Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமையச் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2022 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

தற்போதுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்

2022 யூலை 04ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், மேலும் 06 ஆண்டு கால தவணைக்கு முனைவர் பி நந்தலால் வீரசிங்க அவர்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மீள நியமித்திருக்கிறார் என்பதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தினை நிறைவுசெய்துள்ளனர்

மெஸர்ஸ். பீடர் புருர் மற்றும் மசாகிரோ நொசாகி ஆகியோரால் வழிநடாத்தப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் குழுவானது
இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவி மற்றும் அதிகாரிகளின் விரிவான பொருளாதார சீராக்க நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை கலந்துரையாடுவதற்காக 2022 யூன் 20 தொடக்கம் 30 வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் திருமதி ஆன்-மரி கல்ட்-ஊல்ப் கொள்கைக் கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருந்தார்.

விஜயத்தின் நிறைவில், மெஸர்ஸ். புருர் மற்றும் நொசாகி ஆகியோர் பின்வரும் அறிக்கையினை வெளியிட்டிருந்தனர்:

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 யூனில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 54.6 சதவீதத்தினைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 39.1 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 54.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 மேயின் 57.4 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 80.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் 30.6 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 42.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2021 இரண்டாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்தின் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2021இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 17.9 சதவீதத்தினால்  178.7 ஆக அதிகரித்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் ஆண்டு அதிகரிப்பும் அரையாண்டு அதிகரிப்பும் (11.9 சதவீதம்) 2017இலிருந்து அவதானிக்கப்பட்ட காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியில் அதிகூடிய அதிகரிப்பைக் காண்பித்தன.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி, வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி அனைத்தும் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி 21.1 சதவீதம் கொண்ட அதிகூடிய  ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்து, அதனைத் தொடர்ந்து வர்த்தகக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி மற்றும் வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக்; குறிகாட்டி ஆகிய இரண்டும் காணப்பட்டன.

முழுவடிவம்

2021இன் நான்காம் காலாண்டுப்பகுதியில் நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான இணங்குவிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதியியல் உளவறிதல் பிரிவினால் நிருவாக ரீதியான தண்டப் பணங்களை விதித்தல்/ சேகரித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய பிரிவு 19(1)இன் கீழ் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின் படி, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டப்பணங்கள் நிதியியல் நிறுவனங்களின் இணங்கியொழுகாத தன்மைகள் பற்றிய இயல்பு மற்றும் அதன் பாரதூரமான தன்மை என்பனவற்றினை பரிசீலனையில் கொண்டு விரித்துரைக்கப்படுகிறது.

இதற்கமைய, பணம் தூயதாக்கலைத் தடை செய்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு,  நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்புக்களை நடைமுறைப்படுத்தும் விதத்தில் 2021 ஒத்தோபர் 01 இலிருந்து 2021 திசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் கீழேயுள்ளவாறு ரூ.1.5 மில்லியன் கொண்ட மொத்தத் தொகையினைத் தண்டப்பணமாக திரட்டியிருக்கிறது. தண்டப்பணமாக திரட்டப்பட்ட நிதித் திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டிருக்கிறது. 

Pages

சந்தை அறிவிப்புகள்