தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட பருவகால சரிவடைதலை தொடர்ந்து மே மாதத்தில் மீட்சியடைந்து ஏப்பிறல் மாதத்திலிருந்து 15.1 சுட்டெண் புள்ளிகள் அதிகரித்து 60.6 சுட்டெண் புள்ளிகளை மே மாதத்தில் பதிவு செய்தது. கொ.மு.சுட்டெண்ணில் ஏற்பட்ட மீட்சிக்கு பிரதானமாக மாதகாலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட புதிய கடட் ளைகள் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாக ஏப்பிறல் மாதத்தில் பூர்த்திசெய்யப்படாத கடட்ளைகள் என்பவற்றை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி அதிகரித்திருந்ததுடன், இதற்கு விசேடமாக புடவைகள், அணியும் ஆடை, தோல் மற்றும் அதனுடன் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலான குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பெரிதளவில் பங்களித்திருந்தது. புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு மற்றும் தொழில்நிலை துணைச்சுட்டெண்களும் மாதகாலப்பகுதியில் அதிகரித்திருந்தன. இருப்பினும், புடவைகள், அணியும் ஆடை, தோல் மற்றும் அதனுடன் சார்ந்த பொருட்களின் உற்பத்தியின் தொழில்நிலை துணைச்சுட்டெண் பாதகமான பகுதியிலேயே தொடர்ந்தும் காணப்படுகிறது. இவ்வேளையில், நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண் மாதத்தின் இறுதிப்பகுதியில் காணப்பட்ட பாதகமான காலநிலை நிலைமைகள் காரணமாக சிறிதளவில் நீட்சியடைந்திருந்தது. ஒட்டுமொத்தமாக, கொ.மு.சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை மாதகாலப்பகுதியில் பதிவு செய்து தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை காட்டியது. இதற்குமேலாக, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான ஒரு சாதகமான நிலைமையினையே குறித்துக்காட்டியது.
பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஏப்பிறல் 2018இல் 53.2 சுட்டெண் புள்ளிகளிலிருந்து மே மாதத்தில் 56.9 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. பணிகள் துறையானது ஏப்பிறல் மாதத்தில் காணப்பட்ட அடக்கமான நடவடிக்கை நிலைமைகளை தொடர்ந்து மே மாதத்தில் ஒரு உறுதியான மேல்நோக்கிய திருப்பத்தினை உணர்ந்ததுடன், இதற்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் தொழில்நிலை என்பவற்றின் வேகமான வளர்ச்சியே பிரதானமாக பங்களித்திருந்தன. புதிய வியாபாரங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் என்பவற்றிலான எழுச்சி பிரதானமாக நிதியியல் பணிகள், தொலைத்தொடர்ப்பூட்டல் மற்றும் பொருட்கள் போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் துறைகளில் அவதானிக்கப்பட்டது. பணிகள் விநியோக மூலங்களிலான விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான விரிவாக்கம் என்பன பதிலிறுப்பாளர்களினால் இந்த வளர்ச்சிக்கு பங்களிக்கும் காரணிகளாக குறிப்பிடப்பட்டிருந்தன. பணிகள் துறையில் தொழில்நிலை முன்னைய மாதத்தின் குறைவடைதலுடன் எதிர்மாறாக மே மாதத்தில் அதிகரித்த வேகத்திலான ஆட்சேர்ப்பின் காரணமாக மீட்சியடைந்திருந்தது. இவ்வேளையில், நிலுவையிலுள்ள பணிகள் மே 2018 இல் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்திருந்த வேளையில் பணிகள் வழங்குனர்களின் மூன்று மாதங்களுக்கான வியாபார தோற்றப்பாடு மீதான நம்பிக்கையும; மெதுவான வீதத்தில் உறுதியடைந்திருந்தது. போக்குவரத்து கடட் ணங்கள் மீதான அதிகரித்திருந்த திருத்தங்கள் மற்றும் வரி முறையிலான புதிய திருத்தங்கள் காரணமாக பணிகள் வழங்குனர்களினால் விதிக்கப்பட்ட விலைகள் அதிகரித்திருந்தது. பணிகள் துறையில் எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் செலவுகள் 2018இற்கான எதிர்பார்க்கப்பட்டிருந்த ஊதிய அதிகரிப்புகள் காரணமாக அதிகரித்திருந்தது.