Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - யூலை 2023

கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 யூலையில் குறைவடைந்த மட்டத்தில் தொடர்ந்தும் செயலாற்றி 43.2 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கமைய,  சவால்மிக்க தொழிற்துறை சூழலுக்கு மத்தியில் அநேகமான நிறுவனங்கள் உறங்குநிலையிலேயே காணப்பட்டன.  எனினும், பொருட்கள் செலவில் படிப்படியான வீழ்ச்சியானது மட்டுப்படுத்தப்பட்ட முன்னெடுக்கப்படும் கருத்திட்டங்களுக்கான ஆக்கபூர்வமான சூழலொன்றினை வழங்கியது. மேலும், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சில அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மாதகாலப்பகுதியில் ஓரளவு மீளத்தொடங்கப்பட்டன.

யூலையில் குறைவான வேகமாயினும் புதிய கட்டளைகள் சுருக்கமடைந்தன. வெளிநாட்டு நிதியிடப்பட்ட கருத்திட்டங்களுக்கான விலைக்கோரல் சமர்ப்பிக்கின்ற வாய்ப்புக்கள் அநேகமாக மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகின்ற அதேவேளை, தனியார் சேவைநாடிகள் மேலும் செலவு குறைப்புகளுக்காக இன்னும் காத்திருக்கின்றனர் என பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர். மேலும், கருத்திட்டங்களை கொண்டிருக்கின்ற நிறுவனங்கள் மேலதிக இயலளவுகளை கொண்டிருப்பதனால் துணை ஒப்பந்த வாய்ப்புகளும் பற்றாக்குறையாக உள்ளன. அதேவேளை, முக்கிய அலுவலர்களை மாத்திரம் தக்கவைப்பதற்காக நிறுவனங்கள் முனைந்தமையினால் மாதகாலப்பகுதியில் தொழில் நிலையானது மேலும் வீழ்ச்சியடைந்தது. மேலும், அநேகமான நிறுவனங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற நிலையில் காணப்படுகின்றமையினாலும் குறுகிய காலத் தேவைப்பாடுகளை மாத்திரம் பூர்த்திசெய்வதனாலும் கொள்வனவுகளின் அளவு மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரமானது மாதகாலப்பகுதியில் உறுதியாகக் காணப்பட்டதுடன் வழங்குநர் கொடுகடன் வசதிகளும் கிடைக்கப்பெறத்தக்கனவாகவுள்ளன என சில பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சி, வட்டி வீதங்கள் மற்றும் பொருட்கள் செலவுகளில் குறைவு அத்துடன் இடைநிறுத்தப்பட்ட அரசாங்க நிதியளித்தல் கருத்திட்டங்களை மீளத்தொடங்குவது பற்றிய தற்போதைய பேச்சுவார்த்தைகள் என்பனவற்றின் பிரதான காரணமாக அடுத்துவரும் மூன்று மாதங்களை நோக்கி நிறுவனங்கள் மத்தியிலான எண்ணப்பாங்கு பரந்தளவில் சாதகமாக காணப்பட்டது.

உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டம் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல்

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்ட நடைமுறைப்படுத்தலின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு எதிராக இன்று, அதாவது 2023 ஓகத்து 28 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களின் பிரதிநிதிகள் என தாங்களாக கோருகின்ற ஆட்கள் குழுவொன்றினால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது,  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்புபட்ட விடயங்கள் பற்றிக்  கலந்துரையாடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களுடனான சந்திப்பொன்றுக்காக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினூடாக கோரிக்கைவிடுத்தனர். சொல்லப்பட்ட கோரிக்கையினை பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சொல்லப்பட்ட எதிர்ப்பில் ஈடுபட்டவர்களைப் பிரநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து பேருடன் இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் பி.ப. 2.30 மணிக்கு இன்றே கூட்டமொன்று கூட்டப்படவுள்ளதென கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினூடாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு அறிவித்திருந்தார்.

சட்டவிரோதமான பிரமிட் திட்டங்கள் பற்றிய பொதுமக்கள் முறைப்பாடுகள்

இணையவழித் தளங்க;டாகத் தொழிற்படுகின்ற சில திட்டங்கள் அவை சட்டபூர்வமான திட்டங்கள் என்பதனை நியாயப்படுத்தும் முயற்சியொன்றாக கீழே குறிப்பிடப்பட்டவை போன்ற சில விடயங்களைக் குறிப்பிட்டு இத்திட்டங்களில் பணத்தை வைப்புச் செய்யுமாறுஃமுதலிடுமாறு முதலீட்டாளர்களை தவறாக வழிநடாத்துகின்றன என்பதனைக் குறித்துக்காட்டுகின்ற பல முறைப்பாடுகள் அண்மையில் இலங்கை மத்திய வங்கிக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

  • இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இத்திட்டம் முதலீட்டாளர்களின் நிதியங்களைப் பாதுகாக்கின்றது;
  • இத்திட்டமானது தொடர்புடைய வரிகளை அரசாங்கத்திற்குச் செலுத்துகின்றது; 
  • நிதியங்களை மீளப்பெறும் பொருட்டு இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் தமது நிதியங்களிலிருந்து தனிப்பட்ட வருமான வரியை இலங்கை மத்திய வங்கிக்கு செலுத்த வேண்டும், இன்றேல் அவர்களது நிதியங்கள் இலங்கை மத்திய வங்கியினால் முடக்கப்படும்;
  • இத்திட்டம் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.

மேற்குறித்த கூற்றுக்களை இலங்கை மத்திய வங்கி முழுமையாக நிராகரிப்பதுடன் இக்கூற்றுக்களில் உண்மையேதுமில்லை என பொதுமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றது. 

நாணயக்கொள்கை மீளாய்வு: இல. 06 - 2023 ஓகத்து இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2023 ஓகத்து 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளின் கவனமான பகுப்பாய்வு மற்றும் 2023 யூனிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட நாணய நிலைமைகளின் குறிப்பிடத்தக்க தளர்வடைதலினையும் தொடர்ந்து சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. இதுவரையிலான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாணயக்கொள்கை தளர்வடைதல் வழிமுறைகளிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தை வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய சீராக்கத்தினையும் சந்தை வட்டி வீதங்களை மேலும் சீராக்குவதற்கு விரைவாக இடமளிப்பதற்கான தேவைப்பாட்டினையும் நாணயச்சபை கருத்தில் கொண்டது. இருப்பினும், குறித்த சில கடன்வழங்கல் உற்பத்திகளின் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் விஞ்சியளவில் காணப்படுவதனையும் அவை தற்போதைய நாணயக்கொள்கை நிலைப்பாட்டுடன் இசைந்து செல்லும் விதத்திலமையவில்லை என்பதனையும் சபை அவதானித்தது.

‘இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் - 2023’ வெளியீடு

‘இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2023’ என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களமானது இக்கையேட்டை வெளியிடுகின்றது. எட்டு முக்கிய விடயப்பரப்புக்களின் அதாவது ‘தேசிய கணக்குகள்’, ‘பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு’, ‘விலைகள், கூலிகள் மற்றும் தொழில்நிலை’, ‘வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி’, ‘அரச நிதி’, ‘பணம் மற்றும் மூலதனச் சந்தைகள்’, ‘நிதியியல் துறை’ அத்துடன் ‘ஏனைய நாடுகளின் புள்ளிவிபரங்கள்’ என்பவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபர அட்டவணைகளை இது உள்ளடக்குகின்றது. இவ்வெளியீடு சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களில் ஆர்வமுள்ளோருக்கு பயனுள்ள தகவல் சேகரிப்பாகக் காணப்படும்.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2023இன் முதலாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2023இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 15.2 சதவீதம் கொண்ட அதிகரிப்புடன் 215.3 ஆகப் பதிவாகியது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகள் முறையே 17.2 சதவீதம், 15.1 சதவீதம் மற்றும் 13.5 சதவீதம் கொண்ட வருடாந்த அதிகரிப்புகளுடன் ஒட்டுமொத்த அதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன. அரையாண்டு அடிப்படையில், காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் இரண்டாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2023இன் முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் 4.9 சதவீதத்தினால் அதிகரித்தது. இவ்வதிகரிப்பிற்கான அதிகூடிய பங்களிப்பு வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியிலிருந்து இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைக் குறிகாட்டிகள் காணப்பட்டன. எனினும், 2023இன் முதலரை காலப்பகுதியில் காணி விலை மதிப்பீட்டுக் குறிகாட்டியின் அரையாண்டு வளர்ச்சியில் வேகத்தளர்ச்சி அவதானிக்கப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்