தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு மாதத்திலிருந்து 20.1 சுட்டெண் புள்ளிகள் குறைவடைந்து ஏப்பிறல் மாதத்தில் 45.5 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்வதன் மூலம் சரிவடைந்திருந்தது. முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட உயர் மட்டத்திலான நடவடிக்கைகளை தொடர்ந்து ஏப்பிறல் மாதத்தில் காணப்பட்ட புத்தாண்டு விடுமுறைகள் தயாரிப்பு நடவடிக்கைகளை பின்னோக்கி இழுத்தத்துடன் முன்னைய வருடங்களில் அவதானிக்கப்பட்ட போக்கிற்கு ஏற்ற விதத்திலும் காணப்பட்டது. ஏப்பிறல் மாதத்தில் கொ.மு.சுட்டெண்ணில் காணப்பட்ட சரிவிற்கு உற்பத்திகள் மற்றும் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட சரிவுகளே பெரிதும் காரணமாக அமைந்தன. கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் இம்மாதகாலப்பகுதியில் குறைவடைந்திருந்தன. மேலும், நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரம் இம்மாதகாலப்பகுதியில் மெதுவடைந்ததுடன் நிரம்பலர்கள் குறைந்தளவில் பரபரப்பாக காணப்பட்டமையினை பகுதியளவில் சுட்டிக்காட்டுகின்றது.