விரிவான வெளிநாட்டுச் செலாவணி சந்தையொன்றின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கான இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பிற்கமைவாக, வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளமொன்றை இலங்கை வெளிநாட்டுச் செலாவணி சந்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி, மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பனவற்றுக்கு அணுகுவழியினைக் கொண்டிருக்கும் இத்தளமானது விலை கண்டறிதலை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் ஊக்குவிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதற்கமைய, இந்நோக்கத்திற்காக, புளூம்பேர்க் BMatch வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையினால் தெரிவுசெய்யப்பட்டது.
Friday, March 7, 2025