
2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஏனைய தொடர்புடைய குற்றங்கள் மீதான புலனாய்வுகளையும் வழக்குத் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைஃ உளவறிதல்களை பகிர்ந்து கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியில் 2017 திசெம்பர் 13ஆம் நாளன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை இலங்கைக் பொலிசுடன் செய்திருக்கின்றது.
பொலிஸ்மா அதிபர் திரு. பூஜித ஜயசுந்தர அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் எச். அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.