Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குவிதிகள்

இலங்கை மத்திய வங்கியானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 10(இ) பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2023ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை வழங்கி, அதனை 2023.08.09 அன்று 2344/17ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற அனைத்து நிதியியல் பணி வழங்குநர்களுக்கும் இவ்வொழுங்குவிதிகள் ஒரேசீர்மையான அடிப்படையில் ஏற்புடையதாவிருக்கும் என்பதுடன் இலங்கை மத்திய வங்கியின் குறிப்பாக, வங்கித்தொழில் சட்டம், நிதித்தொழில் சட்டம் மற்றும் நிதிக்குத்தகைக்குவிடுதல் சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு பணிப்புரைகளின் தற்போதைய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இவ்வொழுங்குவிதிகள் சர்வதேச தரநியமங்களுக்கிசைவாக வகுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மத்திய வங்கி மூலமான சந்தை நடத்தை மேற்பார்வைக்கு அடித்தளத்தினை உருவாக்கி இலங்கையில் நம்பிக்கையான மற்றும் உறுதியான நிதியியல் முறைமையொன்றை உருவாக்குவதை வசதிப்படுத்தும்.

உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தை அநுசரித்து தகைமையுடைய செலுத்தவேண்டிய இலங்கை அபிவிருத்தி முறிகளை ஐந்து (5) புதிய இலங்கை ரூபா திறைசேரி முறிகளுக்கான பரிமாற்றத் தீர்ப்பனவு

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023 யூலை 04ஆம் திகதியிடப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் பரிமாற்று விஞ்ஞாபனத்திற்கும் (“பரிமாற்று விஞ்ஞாபனம்") அதனைத்தொடர்ந்து இலங்கை அபிவிருத்தி முறி பரிமாற்றத்திற்கான அழைப்பிதழுக்கான (பரிமாற்று விஞ்ஞாபனத்தில் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு) பெறுபேறுகளின் அறிவித்தலுக்கும் மேலதிகமாக, செலுத்தவேண்டிய தகைமையுடைய இலங்கை அபிவிருத்தி முறிகள் (தகைமையுடைய முறிகள்) ஐந்து (5) புதிய மாறிலி கூப்பன் (துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்* +1.00%) இலங்கை ரூபாவில் பெயர்குறிக்கப்பட்ட புதிய திறைசேரி முறிகளுக்கு மாற்றப்பட்டு 2023.08.15 அன்று பின்வருமாறு தீர்ப்பனவுசெய்யப்பட்டன:   

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2023 யூலை

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2023 யூலையில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினையும் எடுத்துக்காட்டின.  

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2023 யூலையில் 44.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தொடர்ந்து வீழ்ச்சியடைந்து தயாரித்தல் நடவடிக்கைகள் மீட்சியடைவதில் தாமதத்தை  எடுத்துக்காட்டியது. அனைத்துத் துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றம் இப்பின்னடைவிற்கு பங்களித்தது.

பணிகள் துறை கொ.மு.சுட்டெண், 2023 யூலையில் 59.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து மேலும் அதிகரித்து, பணிகள் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இதற்கு முன்னிலை வகித்திருந்தன. எவ்வாறிருப்பினும், நிலுவையிலுள்ள பணிகள் மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்து காணப்பட்டன.

இலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தை குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2023 ஓகத்து 08 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2023 ஓகத்து 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4.00 சதவீதத்திலிருந்து 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இணங்கும் வகையில், வங்கித்தொழில் முறைமைக்குள் திரவத்தன்மையை உட்செலுத்தி, சந்தை திரவத்தன்மை பற்றாக்குறையை நிரந்தர அடிப்படையொன்றில் மேலும் குறைக்கும் நோக்குடன் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் வெப்தளப் பக்கத்தை இலங்கை மத்திய வங்கி தொடங்கிவைக்கின்றது

நிதியியல் வசதிக்குட்படுத்தல் முயற்சிகளை நோக்கிய அதன் உபாய நோக்கிற்கு முக்கியத்துவமளித்து பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரத்தியேகமான வெப்தளப் பக்கத்தை இலங்கை மத்திய வங்கி 2023.08.04 அன்று தொடங்கிவைத்தது. 

2018ஆம் ஆண்டு தொடக்கம் நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பதில் இலங்கை மத்திய வங்கியுடன் நீண்டகாலம் நிலைத்திருக்கின்ற பங்குடமையாளரான பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் நிதியியல் உதவியுடன் பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் வெப்தளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பிந்திய இம்முன்முயற்சியானது இலங்கைக்கான ஒட்டுமொத்த தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் ஒரு பாகமாக விளங்குகின்றது - நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் தொழில்களுக்கும் அதிகம் கிடைக்கத்தக்க, வினைத்திறன்மிக்க மற்றும் வசதியான நிதியியல் பணிகளை கிடைக்கச்செய்யும் முயற்சியில் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனம் முக்கிய பங்காற்றியுள்ளது.    

இந்திய ரூபா பற்றிய தவறான புரிந்துகொள்ளல்களை தெளிவுபடுத்தல்

இந்திய ரூபா தொடர்பில் சில தவறான கருத்துக்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படுவதை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த விரும்புகின்றது.

பன்னாட்டு வர்த்தகம் மற்றும் எல்லைகடந்த வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்கள் என்பவற்றை வசதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி காலத்திற்குக் காலம் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக தெரிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிகாரமளிக்கின்றது. 1979 மே தொடக்கம் இலங்கை மத்திய வங்கி அவ்வப்போது பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை அங்கீகரித்துள்ளது. தற்போது பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக வங்கித்தொழில் சட்டம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2022 ஓகத்தில் பிந்தியதாக உட்சேர்க்கப்பட்ட இந்திய ரூபாயுடன் பின்வரும் 16 நாணயங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Pages

சந்தை அறிவிப்புகள்