இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய வழங்குநர் மற்றும் முன்னுரிமை பிணையளிக்கப்படாத தரப்படுத்தல்களை B1 (எதிர்மறை) இலிருந்து B2 (நிலையானது) இற்கு தரம் குறைப்பதற்காக 2018 நவெம்பர் 20 அன்று மூடிஸ் முதலீட்டாளர் சேவையினால் (மூடிஸ்); எடுக்கப்பட்ட தீர்மானமானது நாட்டின் பேரண்டப் பொருளாதார அடிப்படைகளை முறையாகப் பிரதிபலிக்கவில்லை எனவும் இது அடிப்படையற்றது எனவும் இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது.
இலங்கையின் பேரண்டப் பொருளாதார நிலைமையானது நாட்டின் அரசியல் சூழ்நிலையில் அண்மைக்கால போக்குகளுக்கு மத்தியிலும் 2018 யூலையின் மூடியின் பிந்திய தரப்படுத்தல் தீர்மானத்திற்கு பின்னர் சீர்குலைந்தோ அன்றில் ஏதேனும் கொள்கையில் நழுவலையோ கொண்டிருக்கவில்லை என்பதனை இலங்கை மத்திய வங்கி வழியுறுத்த விரும்புகின்றது. உண்மையில், திருப்திகரமான நிகழ்ச்சித் திட்ட செயலாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அதிகாரிகளுக்கும் பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் இடையில் 2018 ஒத்தோபர் 26 அன்று விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித் திட்டத்தின் 5ஆவது மீளாய்வினைத் தொடர்ந்து அலுவலர் மட்ட இணக்கமொன்று ஏற்பட்டதுடன் 2018 ஒத்தோபர் 29 அன்று உடன்படிக்கை அறிவிக்கப்படவிருந்தது. நிகழ்ச்சித் திட்ட கலந்துரையாடல்கள் அரசியல் நிலைமைகள் தொடர்பான தெளிவு முடிவுறாதுள்ள நிலையில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஐ.அ.டொலர் 7.2 பில்லியன் தொகைக்கான மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கொண்ட இலங்கையின் நடைமுறை மட்டமானது எதிர்வருகின்ற காலப்பகுதிக்கு அதன் வெளிநாட்டு படுகடன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு நாட்டிற்கு போதுமானதாகும். இதற்கு மேலதிகமாக முன்னெச்;சரிக்கை வழிமுறையொன்றாக இலங்கை மத்திய வங்கியானது மிகையான தொகைகளைக் கொண்ட வெளிநாட்டு நாணய பரஸ்பர பரிமாற்றல் வசதிகளைக் பெற்றுக்கொள்வது தொடர்பில் நட்பு நாடுகளின் மத்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இவ்வழிமுறைகள் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்குப் போதுமையினை மேலும் வலுப்படுத்தும் என்பதுடன் வெளிநாட்டு கடப்பாடுகளை உரிய காலத்தில் தீர்ப்பதனை இயலச்செய்கின்ற அதேவேளை செலாவணி வீதத்தின் ஒழுங்கற்ற சீராக்கத்தினைத் தடுக்கும் விதத்தில் வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் அவதானத்துடன் தலையீடுகளையும் மேற்கொள்கின்றது. இதற்கு மேலதிகமாக, ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள இறை மற்றும் பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகள் வெளிநாட்டு வர்த்தக நிலுவையில் மேம்பாடு ஒன்றினை தோற்றுவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் இதன் மூலம் வெளிநாட்டு ஒதுக்குகள் மற்றும் செலாவணி வீதம் மீதான அழுத்தம் குறைக்கப்படும்.
இலங்கையின் படுகடன் கடப்பாடுகளை உரிய காலத்தில் நிறைவேற்றல் பற்றிய சாதனைப் பதிவுகளை உறுதிசெய்வதற்கு ஏற்கனவே ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2019 சனவரியில் ஐ.அ.டொலர் 1 பில்லியன் மற்றும் 2019 ஏப்பிறலில் ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறி முதிர்ச்சிகள் தொடர்பான அரசாங்கத்தின் வெளிநாட்டு பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு, அதிகாரிகள், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமை மாற்றம் மற்றும் சீனா அபிவிருத்தி வங்கி கூட்டுக்கடன் பெறுகைகளில் இருந்து தாங்கிருப்பு நிதியமொன்றினை உருவாக்கியுள்ளனர். ரூபா 310 பில்லியன் கொண்ட வறையறையொன்றினை விஞ்சாத தீவிரப் பொறுப்பு முகாமைத்துவ முயற்சியின் கீழ் ஏற்பாடுசெய்யப்பட்ட வசதியும் எதிர்கால படுகடன் தீர்ப்பனவுகளை மேற்கொள்ளுவதற்கு வேண்டப்பட்ட தாங்கிருப்புக்களையும் வசதிகளையும் வழங்குகின்றது. இதற்கு மேலதிகமாக, ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியின் போதும் 2019இன் ஆரம்ப காலப்பகுதியின் போதும் ஏறக்குறைய ஐ.அ.டொலர் 1 பில்லியனுக்கான ஐ.அ.டொலர் 750 பில்லியன் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் வழங்கல் தற்போது நிறைவின் முன்னேற்றமடைந்த கட்டத்தில் உள்ளது. பணவலுப்பல்கள் மற்றும் சுற்றுலா தொடர்புடைய உட்பாய்ச்சல்களுடன் ஒன்றிணைந்த மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய என்பவற்றியிருந்தான அரச வங்கிகளுக்கான அதிகரிக்கப்பட்ட தொடர்கடன்கள் ஊடாக இவ்முதலீடுகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கு புறம்பாக 2019 பெப்புருவரியில் சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கூட்டுக்கடன்களுக்கான ஐ.அ.டொலர் 500 மில்லியன் அதிகரிப்பும் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அர்த்தம் யாதெனில் 2019 பெப்புருவரியளவில் ஐ.அ.டொலர் 2 பில்லியனுக்கு மேல் திரட்டப்படும் என்பதேயாகும். இது 2019இல் நிலுவையாக இருக்கின்ற அனைத்து நாட்டிற்கான பன்னாட்டு முறிகளுக்கு மேல் உள்ளடக்கக்கூடியதாக இருக்கும். இதற்கு மேலதிகமாக தாங்கிருப்பு அடுத்த வருடத்தின் போது இருபுடை மற்றும் பல்புடை முகவராண்மைகளிடமிருந்தான பகிர்ந்தளிப்புகளாக எதிர்பார்க்கப்படுகின்ற ஐ.அ.டொலர் 600 மில்லியன் ஊடாக மேலும் கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.
அதேவேளை, அண்மையில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் படுகடன் முகாமைத்துவ உபாயங்கள் ஊடாக உள்நாட்டு நிதியளித்தல் நிலைமைகள் கணிசமான மேம்பாட்டினைக் காண்பித்துள்ளன. இது 2019, 2020 ஆண்டுகளிலும் அத்துடன் நடுத்தர காலத்திலும் திறைசேரி முறிகளின் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகளின் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் தேவைப்பாடுகளைக் குறைத்துள்ளது. 2018இல் ரூபா 600 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையுடைய திறைசேரி முறி முதிர்ச்சிகள் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் ஏறக்குறைய முறையே ரூபா 450 பில்லியன் மற்றும் ரூபா 290 பில்லியன் தொகைக்குக் குறைவடையும். இதேபோன்று, 2018இல் ஏறக்குறைய ஐ.அ.டொலர் 2.3 பில்லியன் தொகைக்கான இலங்கை அபிவிருத்தி முறிகளும் 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் முறையே ஐ.அ.டொலர் 0.62 பில்லியன் மற்றும் ஐ.அ.டொலர் 0.82 பில்லியனுக்கு குறைவடைந்துள்ளது. மேலும் வங்கி தொழிற்துறை மூலமாக அரசாங்க பிணையங்களை கையகப்படுத்தல் அண்மைய ஆண்டுகளில் காணப்பட்ட ஏறக்குறைய 5வீத அதிகரித்த போக்குகளுக்கு எதிராக 2018இல் 1.5 சதவீதத்தினால் மாத்திரம் அதிகரித்துள்ளது. நிறுவனசார் முதலீட்டாளர்களுக்கு மத்தியில் கிடைக்கப்பெறுகின்ற வளங்கலுடன் சேர்த்து இவ்அபிவிருத்திகள் உள்நாட்டுச் சந்தையில் இருந்தான நிதியளித்தல் தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு தற்போது காணப்படுகின்ற கணிசமான வசதியினை எடுத்துக்காட்டுகின்றது. தொடர்ச்சியான இறை திரட்சி குறிப்பாக சாதகமான அடிப்படை நிலுவை மற்றும் தீவிர பொறுப்பு முகாமைத்துவ முயற்சிகள் 2019இலும் நடுத்தர காலத்திலும் அரசாங்கத்தின் இறை தொழிற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சாராமாறிகளை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது மூடிஸ் மூலமான அண்மைய தரப்படுத்தல் நடவடிக்கை தேவையற்றது என அபிப்பிராயப்படுகின்றது அத்தகைய நடவடிக்கை பேரண்டப் பொருளாதார கொள்கைகளில் நழுவலுகளுக்கான எவ்வித ஆதாரமுமின்றி அரசியல் நிச்சயமின்மையினை எடுத்துக்காட்டும் எதிர்வுகூறல் ஒன்று மாத்திரமே என்பதுடன் நியாயப்படுத்த முடியாததுமாகும்.