விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி, ஓரளவு மெதுவான போக்கினை எடுத்துக் காட்டி 2016 பெப்புருவரியின் 19.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 18.9 சதவீததத்pனைப் பதிவு செய்தது. உள்நாட்டுக் கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கம் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுகோலாக விளங்கியதுடன், இதில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் முன்னைய மாதத்தின் 26.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 27.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது. கொடுகடனின் துறைவாரியான பகிர்ந்தளிப்பினைப் பொறுத்தவரையில், கைத்தொழில் மற்றும் வணிகத் துறைகள் கொடுகடன் பகிர்ந்தளிப்பில் உயர்நத் மட்டங்களை கவர்ந்து கொண்ட வேளையில் தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களும் கணிசமான அதிகரிப்பினைப் பதிவு செய்தன. அதேவேளை, அண்மைய நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளுக்கிடையிலும் உள்நாட்டுப் பணச் சந்தையில் காணப்பட்ட குறைந்த மட்ட மிகையான ரூபா திரவத்தன்மையின் காரணமாக குறுங்காலப் பணச் சந்தை வீதங்களிலும் ஏனைய சந்தை வட்டி வீதங்களிலும் மேல் நோக்கிய அசைவொன்று அவதானிக்கப்பட்டது.















