Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

திறைசேரி முறிகளின் ஏலங்கள் தொடர்பாக நாணயச் சபையின் அறிக்கை

இது, 2016 மாச்சு பிற்பகுதியில் இடம்பெற்ற திறைசேரி முறிகளின் ஏலங்கள் தொடர்பான அண்மைய கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பானதாகும். இக்கட்டுரைகள் மற்றும் கலந்துரையாடல்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் போதுமானளவிற்கு வெளிப்படையான தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகளை ஏலமிடுவது தொடர்பில் 2015 பெப்புருவரியிலிருந்து முழுமையாகச் சந்தையினை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்ற நடைமுறைகளைப் போன்ற நடைமுறைகளே இப்பொழுதும் பின்பற்றப்பட்டிருக்கிறது என்ற உண்மையின்பால் பொதுமக்களின் கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம்.  

2016 ஏப்பிறலில் பணவீக்கம்

தொகைமதிப்பு புள்ளிவிபரத்திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் அளவிடப்பட்டவாறான, பணவீக்கம் (2013=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2016 மார்ச்சின் 2.2 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் வெறியமல்லா குடிவகைகள்; வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை; ஆடைகள் மற்றும் காலணிகள் தளபாடங்கள்; வீட்டுஉபயோகச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டு உபயோகப் பொருட்கள்;  நலன்; போக்குவரத்து; பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம்; கல்வி; உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத்துறைகள் என்பன ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்குப் பங்களித்தன.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 மார்ச்சில் பதிவுசெய்யப்பட்ட 2.4 சதவீதத்திலிருந்து 2016 ஏப்பிறலில் 2.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண நிதியத்திற்கான கணக்குகள் திறக்கப்பட்டிருக்கின்றன

2016 மேயில் நிகழ்ந்த வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கையர்களிடமிருந்தும் வெளிநாட்டு தயாளசிந்தைபடைத்தவர்களிடமிருந்தும் நன்கொடைகளைச் சேகரிக்கப்படுவதற்கு வசதியளிக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கம் சம்பத் வங்கி பிஎல்சி இல் பின்வரும் கணக்குகளைத் திறந்திருக்கிறது.

நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 மே

விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி, ஓரளவு மெதுவான போக்கினை எடுத்துக் காட்டி 2016 பெப்புருவரியின் 19.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 18.9 சதவீததத்pனைப் பதிவு செய்தது. உள்நாட்டுக் கொடுகடனில் ஏற்பட்ட விரிவாக்கம் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுகோலாக  விளங்கியதுடன், இதில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் முன்னைய மாதத்தின் 26.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2016 மாச்சில் 27.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது. கொடுகடனின் துறைவாரியான பகிர்ந்தளிப்பினைப் பொறுத்தவரையில், கைத்தொழில் மற்றும் வணிகத் துறைகள் கொடுகடன் பகிர்ந்தளிப்பில் உயர்நத் மட்டங்களை கவர்ந்து கொண்ட வேளையில் தனிப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்களும் கணிசமான அதிகரிப்பினைப் பதிவு செய்தன. அதேவேளை, அண்மைய நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளுக்கிடையிலும் உள்நாட்டுப் பணச் சந்தையில் காணப்பட்ட குறைந்த மட்ட மிகையான ரூபா திரவத்தன்மையின் காரணமாக குறுங்காலப் பணச் சந்தை வீதங்களிலும் ஏனைய சந்தை வட்டி வீதங்களிலும் மேல் நோக்கிய அசைவொன்று அவதானிக்கப்பட்டது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 சனவரி

2016 சனவரி மாதகாலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மிதமான செயலாற்றமொன்றினைக் காட்டியது. 2016 சனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்த வேளையில் சுற்றுலா வருவாய்களின் வடிவிலமைந்த வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் ஒப்பீட்டு ரீதியில் உயர்ந்த வளர்ச்சியினைப் பதிவுசெய்ததுடன் தொழிலாளர் பணவலுப்பல்களிருந்தான உட்பாய்ச்சல்களும் மேம்பட்டன. 2016 சனவரி காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் எரிபொருள், ஊர்திகள் மற்றும் அரிசி இறக்குமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக இறக்குமதிச் செலவினங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி உயர்வாக இருந்தமையின் விளைவாக வர்த்தகப்பற்றாக்குறை சுருக்கமடைந்தது.  எனினும்,  அரச பிணையங்கள் சந்தையும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையும் இக்காலப்பகுதியில் தேறிய வெளிப்பாய்ச்சலை பதிவுசெய்தன.

முழுவடிவம்

புதிய உதவி ஆளுநர்களின் நியமனம்

நாணயச் சபை, 2016 ஏப்பிறல் 05ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் செல்வி கே சரவணமுத்து மற்றும் திரு ஈ ஏ எட்டியாராச்சி, திரு ஆர் ஏ ஏ ஜெயலத்; திரு கே எம் எம் சிறிவர்த்தன மற்றும் திரு எஸ் ஜே ஏ கந்தகம ஆகிய ஐந்து உயர் அலுவலர் வகுப்பு தரம் ஐஏ அலுவலர்களை முறையே 2016 ஏப்பிறல் 05, 2016 ஏப்பிறல் 16, 2016 யூன் 12 மற்றும் 2016 யூன் 18ஆம் திகதிகளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் உதவி ஆளுநர்களாகப் பதவி உயர்த்தியிருக்கிறது. இப் பதவி உயர்வுகள் வங்கியின் தொடர்ச்சியான திட்டத்திற்கு அமைவாகவும் மத்திய வங்கியின் புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து அவற்றைக் கட்டுப்படுத்தும் விதத்திலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Pages

சந்தை அறிவிப்புகள்