தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒத்தோபர் மாதத்தில் 54.8 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 செத்தெம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 4.2 புள்ளிகளாலான ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகளானது 2017 செத்தெம்பர் உடன் ஒப்பிடும் போது 2017 ஒத்தோபரில் ஒரு குறைந்த வேகத்திலான அதிகரிப்பினை குறித்துக்காட்டுகின்றது. இது பிரதானமாக முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட அதிகரித்திருந்த மட்டங்களிலிருந்து மெதுவடைந்த புதிய கட்டளைகள் மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களினால் உந்தப்பட்டது. உற்பத்தி மற்றும் கொள்வனவுகள் இருப்பு துணைச்சுட்டெண்களும் ஒத்தோபர் மாதத்தில் ஒரு குறைந்த வீதத்தில் விரிவடைந்திருந்தது. அதே வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் ஒரு உயர் வீதத்தில் நீட்சியடைந்ததுடன், இதற்கு வெளிநாட்டு வழங்குனர்களில் வேறு நாடுகளிலிருந்தான வழங்கல் கேள்விகளின் அதிகரிப்பு காரணமாக அவர்களுடைய வழங்கல் நேரம் நீட்சியடைந்தமையே காரணமாக அமைந்தது.