இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2018 சனவரி

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பர் 59.1 சுட்டெண் புள்ளிகளிலிருந்து சனவரி மாதத்தில் 51.7 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது, 2017ம் வருட காலப்பகுதியில் இறுதி இரு மாதங்களிலும் அவதானிக்கப்பட்ட பருவகால உயர்வுக்கு பின்னர் தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 திசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சனவரி மாதத்தில் ஒரு குறைவான வீதத்தில் வளர்ச்சியடைந்தமையினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்களினால் உந்தப்பட்டது. மேலும், 2017 திசெம்பருடன் ஒப்பிடுகையில் தொழில்நிலை துணைச்சுட்டெண்ணும் மாதகாலப்பகுதியில் மெதுவடைந்திருந்த வேளையில், கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண் மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு குறைவான வீதத்தில் நீட்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண் தவிர அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை சனவரி மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது.

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 திசெம்பர் 61.2 சுட்டெண் புள்ளியிலிருந்து சனவரி மாதத்தில் 56.6 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. இது பணிகள் துறை நடவடிக்கைகளானது பிரதானமாக புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள், நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகளுக்கான துணைச்சுட்டெண்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2018 சனவரியில் ஒரு குறைவான வீதத்தில் அதிகரித்திருந்தது. 2018 சனவரியில் தொழில்நிலை வீழ்ச்சியடைந்திருந்த வேளையில், இது தொடர்ச்சியான இரு மாதங்களுக்காக நிலுவையிலுள்ள பணிகளின் விரிவாக்கத்திற்கு பகுதியளவில் செல்வாக்கு செலுத்தியிருந்தது. ஆண்டின் ஆரம்பத்தில், புதிய வியாபாரங்கள் மற்றும் வியாபார செயற்பாடுகளிலான செயற்பாடற்ற விரிவாக்கம் காரணமாக 2017 திசம்பரில் காணப்பட்ட வலுவான நடவடிக்கை மட்டமொன்றுடன் ஒப்பிடுகையில் இந்த நடவடிக்கைகள் பருவகால அடிப்படையில் குறைவாக இருந்தமையே காரணமாகும். வியாபார நடவடிக்கைகளின் விரிவாக்கமானது பணிகள் விநியோக வழிமுறைகளின் விரிவாக்கம் காரணமாக பிரதானமாக நிதியியல் துறையில் அவதானிக்கப்பட்டது. தொழில்நிலையானது பிரதானமாக நிதியியல்துறை, நலத்துறை மற்றும் உண்மைச்சொத்து நடவடிக்கைகள் துறைகளில் ஓய்வுபெற்ற அல்லது விலகிச்சென்ற தொழிலாளர்களின் இடைவெளிகளினை நிரப்பமுடியாமையினால் வீழ்ச்சியடைந்தது. எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் செலவு அதிகரித்தமைக்கு கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் 2018 இல் ஊதிய அதிகரிப்புகளும் காரணமாக அமைந்தன.

முழுவடிவம்

Published Date: 

Thursday, February 15, 2018