இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) அளவீடு – 2017 திசெம்பர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் திசெம்பர் மாதத்தில் 59.1 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும ;போது 0.3 சுட்டெண் புள்ளிகளாலான ஒரு சிறிதளவான அதிகரிப்பாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 நவம்பர் உடன் ஒப்பிடும் போது 2017 திசெம்பரில்; ஒரு உயர்வான வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக அதிகரித்திருந்த உற்பத்தி துணைச்சுட்டெண்ணினால் உந்தப்பட்டது. மேலும் நவம்பர் 2017 உடன் ஒப்பிடுகையில் மாதகாலப்பகுதியில் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண் குறைவான வீதத்தில் அதிகரித்திருந்த வேளையில் கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் ஒரு உயர்வான வேகத்தில் அதிகரித்திருந்தது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு உயர்வான வீதத்தில் நீட்சியடைந்திருந்தது. ஒட்டுமொத்தமாக கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை திசெம்பர் மாதத்தில் பதிவு செய்து ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினை குறித்துக்காட்டியது. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 நவம்பரின் 57.4 சுட்டெண் புள்ளியிலிருந்து திசெம்பர் மாதத்தில் 61.2 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. 2017 திசெம்பரில் பணிகள் துறையானது உயர்வான வீதத்தில் அதிகரித்திருந்தமையினை இது குறித்துக்காட்டுகின்றது. இது புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள், தொழில்நிலை, நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் என்று அழைக்கப்படும் அனைதது; துணைச்சுட்டெண்களினாலும் ஆதரவளிக்கபட்டது. நிலுவையிலுள்ள பணிகள் துணைச்சுட்டெண்ணானது 2015 மேயில் அளவீடு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதற்தடவையாக 50.0 மட்டத்திற்கு மேலாக அதிகரித்திருந்தது. புதிய வியாபாரங்கள் 6 மாத கால ஒரு உயர்வை அடைந்தது, பணிகள் துறையில் மேலதிக வளர்ச்சி போக்கினை குறித்துக்காட்டுகின்றது. பண்டிகைக்காலத்தில் அதிகரித்திருந்த கேள்வி மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடு ஆகிய இரண்டு சுற்றுலா துறைகளிலுமான அதிகரிப்பு காரணமாக மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் மற்றும் தங்குமிடம், உணவு மற்றும் குடிபான பணிகள் துணைத; துறைகளில் பிரதானமாக வியாபார நடவடிக்கைகளில் ஒரு விரிவாக்கம ;அவதானிக்கப்பட்டது. விதிக்கப்பட்ட விலைகள் பண்டிகைக்காலத்தில் அதிகரித்திருந்த கேள்வி காரணமாக 2017 நவம்பருடன் ஒப்பிடுகையில் திசம்பரில் ஒரு உயர்வான வீதத்தில் அதிகரித்திருந்தது.  2017 திசம்பரில் எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் செலவு அதிகரித்தமைக்கு 2017 இற்க்கான பயன்படுத்தத்தப்படாத விடுப்புகள் பணமாக்கபப் டுகின்றமையும் மற்றும ; கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் 2018 இல் எதிர்பார்க்கப்படும் ஊதிய அதிகரிப்புகளும காரணமாக அமைந்தன.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, January 16, 2018