நாணயச் சபையானது சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதியினை நிதி வியாபாரச் சட்டத்தின் 37(3)ஆம் பிரிவிற்கமைய 2018.03.05 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்தது.
2010ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க (திருத்தப்பட்டவாறு) இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் ஒழுங்குவிதிகளிற்கமைய (இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதிகள்) 2018 ஓகத்து 27 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என்பதை இலங்கை மத்திய வங்கி மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது.
கொடுப்பனவுக்கான கோரிக்கையினை முன்வைத்த சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் தகுதிவாய்ந்த வைப்பாளர்களுக்கான கொடுப்பனவுகள் செலுத்தி முடிக்கப்படும் வரை இச்செயன்முறையானது தொடர்ந்து நடத்தப்படும். ஆகையால் இலங்கை மத்திய வங்கியானது அலுவல்சார் ரீதியாக அவர்களுடைய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கும் வரை தகுதிவாய்ந்த வைப்பாளர்கள் பொறுமையாகக் காத்திருக்கும்படி தாழ்மையாகக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும், 2018.07.25 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் ஸ்ரான்டட் கிறெடிட் பினான்ஸ் லிமிடெட்டின் அனுமதியினை இரத்துச் செய்வதற்கு நாணயச் சபை தீர்மானித்ததன்படி தகுதிவாய்ந்த வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைய எதிர்காலத்தில் செலுத்தப்படும்.