வௌிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 யூன்

இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2018 யூனில் கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. யூன் மாத காலப்பகுதியில் உண்மை நியதிகளிலான வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டுப்பகுதியில் குறைவான மட்டத்தைப் பதிவுசெய்த போதிலும் இறக்குமதிச் செலவினங்களின் வளர்ச்சியானது ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பினை விட கூடுதலாகக் காணப்பட்டதன் விளைவாக 2017 யூனில் வர்த்தகப் பற்றாக்குறையானது குறிப்பிடத்தக்களவில் விரிவடைந்தது. 2017 யூனுடன் ஒப்பிடும் போது மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறைவடைந்த போதிலும் ஆண்டின் ஆரம்பத்தில் அவதானிக்கப்பட்ட வளர்ச்சிப் போக்கின்படி 2018 யூனில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. சென்மதி நிலுவையின் நிதிக் கணக்கானது பன்னாட்டு நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிய வசதியின் ஐந்தாவது தொகுதி மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுக முதலீட்டின் மீள்பெறுகையின் மூன்றாவது தொகுதி என்பவற்றினால் துணையளிக்கப்பட்ட போதிலும் அரசாங்கப் பிணையங்கள் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சல்கள் மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் இரண்டாந்தரச் சந்தை நடவடிக்கைகள் போன்றன சென்மதி நிலுவையின் மீது சில அழுத்தங்களைப் பிரயோகித்தன. உள்நாட்டு மற்றும் பூகோள வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைகளின் அபிவிருத்தியைப் பிரதிபலிக்கும் முகமாக இலங்கை ரூபாவானது 2018 யூன் இறுதியளவில் ஐ.அ.டொலருக்கெதிராக 3.4 சதவீதத்தினாலும் மற்றும் 2018 ஓகத்து 27 வரையான ஆண்டுப்பகுதியில் 5.0 சதவீதத்தினாலும் தேய்வடைந்தது. நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018 யூன் இறுதியில் ஐ.அ.டொலர் 9.3 பில்லியனாகக் காணப்பட்டது.

 

முழுவடிவம்

Published Date: 

Monday, August 27, 2018