அரச படுகடனைப் பதிவுசெய்வது தொடர்பாக அண்மையில் வெளிவந்த ஊடக அறிக்கைகளுக்கான தெளிவுபடுத்தல்

அரச படுகடனைப் பதிவு செய்வது தொடர்பிலும் கணக்குகளைப் பேணுவது தொடர்பிலும் 2018 பெப்புருவரி 08ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பற்றி இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

இலங்கை மத்திய வங்கி, அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படும் உள்நாட்டுப் படுகடன் மற்றும் பன்னாட்டு வர்த்தகக் கடன்பாடுகள் மீதான அதன் தரவுத்தளத்தினை அடிப்படையாகக் கொண்டும் அத்துடன் நிதி அமைச்சு மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் வெளிநாட்டு மூலவளங்கள் திணைக்களத்திலிருந்தும் அது பெறுகின்ற தகவல்களின் அடிப்படையிலும் மத்திய அரசாங்கத்தின் படுகடனைத் தொகுத்து வெளியிடுகின்றது. இலங்கை மத்திய வங்கி அது வெளியிடுகின்ற படுகடன் புள்ளிவிபரங்கள் தொடர்பில் அதன் துல்லியத்தன்மைக்காக நிதி அமைச்சுடனும் வெளிநாட்டு மூலவளத் திணைக்களத்துடனும் கிரமமானதும் நெருக்கமானதுமான இணைப்புக்களைப் பேணி வருவதுடன் இது தொடர்பில் வெளிநாட்டு மூலவளங்கள் திணைக்களத்தினால் பேணப்படும் படுகடன் பதிவிடல் முறைமையினை அணுகக்கூடிய தன்மையினையும் கொண்டிருக்கிறது. மேலும், இலங்கை அரசாங்கப் படுகடனைத் தொகுத்தல் மற்றும் தீர்ப்பனவு செய்வதில் இலங்கை மத்திய வங்கி, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வர்த்தகக் கடன்பாடுகள் தொடர்பில் அதன் சொந்தப் பதிவுசெய்தல் முறைமைகளையும் பயன்படுத்துகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் அவ்வாறு தொகுக்கப்படுகின்ற மத்திய அரசாங்கத்தின் படுகடனானது பன்னாட்டு நாணய நிதியம் உட்பட பன்னாட்டு முகவர்களினால் மீளாய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அத்துடன், இலங்கை மத்திய வங்கி, இலங்கை அரசாங்கம் இன்றுவரை, படுகடன் பதிவுசெய்தல் முறைமையினூடாக அங்கீகரிக்கப்பட்ட தீர்ப்பனவுக் கொடுப்பனவுக் கடப்பாடுகளுக்கிணங்க மேற்கொள்ளப்பட்ட படுகடன் தீர்ப்பனவுகளில் அப்பளுக்கற்ற பதிவேட்டினைப் பேணி வருவதனை வலியுறுத்த விரும்புகின்றது.

மேலும், அரசாங்கத்தின் படுகடன் சொத்துப்பட்டியலில் முன்மதியுடைய முகாமைத்துவத்தினை அடையும் விதத்தில், நடைமுறைப்படுத்தப்படுவதற்காக படுகடன் முகாமைத்துவ உபாயமொன்றை இலங்கை மத்திய வங்கி வடிவமைத்து வருவதுடன் பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் நடமுறைப்படுத்தலுடன் படுகடன் தீர்ப்பனவுப் பொறுப்புக்களை ஒழுங்குமுறைப்படுத்தும் செயன்முறையிலும் ஈடுபட்டிருக்கிறது.

Published Date: 

Thursday, February 8, 2018