இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க ஹொங் கொங்கில் 2023 நவெம்பர் 29 அன்று இடம்பெற்ற நிதியியல் உறுதிப்பாட்டு சபையின் ஆசியப் பிராந்திய ஆலோசனைக் குழுமக் கூட்டத்திற்கு இணைத்தலைமை வகித்தார்

ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு ஹொங் கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் 2023 நவெம்பர் 29 அன்று கூடியதுடன்  அண்மைக்கால நிதியியல் சந்தை அபிவிருத்திகள் மற்றும் பிராந்தியம் மீதான அவற்றின் தாக்கம், வங்கியல்லா நிதியியல் இடையீட்டிலிருந்து தோன்றுகின்ற பாதிக்கப்படும்தன்மைகள், சில வளர்ந்துவரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் இறையாண்மை-வங்கி தொடர்பு தீவிரமடைதல் அத்துடன் மறைகுறிச்-சொத்து தொடர்புடைய இடர்நேர்வுகள் பற்றிய செயல்திறன்மிக்க ஒழுங்குபடுத்தலையும் மேற்பார்வையையும் ஊக்குவிப்பதற்கான வழிகள் என்பன பற்றி கலந்துரையாடியது. இவ் இடர்நேர்வுகளை அடையாளப்படுத்தல், கண்காணித்தல், கையாளுதல் என்பன பற்றிய தமது அனுபவங்களை உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டதுடன் நிதியியல் முறைமைகளின் தாக்குப்பிடிக்கும்தன்மையை அதிகரிப்பதன் மீது நிதியியல் உறுதிப்பாட்டு சபை தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதையும் வரவேற்றனர். 

ஹொங் கொங் நாணய அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அலுவலரும் நடப்பு உறுப்பு இணைத்தலைருமான திரு. எட்டி யூஈ மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் ஆசியாவிற்கான பிராந்திய ஆலோசனைக் குழுவின் தற்போதைய உறுப்பல்லாத இணைத்தலைவருமான முனைவர். நந்தலால் வீரசிங்க ஆகியோர் கூட்டத்திற்கு இணைத்தலைமை வகித்தனர். அவுஸ்ரேலியா, பூருனை தாருஸலாம், கம்போடியா, சீனா, ஹொங் கொங் விசேட நிர்வாகப் பிராந்தியம், இந்தியா, இந்தோனேசியா, யப்பான், கொரியா, மலேசியா, நியுசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் நிதியியல் அதிகாரசபைகளை ஆசியாவிற்கான பிராந்திய ஆலோசனைக் குழும உறுப்புரிமை உள்ளடக்குகின்றது. 

முழுவடிவம்

Published Date: 

Monday, December 4, 2023