அண்மைக்கால ஊடக அறிக்கைகள் மற்றும் வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் தாய்க் கம்பனியான ஈஸ்ட் வெஸ்ட் புறப்பட்டீஸ் பிஎல்சியினால் கொழும்பு பங்குச் சந்தைக்கான கம்பனி வௌிப்படுத்தல்கள் மீது இலங்கை மத்திய வங்கியின் அவதானம் வேண்டப்படுகின்றது.
ஊழிய சேம நிதியத் திணைக்களமானது வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் பங்குகளை எச்பிஎல் புறப்பட்டீஸ் குழுமத்திற்கு விற்பனை செய்வதற்கு வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் தலைவரினால் அனுப்பப்பட்ட கடிதத்தை 2018 யூன் மாதத்தில் பெற்றுக்கொண்டது. தொடா்ச்சியாக ஊழிய சேம நிதியமானது இது தொடா்பாக பல கலந்துரையாடல்களை வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெடுடன் நடாத்தியது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் பங்குகளில் ஊழிய சேம நிதியத்தின் பங்குரிமை மூலதனம் தொடா்பான மதிப்பீடொன்றினைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்ததுடன் அம்மதிப்பீட்டுச் செயன்முறைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
உறுப்பினர்களின் நன்மைகளை உச்சப்படுத்துவதற்காக நிதியத்திற்குப் பொருத்தமான வருவாயினைப் பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்துவதற்காக விற்பனைக்கு முன்னர் வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டில் ஊழிய சேம நிதியத்தின் பங்குரிமை தொடா்பான ஒரு முழுமையான மதிப்பீட்டினை செய்துகொள்வது அவசியமானதாகும். ஆகவே, ஊழிய சேம நிதியம் மதிப்பீட்டினைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதனை வலியுறுத்த விரும்புகின்றது.