ஊழியர் சேம நிதியம் தொடர்பாக எடுக்கப்பட்ட வழிமுறைகள் தொடர்பில் நாணயச் சபையினால் விடுக்கப்பட்ட அறிக்கை
ஊழியர் சேம நிதியம் தொடர்பில் அண்மையில் வெளிவந்த பல ஊடக அறிக்கைகள் கரிசனைகளைத் தோற்றுவிப்பனவாகவுள்ளன.
2015 மற்றும் 2016ஆம் ஆண்டுப் பகுதியில் அரச பிணையங்கள் தொடர்பில் ஊ.சே. நிதியத்தின் கொடுக்கல்வாங்கல்கள் பற்றி நாணயச் சபையின் பணிப்புரையின் கீழ் தற்பொழுது உள்ளகப் பரீட்சிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை மத்திய வங்கி அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்ட உள்ளகத் தொழிற்பாடுகளுடன் தொடர்பான பரீட்சிப்புக்களுடன் தொடர்புபட்டனவாக இருப்பதனால், சட்டத்தினை நடைமுறைக்கிடும் அதிகாரிகளும் 2015 மற்றும் 2016 காலப்பகுதியில் அரச பிணையங்களின் வழங்கல்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்கள் பற்றி வெளிவாரியான சுயாதீனமான புலானய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
ஊ.சே. நிதியத் தொழிற்பாடுகள் தொடர்பில், முதலீடுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்கின்ற செயன்முறைகளை வலுப்படுத்துவதற்காக, கடந்த ஆறு மாதங்களாக நாணயச் சபை பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டிருக்கிறது.