வர்த்தகப் பற்றாக்குறை குறைவடைந்து, சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவலுப்பல்களிருந்தான உட்பாய்ச்சல்கள் ஆரோக்கியமான வீதத்தில் வளர்ச்சியடைந்த வேளையில் 2016 ஓகத்து காலப்பகுதியில் வெளிநாட்டுத்துறை மிதமான செயலாற்றமொன்றினைப் பதிவுசெய்தது. 2016 ஓகத்து காலப்பகுதியில் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைப் பதிவுசெய்த போதும் இறக்குமதிகள் வளர்ச்சியடைந்து வர்த்தகப்பற்றாக்குறையில் விரிவொன்றினைத் தோற்றிவித்தன. எனினும், சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவலுப்பல்களிலிருந்தான வருவாய்கள் வளர்ச்சியடைந்தமை வர்தத் கப்பற்றாக்குறையின் தாக்கத்தினை குறைவடையச்செய்தன. அதேவேளை, நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களுக்கு அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை என்பனவற்றிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகளும் 2016இல் அரசிற்கான நீண்டகால கடன் உட்பாய்ச்சல்களும் உதவியாக விளங்கின.















2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பரிமாறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 ஒத்தோபர் 19ஆம் நாளன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி. கல்யாணி தகநாயக்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு.எச்.அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 
