விரிவடைந்துவரும் வர்த்தகப் பற்றாக்குறை, தொழிலாளர் பணவனுப்பல்களிலும் சுற்றுலா வருவாய்களிலும் காணப்பட்ட ஒப்பீட்டு ரீதியில் குறைந்த வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக 2016 யூனில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் தொடர்ந்தும் மிதமான தன்மையினைக் கொண்டதாகக் காணப்பட்டது. ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் படிப்படியான முன்னேற்றத்தினைக் காட்டிய வர்த்தகப் பற்றாக்குறை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டினதும் நலிவடைந்த செயலாற்றத்தின் காரணமாக மேயிலும் யூனிலும் மோசமடைந்தது. சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் ஆண்டின் மற்றைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் யூனில் குறைந்த வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வளர்ச்சியும் மிதமானதாகவே காணப்பட்டது.
















