனைத் தொடர்ந்து> இலங்கை> குறைபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக> தேசிய பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் கொள்கையினைப் பின்பற்றுதல்> நிதியியல் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களை நெருங்கிக் கவனித்தல் மற்றும் நிதியியல் நிறுவனங்களுக்கான இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை மேற்பார்வை செய்தலை அறிமுகப்படுத்தியமை உட்பட தொடர்ச்சியாகப் பல வழிமுறைகளை நடைமுறைக்கிட்டது. அதேநேரம்> பரஸ்பர மதிப்பீட்டின் போது எடுத்துக்காட்டப்பட்ட குறைபாடுகளை திருத்துவதற்கான நிறுவன ரீதியான நடவடிக்கைத் திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டது. அடையப்பட்ட முன்னேற்றங்களின் அடிப்படையில் ஆசிய பசுபிக் குழுமம் மேலும் 9 விதந்தரைப்புக்களைத் தரமுயர்த்தியதுடன் பாரிய இணங்குவிப்பு மட்டத்திற்கான ஓரளவு இணங்குவிப்பாக ஆரம்பத்தில் தரமிடப்பட்டமையானது இணங்குவிப்பு/ பாரிய இணங்குவிப்பிற்கான விதந்துரைப்புக்களின் எண்ணிக்கையினை 21இற்குக் கொண்டு வந்தது.
2016 ஒத்தோபரில்> நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழு> பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தொடர்பான முன்னேற்றத்தின் காத்திரமான தன்மையினை மதிப்பிடுவதற்காக நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் பன்னாட்டு ஒத்துழைப்பு மீளாய்வுக் குழுமத்தின் மீளாய்விற்குட்படுத்தப்படும் என்பது பற்றி இலங்கைக்கு அறிவித்திருக்கிறது. பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகளின் பின்னர்> நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவானது பன்னாட்டு ஒத்துழைப்பு> மேற்பார்வை> சட்ட ரீதியான ஆட்கள் மற்றும் அழிவினை உண்டாக்கும் ஆயுதப் பெருக்கங்கள் மீதான ஒழுங்குகள் மற்றும் இலக்கிடப்பட்ட நிதியியல் தீர்மானங்கள் (வட கொரியா மற்றும் ஈரான்) ஆகிய 4 துறைகளில் போதுமான முன்னேற்றத்தினை அடையவில்லையென அறிவித்தது. இதன் விளைவாக> நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழு 2017 ஒத்தோபரில் ஆர்ஜென்ரினாவின் பியூனஸ் எயார்ஸ்சில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கையினை நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவின் இணங்குவிப்பு ஆவணத்தில் காணப்படும் உபாய ரீதியான பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் குறைபாடுகளுடன் கூடிய நியாயாதிக்கமொன்றாக இலங்கையைப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இது மிகப் பொதுவாக “சாம்பல் நிறப் பட்டியல்” என அடையாளம் காணப்படுகிறது. பட்டியலிடப்பட்டமையினைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்ட உபாயக் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக கால அட்டவணைக்குட்பட்ட நடவடிக்கைத் திட்டமொன்று இலங்கைக்கு வழங்கப்பட்டது.
2017 நவெம்பரில் பட்டியலிடப்பட்டதிலிருந்து> இலங்கை அதிகாரிகள் குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரங்கள் மற்றும் தொழில்களுக்காக 2018ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வாடிக்கையாளரை நெருங்கிக் கவனியுங்கள் மற்றும் அழிவினை உண்டாக்கும் ஆயுதப் பெருக்கங்கள் மீதான இலக்கிடப்பட்ட நிதியியல் தீர்மானங்கள் தொடர்பில் வட கொரியாவிற்கான ஒழுங்குவிதிகளை விடுத்தல் போன்ற பணம் தூயதாக்கலுக்கெதிரானÆ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் இணங்குவிப்பினை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றனர்.
மேலும்> நிதி அமைச்சின் 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் குற்றவியல் விடயங்கள் சட்டத்திற்கான திருத்தத்தினை அறிமுகப்படுத்தல்> கம்பனிகள் பதிவாளரின் 2007ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்தல்> வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஈரான் மீதான அழிவினை உண்டாக்கும் ஆயுதப் பெருக்க இலக்கிடப்பட்ட நிதியியல் தீர்மானங்கள் மீதான ஒழுங்குவிதிகளை விடுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தy;; தகுதி வாய்ந்த அதிகாரியினால் (பாதுகாப்பு அமைச்சு) வட கொரியா மீது விடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நடைமுறைப்படுத்தல் மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் குறித்துரைக்கப்பட்ட நிதியல்லா வியாபாரம் மற்றும் தொழில்களுக்கான இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட பணம் தூயதாக்கலுக்கெதிரானÆ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் மேற்பார்வையினை அறிமுகப்படுத்தல் என்பன உட்பட பல நடவடிக்கைகள் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்> ஏற்கனவேயுள்ள மேற்பார்வையாளர் குழுவிற்கு கூடுதலான தகைமை வாய்ந்த அலுவலர்களை ஒதுக்கியிருப்பதன் மூலம் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் மேற்பார்வையினை வலுப்படுத்த பல வழிமுறைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவினால் உருவாக்கப்பட்டுள்ள நடவடிக்கைத் திட்டத்தின் செயற்பரப்பினைப் பரிசீலனையில் கொண்டு பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் நியமங்களை உயர்த்துவதற்காக> நாட்டிலுள்ள அனைத்து ஆர்வலர்களினதும் கடப்பாடுகளையும் இணைப்பதற்காக> நிதியியல் உளவறிதல் பிரிவின் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் கொள்கையை உருவாக்குகின்ற சபையான தேசிய இணைப்புக் குழுவினால் ஆற்றல்வாய்ந்த கட்டமைப்பொன்று நடைமுறைக்கிடப்பட்டிருக்கிறது. எனவே> இலங்கை அதன் இணங்குவிப்பினை மேம்படுத்துவதற்காகவும் நாட்டின் தரமிடலை மேம்படுத்துவதற்காகவும் அதற்கு வழங்கப்பட்ட கால கட்டமைப்பொன்றிற்குள் நடவடிக்கைத் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.