நாணயக் கொள்கை மீளாய்வு: இல.1 - 2017

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்படும் ஆண்டிற்கு ஆண்டு மாற்றஙக்ளினால் அளவிடப்பட்டவாறான, உணவு மற்றும் உணவல்லா பணவீக்கம் இரண்டினாலும் பங்களிக்கப்பட்ட முதன்மைப் பணவீக்கம் 2016 திசெம்பரின் 4.5 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கமும் 2016 திசெம்பரில் 5.8 சதவீதத்திலிருந்து 2017 சனவரியில் 7.0 சதவீதத்திற்கு விரைவடைந்தது. காலம் பிந்திக்கிடைக்கத்தக்கதாக இருக்கும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை (2013=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமும் மையப் பணவீக்கமும் 2016 திசெம்பரில் மேல்நோக்கிய போக்கினைப் பிரதிபலித்து, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முறையே 4.2 சதவீதம் மற்றும் 6.7 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. வரிச்சீராக்கங்களின் தாக்கம் மற்றும் மோசமான வானிலைகளின் தாக்கம் என்பனவற்றின் விளைவாக அண்மைக்காலங்களில் பணவீக்கத்தில் அதிகரிப்புக் காணப்பட்டபோதும் பொருத்தமான வழங்கல்பக்க மற்றும் கேள்வி முகாமைத்துவக் கொள்கைகள் என்பனவற்றின் ஆதரவுடன் இவ்வாண்டுப்பகுதியில் பணவீக்கம் சராசரியாக நடுஒற்றை இலக்கமட்டத்தில் காணப்படும் என எறிவுசெய்யப்பட்டது.  

அதேவேளை, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2016 இறுதியில் 21.9 சதவீதத்தில் உயர்வாகக் காணப்பட்டது. கொடுகடனின் வளர்சி 2016 யூலையில் அவதானிக்கப்பட்ட 28.5 சதவீதம் கொண்ட உச்ச மட்டத்திலிருந்து ஓரளவிற்கு குறைவடைந்தபோதும், பெயரளவு மற்றும் உண்மை வட்டிவீதங்களில் கணிசமமானளவு மேல்நோக்கிய சீராக்கங்கள் காணப்பட்டமைக்கிடையிலும் உண்மை நியதிகளில் கொடுகடனின் பகிர்ந்தளிப்பு உயர்வாகக் காணப்பட்டது. தனியார் மற்றும் அரசதுறைகளுக்கான கொடுகடன் வளர்ச்சியின் முக்கிய விளைவாக, விரிந்த பணத்தின் வளர்ச்சி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 இறுதியில் 18.4 சதவீதம் கொண்ட உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டது. நாணயம் மற்றும் கொடுகடன் கூட்டுக்களின் வளர்ச்சி 2017ஆம் ஆண்டுப் பகுதியில், உண்மைப் பொருளாதாரதத்pல் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி மற்றும் நடுஒற்றை இலக்க பணவீக்கம் என்பனவற்றுடன் இணங்கிச் செல்லுமொரு மட்டத்தினை நோக்கி படிப்படியாக மிதமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, February 7, 2017