இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (கட்டடவாக்கம்) - 2023 ஒத்தோபர்

மொத்த நடவடிக்கைச் சுட்டெண், தொடர்ச்சியாக 20 மாத சுருக்கத்தின் பின்னர் 2023 ஒத்தோபரில் 50.0 கொண்ட நடுநிலையான அடிப்படை அளவினை எய்தியது. இடைநிறுத்தப்பட்டிருந்த அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களில் சில மாதகாலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீளத்தொடங்கப்பட்டன என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடப்பட்டனர்.  எவ்வாறாயினும், அநேகமான முன்னெடுக்கப்படும் கருத்திட்டங்கள் அவற்றின் இறுதிக்கட்டங்களில் காணப்படுவதனால் தொழில்துறையானது குறைவாகக் கிடைக்கப்பெறுகின்ற பணி அளவுகளுடன் தொழிற்படுகின்றது.

அதேவேளை, முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் புதிய கட்டளைகள் மெதுவான வேகத்தில் வீழ்ச்சியடைந்தன. அடுத்த ஆண்டின் முதலரைப்பகுதியில் தொடங்கப்படுவதற்கு அநேகமாக திட்டமிடப்பட்டிருந்த பாரிய விலைக்கோரல் வாய்ப்புக்களில் படிப்படியான அதிகரிப்பினை பல பதிலிறுப்பாளர்கள் அவதானித்திருந்தனர். தற்போதைய சூழ்நிலைகளின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அலுவலர்களுடன் கம்பனிகள் இயங்குவதனால் தொழில்நிலை சுருக்கமடைந்தே காணப்பட்டது. மேலும், மாதகாலப்பகுதியில் கொள்வனவுகளின் அளவு, மெதுவான வேகமாயினும் வீழ்ச்சியடைந்தது. மேலும், சக்தி தொடர்புபட்ட செலவுகளில் அதிகரிப்பிலிருந்து தோற்றம்பெறுகின்ற அழுத்தத்தினை பல பதிலிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அதேவேளை, வழங்குநர் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் சற்று நீட்சியடைந்தது.

அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான தொழில்துறையில் எதிர்கால எதிர்பார்க்கையானது பிரதானமாக பொருளாதாரத்தில் படிப்படியான மீட்சி மற்றும் கருத்திட்ட பணியின் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்பு என்பன காரணமாக சாதகமாகக் காணப்படுகின்றது. எனினும், சக்தி தொடர்புபட்ட செலவுகளில் மேல்நோக்கிய போக்கு மற்றும் வரவிருக்கும் வரித்திருத்தங்களின் தாக்கம் என்பன பற்றி நிறுவனங்கள் கவலைகொண்டுள்ளன.

முழுவடிவம்

Published Date: 

Thursday, November 30, 2023