2016 யூனில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்படும் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மேயில் 5.3 சதவீதத்திலிருந்து 2016 யூனில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2016 யூனில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 மேயில் 2.7 சதவீதத்திலிருந்து 2016 யூலையில் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த மாற்றத்தினை பரிசீலனையில் கொள்ளும்பொழுது, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2016 மேயின் 113.7 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2016 யூனில் 116.1 சுட்டெண் புள்ளிகளுக்கு 2.1 சதவீதத்தினால் அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகையிலுள்ள விடயஙக்ளின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். காய்கறிகள், பச்சை மிளகாய், அரிசி, உடன்மீன், சீனி, உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் என்பனவற்றின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன. ஆடைகள் மற்றும் காலணிகள்; வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்;  தளபாடங்கள், வீட்டு அலகுச்சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு அலகுகளின் பேணல்கள்; தொடர்பூட்டல்; உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் ஆகிய துணை வகைகளிலுள்ள உணவல்லா வகையின் விலைகள் 2016 யூனில் அதிகரித்தன. அதேவேளை, 2016 யூனில் வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை துணைவகையின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. இருப்பினும்கூட நலம், போக்குவரதது; , பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் மற்றும் கல்வி துணை வகைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன.  

அதேவேளை, பொருளாதாரத்திலுள்ள அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மேயின் 7.2 சதவீதத்திலிருந்து 2016 யூனில் 7.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச்சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 மேயின் 5.1 சதவீதத்திலிருந்து 2016 யூனில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, July 21, 2016