இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - 2016 யூன்

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவதானிக்கப்பட்ட சுருக்கத்திலிருந்து 2016 யூனில் சாதகமான நிலைமையொன்றிற்கு மீட்சியடைந்து 55.1 சதவீத சுட்டெண் புள்ளியைப் பதிவுசெய்தது. இது 2016 மேயிலிருந்து 7.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். இம்முன்னேற்றத்திற்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே பக்கபலமாக விளங்கியது. மேலும், அனைத்துக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் நிரம்பலர் வழங்கலிலிருந்து விலகி முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்தது. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து அனைத்து துணைச் சுட்டெண்களும் தொழில்நிலைச் சுட்டெண்ணிலிருந்து விலகி 50.0 கீழ் மட்ட நிலைக்கு மேலே காணப்பட்டது. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பக்களும் அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னேற்றமொன்றினை எடுத்துக்காட்டின. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2015 யூனுடன் ஒப்பிடுகையில் 2.4 சுட்டெண் புள்ளிகள் கொண்ட சிறிதளவு வீழ்ச்சியைக் காட்டியது.  

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 மேயின் 58.1 சுட்டெண் புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 56.3 சுட்டெண் புள்ளிகளைப் பதிவுசெய்து, 2016 மேயுடன் ஒப்பிடுகையில், மெதுவான வேகத்திலேனும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்தும் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டின. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 யூனில் 8.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. நடவடிக்கைகளின் விரிவாக்கத்தில் ஏற்பட்ட மெதுவான தன்மையானது புதிய வியாபாரங்கள், தொழில்நிலை, நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் நடவடிக்கை துணைச் சுட்டெண்களுக்கான எதிர்பார்ப்புக்கள் ஆகிய அனைத்திலும் அவதானிக்கப்பட்டன. வியாபார நடவடிக்கைத் துணைச் சுட்டெண் 2016 மேயுடன் ஒப்பிடுகையில் யூனில் சிறிதளவால் அதிகரித்துக் கட்டண விதிப்புக்கள், 2016 மேயில் பதிவுசெய்யப்பட்ட மாதத்திற்கு மாத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பினைப் பதிவுசெய்தன.

முழுவடிவம்

Published Date: 

Friday, July 15, 2016