Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 பெப்புருவரி

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் பெப்புருவரியில் 57.1 கொண்ட சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 சனவரியுடன் ஒப்பிடும் போது 0.9 சுட்டெண் புள்ளிகள் அதிகரிப்பை காட்டியது. இது, புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்ணில் பிரதிபலிக்கப்பட்டவாறு  வருகின்ற புத்தாண்டுகால பருவத்திற்கான அதிகரிக்கும் கட்டளைகள் பெரிதும் காரணாமாக இருந்ததோடு பெப்புருவரி 2017ல் தயாரிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக விரிவாக்கத்தினை குறித்துக்காட்டியது. நீடிக்கும் நிரம்பலர் வழங்கல் நேரத்தில் பிரதிபலிக்கப்பட்டவாறு சனவரி மாதத்தில் சேர்த்துக்கொள்ளப்படட இருப்புகளின் பாவனை மற்றும் மூலப்பொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்கள் கொள்வனவுகள் இருப்பு துணைச் சுட்டெண் பெப்புருவரியில் குறைவடைந்தமைக்கு காரணமாக அமைந்தது. தொழில்நிலைச் துணைச்சுட்டெண் அதிகரித்திருந்த வேளையில் உற்பத்தி துணைச்சுட்டெண் மாற்றமடையாமல் காணப்பட்டது. பெப்புருவரி மாதத்தில் காணப்பட்ட குறைந்த வேலைநாட்கள் அதிகரிக்கும் கேள்விகளுக்கு ஏற்ற வகையில் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு ஒரு தடையாக காணப்பட்டது.

ரூபா 1 நாணயக் குத்தியினதும் ரூபா 5 நாணயக் குத்தியினதும் உலோகத்தினை/ கலப்பு உலோகத்தினை மாற்றுதல்

புதிதாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ள ரூபா 1 நாணயக் குத்தியினதும் ரூபா 5 நாணயக் குத்தியினதும் உலோகங்கள்/கலப்பு உலோகங்கள் பித்தளை முலாமிடப்பட்ட உருக்கிலிருந்து (தங்க நிறம்) துருப்பிடிக்காத உருக்கிற்கு (வெள்ளி நிறம்) மாற்றப்பட்டிருப்பது பற்றி பொதுமக்களுக்கு இத்தால் அறியத்தரப்படுகிறது. 5 ரூபா நாணயக் குத்தியின் விளிம்பிலுள்ள எழுத்துக்கள் புதிய துருப்பிடிக்காத உருக்கிலான குத்தியில் நீக்கப்பட்டுள்ளன. பரிமாணம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட மற்றைய அனைத்து விபரங்களும் 2005 இலிருந்து சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட ரூபா 1 மற்றும் ரூபா 5 நாணயக் குத்திகளை ஒத்ததாகவே தொடர்ந்தும் இருக்கும். 

குறிப்பிட்ட புதிய நாணயக் குத்திகள் கொடுப்பனவிற்காக இலங்கையில் சட்ட ரீதியான நாணயமாக இருக்குமென்பதுடன் சுற்றோட்டத்திலிருக்கும் பொழுது அவை இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாகவும் இருக்கும்.

 

 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 நவெம்பர்

2016 நவெம்பர் காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைப் பதிவுசெய்தது. ஏற்றுமதி வருவாய்கள் சிறிதளவு வீழ்ச்சியடைந்தமைக்கிடையில் இறக்குமதிச் செலவினம் உயர்வடைந்தமையின் காரணமாக 2016 நவெம்பர் காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2016 நவெம்பரில் இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கு இடைநிலைப் பொருட்கள் மற்றும் முதலீட்டுப் பொருட்களின் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் தொழிலாளர் பணவலுப்பல்கள் இம்மாத காலப்பகுதியில் சிறிதளவு வீழ்ச்சியடைந்தன. அரச பிணையங்கள் சந்தை நவெம்பர் மாதத்தில் தேறிய வெளிப்பாய்ச்சலைக் காட்டிய வேளையில் கொழும்பு பங்கு சந்தைக்கான தேறிய பாய்ச்சலும் அரசிற்கான நீண்டகால கடன்பெறுகைகளும் 2016 நவெம்பரில் சென்மதி நிலுவைக்கு ஆதரவளித்தன.

முழுவடிவம்

பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றத்தினை ஆராய்வதற்கான ப.நா.நிதிய அலுவலர்களின் இலங்கை விஜயம் நிறைவு பெற்றிருக்கிறது

தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும். 

திறைசேரி முறிகள் வழங்கல்கள் மீதான வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பிலான இலங்கை மத்திய வங்கியின் விளக்கம்

இலங்கை மத்திய வங்கியானது அரச பிணையங்களின் வழங்கல் தொடர்பில் திருத்தப்பட்ட 1937ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவு தொடர்பில் பின்பற்றப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் பின்வரும் தனது விளக்கத்தினை வழங்க விரும்புகின்றது. 

1. பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டமானது பதிவு செய்யப்பட்ட பங்குகள், அரச வாக்குறுதிச் சான்றிதழ்கள், கொண்டுவருபவர் முறிகள் மற்றும் திறைசேரி முறிகள் போன்றவற்றினை வழங்கும் நோக்கத்திற்காக இயற்றப்பட்டது. 

நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதி தொடர்பான செயலமர்வு

இலங்கை மத்திய வங்கி, உலக வங்கிக் குழுமத்தின் உறுப்பினரான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தினால் முகாமைப்படுத்தப்படும் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் வலையமைப்புடன் கூட்டாக இணைந்து 2017 பெப்புருவரி 28ஆம் நாள் மத்திய வங்கி, கொழும்பின் ஜோன் எக்ஸ்ரர் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதி" என்ற தலைப்பில் செயலமர்வொன்றினை நடத்துவதற்கு ஒழுங்குகளைச் செய்திருக்கிறது. இச்செயலமர்வில் பிரதம விருந்தினராக மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டு பிரதான உரையினை ஆற்றுவார். 

Pages

சந்தை அறிவிப்புகள்