இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சார்பில், இலங்கை மத்திய வங்கி ஐ.அ.டொலர் 500 மில்லியன் பெறுமதியான 5.5 ஆண்டு கால மற்றும் ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் பெறுமதியான 10 ஆண்டு கால நாட்டிற்கான பன்னாட்டு முறிகளையும் 2016 யூலை 11ஆம் நாளன்று வெற்றிகரமாக வழங்கியதன் மூலம் ஐ.அ.டொலர் முறிகள் சந்தைகளுக்கு இலங்கை திரும்பியமையினை எடுத்துக்காட்டியது. இது இலங்கையின் 10ஆவது ஐ.அ.டொலர் முறிகளின் வழங்கலையும் முதலாவது இரட்டைத் தொகுதி வழங்கலையும் குறிக்கிறது.
மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேடிங் என்பன இம்முறிகளை முறையே பி1, பீ+ மற்றும் பீ+ இல் தரமிட்டன. சிட்டி குறூப், டியூச் பாங்க், எச்எஸ்பீசி மற்றும் ஸ்டான்டட் அன்ட் சார்டட் பாங்க் என்பன இவ்வெற்றிகரமான கொடுக்கல்வாங்கலின் கூட்டு முகாமையாளர்களாகவும் ஏற்பாட்டாளர்களாகவும் தொழிற்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியத்தின் அங்கத்துவம் தொடர்பாக யூனில் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சர்வசன வாக்கெடுப்பினைத் தொடர்ந்து உலகளாவிய நிதியியல் சந்தைகளில் அதிகளவிலான தளம்பல்கள் காணப்பட்ட போதும் உயர்ந்த தரமான முதலீட்டாளர்கள் பரந்தளவில் இதில் ஈடுபட்டமையின் மூலம் இம்முறிகள் வலுவான ஈடுபாட்டினைக் காட்டின. 5.5 ஆண்டு தொகுதிக்கான கட்டளைகள் மொத்தமாக ஐ.அ.டொலர் 2.5 பில்லியனாகவும் 10 ஆண்டு தொகுதிக்கான கட்டளைகள் மொத்தமாக ஐ.அ.டொலர் 3.0 பில்லியனாகவும் காணப்பட்டன.5.5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு தொகுதி இரண்டும் முறையே 5.750 சதவீதம் மற்றும் 6.825 சதவீதம் கொண்ட கூப்பன் வீதத்துடன் 6.125 சதவீதம் மற்றும் 7.125 சதவீதம் கொண்ட ஆரம்ப விலை வழிகாட்டல்களுக்குள்ளே விலையிடப்பட்டிருந்தன. இது இலங்கையின் பொருளாதாரத் தோற்றப்பாட்டின் மீது முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கொண்டிருந்த நம்பிக்கைக்கும் அவர்களது சாதகமான மனோபாவத்திற்கும் நற்சான்றாகக் காணப்பட்டது.
உலகளாவிய ரீதியில் உயர்தர நிறுவன ரீதியான கணக்குகளினால் தூண்டப்பட்டு 5.5 ஆண்டு கால மற்றும் 10 ஆண்டு கால தொகுதிகள் ஒவ்வொன்றும் 200 இற்கு மேற்பட்ட கணக்குகளிலிருந்து கட்டளைகளைக் கவர்ந்து கொண்டன. 5.5 ஆண்டு கால தொகுதி, ஐக்கிய அமெரிக்காவிற்கான 35 சதவீதம் கொண்ட ஒதுக்கினையும் ஐரோப்பாவிற்கான 37 சதவீதமான ஒதுக்கினையும் ஆசியா எஞ்சிய 28 சதவீதமான ஒதுக்கினையும் காட்டியது. முதலீட்டாளர் வகையின்படி, 85 சதவீதமான பங்கினை நிதிய முகாமையாளர்களும் 8 சதவீதத்தினைக் காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியமும் 3 சதவீதத்தினை வங்கிகளும் 4 சதவீதத்தினை தனியார் வங்கிகளும் கொண்டிருந்தன. 10 ஆண்டு கால தொகுதி ஐக்கிய அமெரிக்காவிற்கான 62 சதவீதமான ஒதுக்கினையும் ஐரோப்பாவிற்கான 28 சதவீதத்தினையும் ஆசியாவிற்கான எஞ்சிய 10 சதவீதத்தினையும் கொண்டிருந்தன. முதலீட்டாளர் வகையின்படி 91 சதவீதத்தினை நிதிய முகாமையாளர்களும் 7 சதவீதத்தினைக் காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியமும் 1 சதவீதத்தினை வங்கிகளும் மற்றொரு 1 சதவீதத்தினை தனியார் வங்கிகளும் கொண்டிருந்தன.
குறிப்பு:
இப்பத்திரிகை வெளியீடு ஐக்கிய அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான பிணையங்கள் தொடர்பிலான முன்வைப்பல்ல. இங்கே குறிப்பிடப்பட்ட பிணைகள் திருத்தப்பட்டவாறான, 1933ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்கப் பிணையங்கள் சட்டம் “(பிணையங்கள் சட்டம்)” அல்லது ஐக்கிய அமெரிக்காவின் ஏதேனும் மாநில அரசின் பிணையங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுடன் பதிவு செய்யப்படவும் மாட்டாதென்பதுடன் பதிவின்றி அல்லது ஏற்புடைத்தான விதிவிலக்கல்களின்றி அல்லது கொடுக்கல்வாங்கலொன்றிற்குட்படாது பிணையங்கள் சட்டம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஏற்புடைத்தான மாநில பிணையங்கள் சட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவில் முன்வைக்கப்படவோ அல்லது விற்கப்படவோ முடியாது. ஐக்கிய அமெரிக்காவில் பிணையங்கள் தொடர்பில் ஏதேனும் பகிரங்க வழங்கல்களை மேற்கொள்ள வேண்டுமாயின் வழங்குநரிடமிருந்து பெறப்பட வேண்டிய முன்விபரணங்களின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன் அது வழங்குநர் பற்றிய விபரமான தகவல்களையும் கொண்டிருத்தல் வேண்டும். இப்பத்திரிகை வெளியீடு, சட்ட ரீதியற்றதாக இருக்கும் எந்தவொரு நியாயாதிக்கப் பகுதியிலும் அவற்றை வழங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ உரிய விதத்தில் விற்பதற்கான முன்வைப்பொன்றினையோ அல்லது பிணையங்களை வாங்குவதற்கானதொரு முன்வைப்பினையோ கொண்டிருக்கவில்லை. தரமிடலானது பிணையங்களை விற்பதற்கு, வாங்குவதற்கு அல்லது உடமையில் வைத்திருப்பதற்கானதொரு விதந்துரைப்பல்ல என்பதுடன் அது எந்தவொரு நேரத்திலும் தரமிடல் முகவரினால் இடைநிறுத்தப்படுவதற்கும் அல்லது குறைக்கப்படுவதற்கும் அல்லது புறக்கீடு செய்யப்படுவதற்கும் உட்பட்டதாகும்.